Dec 25, 2010
நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை...
Dec 23, 2010
விண்டோஸ் 7 மாறப் போறீங்களா.....
Dec 22, 2010
ஓபன் ஐடி : எல்லா பாஸ்வோர்டுகளுக்கும் தல...
தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.
அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.
விடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.
Dec 21, 2010
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்....
கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது.http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம். கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது அன்புடன் உங்கள் மாறன்... www. maran.co.nr |
Dec 20, 2010
கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்.....
நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator)என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.http://www.montpellier-informatique.com/predator/en/index.php?n=Main.DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான். இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும். கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.. அன்புடன் உங்கள் மாறன்... www.maran.co.nr |
Dec 13, 2010
புளூடூத் என்ற பெயர் யார் தந்தது...
Nov 26, 2010
அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....
Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது –– என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.
இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லாக்கர் (Unlocker) என்னும் புரோகிராம். இதனை http://ccollomb. free.fr/unlocker/#download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
இந்த பைலை இலவசமாக இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லாக்கர் புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.
அன்லாக்கர் போல இணையத்தில், அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் மற்றவற்றில் கிடைக்காத பல வசதிகளை அன்லாக்கர் கொண்டுள்ளது.
அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம். அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு வசதி குறைவாகவே உள்ளது. மற்ற புரோகிராம்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசஸ் எக்ஸ்புளோரர் (Process Explorer): இதனைப் பெற http://www.sysinternals. com/ntw2k/freeware/p rocexp.shtml என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2.பைல் அசாசின் (File Assassin): தளம் – http://www.malwareb ytes.org/fileassassin.php
3.ஹூ லாக் மி (Who Lock Me) -: தளம் http://www.dr-hoiby.com/WhoLockMe/ind ex.php
அன்புடன்
Nov 12, 2010
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவின் அரசியல்வாதியானால்...
பிரதமர் பதவி தான் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. கிங்மேக்கர் பொசிசனும் நிலையில்லை. இந்த வேஷம் வேணாம்.
அடுத்த எலக்சன்ல தாடிக்கார அண்ணாச்சியை அனுப்பிவிட்டு பிரதமர் பதவியை பிடிச்சிடனும். இது இழவு காத்த கிளி கதை போல போனாலும் போய்டும். ஸோ இந்த வேசமும் வேணாம்.
அய்யயோ இந்த வேஷம் போட்டவுடன் டெக்னிகல் விசயமாவே தோணுதே. வேணாம்பா இந்த வேஷம்.
இது ரொம்ப டேஞ்சரான வேஷம். வேணாம்டா இந்த வேஷம்.
அய்யயோ அமெரிக்க கஜானா முழுசும் கூட பத்தாதே ஒட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுக்க. இந்த வேஷம் போட்டா அமெரிக்க கஜானா அதோ கதி தான். இந்த வேஷம் அறவே வேணாம்.
இந்தியாவில் நடந்த இரயிவே விபத்துக்கு சீனாவின் கம்யூனிஸ்ட்டுகளும் வட கொரியாவின் கம்யூனிஸ்ட்டுகளும் தான் காரணம். அவர்களின் மீது பிரதமர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஐயையோ சம்பந்தம் சமபந்தமில்லாமல் பேசுறேனே. வேணாம்பா இந்த வேஷம்.
எப்படியாச்சும் மிச்சேலை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக்கிடனும். ஹிலாரி வேற பயமுறுத்திகிட்டு இருக்கு. மிச்சேல் தான் ஹிலாரிக்கு சரியான போட்டியா இருக்க முடியும். ஐ இந்த வேஷம் நமக்கு கொஞ்சம் நல்லா இருக்கே.
அமெரிக்காவுல இருக்குற எல்லா பூங்காவுலையும் எனக்கு நானே சிலை வைக்கணும் போல தோணுதே. வேண்டாம்பா இந்த விவகாரமான வேஷம்.
ஏதாச்சும் கலவரத்தை தூண்டி விடனும் போல இருக்கே. பேசாமல் அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம். மற்றவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் போல் தான் நடக்கணும் என்று அறிக்கை கொடுத்திடலாமா? நைட் ஆச்சுனா பாட்டிலை வேற தேடனும் போல இருக்கே. ஏதோ நம்மை மாதிரி கொஞ்சமாச்சும் டெரர் பீலிங் உள்ள ஆள் இவர் தான் போல. இருந்தாலும் இந்த வேசமும் வேணாம். இது என்னுடையது அல்ல.இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனுப்பிய சகோதரர் அவர்களுக்கு நன்றி...
Nov 4, 2010
நேயர்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்......
மற்றும்
சன் பிக்சர்ஸ்
Nov 3, 2010
நானா மெயில் அனுப்பினேன் ?...
திடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், மால்வேர் புரோகிராம் செக் செய்திடச் சொல்வார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் என்ன நடக்கிறது? என்று நீங்கள் விழிப்பீர்கள். ஏனென்றால், நண்பர்கள் குறிப்பிடும் அந்த மெயில் எல்லாம், உறுதியாக நீங்கள் அனுப்பவில்லை என்று தெரியும். ஏன் அது உங்கள் கம்ப்யூட்டரால் கூட அனுப்பப்பட்டிருக்காது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஒருவரின் கம்ப்யூட்டர் ஸ்பேம் மெயில் அல்லது வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டு, அது உங்கள் இமெயில் அக்கவுண்ட் மூலமாக இந்த ஸ்பேம் மெயில்களை, அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கு இதனை அனுப்பி இருக்கலாம். அல்லது நீங்கள் அறியாத ஒரு நபர், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினையே ஹைஜாக் செய்திருக்கலாம். இதற்கான தீர்வு என்ன? முதலில் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை நீங்கள் அணுகித் திறந்து பார்க்க முடிகிறது என்றால், அதன் பாஸ்வேர்டை உடனே இன்னும் கடுமையான பாஸ்வேர்டாக மாற்றவும். உங்களால் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை, வழக்கமான பாஸ்வேர்ட் பயன்படுத்தித் திறக்க முடியவில்லை என்றால், உங்கள் இமெயில் அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். யாரோ ஒருவர், உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டினை மாற்றி, இது போல ஸ்பேம் மெயில்களுக்கெனப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு சிலர், இது போல இமெயில் ஹைஜாக் செய்த பின்னர், அதன் இமெயிலுக்கு உரியவர் பெயரில், அவரின் உற்ற நண்பருக்கு, தான் டில்லி வந்து மாட்டிக் கொண்டதாகவும், பணம் தேவை எனக்கூறி ஏதேனும் ஒரு அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப வேண்டிக் கொள்வார். இதில் அனைத்துமே ஏமாற்று வேலையாக இருக்கும். இது போல இமெயில்கள் ஹைஜாக் செய்யப்படுகையில், உடனே உங்களுக்கு இமெயில் சேவையினை வழங்குபவரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக உங்கள் அக்கவுண்ட்டினை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்ளவும்.
இலவசமாக இமெயில் தரும் பிரபல நிறுவனங்கள் எனில், அவர்கள் தளத்தில் இதற்கான வழி தரப்பட்டிருக்கும். சில பிரபல இமெயில் அக்கவுண்ட்டில் இது போல ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜிமெயில் – http://mail.google.com/support/bin/ answer.py?hl=en&answer=50270
யாஹூ: http://help.yahoo.com/l/us/yahoo/ abuse/issues/issues-713223.html
ஹாட்மெயில்: http://windowslivehelp.com/ solution.aspx?solutionid=1fe6ed3e-eef6-4c57-933f-f3c408f1c5c1
ஆனால், பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட்டில் நுழைய முடியும் என்றால், அந்த அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்படவில்லை; ஆனால் உங்களுடைய பாஸ்வேர்டினைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று பொருள். உடனே மேலே குறிப்பிட்டபடி, பாஸ்வேர்டினை மாற்றவும்.
கூகுள் தரும் உடனடித் தீர்வு
தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன. நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன. கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக streaming search என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம். அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது. பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம். புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.
இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.
ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, "Exchange rates dollar to INR" என டைப் செய்திட முடிவெடுத்து, Ex என டைப் செய்தவுடனேயே, Expedia என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் "Exch" என டைப் செய்தவுடன் கூகுள் அது "Exchange rates" என உணர்ந்து அவை சார்பான தன் கால்குலேட்டர் தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது. பின் தொடர்ந்து "Exchange rates d" எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம். அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது. சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம். வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும். கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு 350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.
இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும் என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம். அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.
மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.
கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை. விரைவில் கிடைக்கலாம். அதுவரை http://www.google.com/webhp?sclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.
இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.