Nov 26, 2010

அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....



சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.

Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது –– என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு  வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.
இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லாக்கர் (Unlocker) என்னும் புரோகிராம். இதனை http://ccollomb. free.fr/unlocker/#download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
இந்த பைலை இலவசமாக  இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லாக்கர்  புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock  என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.
அன்லாக்கர் போல இணையத்தில், அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் மற்றவற்றில் கிடைக்காத பல வசதிகளை அன்லாக்கர் கொண்டுள்ளது.
அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம்.  அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு வசதி குறைவாகவே உள்ளது. மற்ற புரோகிராம்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசஸ் எக்ஸ்புளோரர் (Process Explorer):   இதனைப் பெற http://www.sysinternals. com/ntw2k/freeware/p rocexp.shtml என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2.பைல் அசாசின் (File Assassin):  தளம் – http://www.malwareb ytes.org/fileassassin.php 
3.ஹூ லாக் மி (Who Lock Me) -: தளம்  http://www.dr-hoiby.com/WhoLockMe/ind ex.php



அன்புடன்
உங்கள்
மாறன்....

Nov 12, 2010

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவின் அரசியல்வாதியானால்...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவின் அரசியல்வாதியானால் எவ்வாறிருக்கும் என்பதை புகைப்படக் கலைஞர் ஒருவர் / குழு குசும்புத்தனத்தோடு உருவாக்கியிருக்கிறது. அது உங்களின் பார்வைக்கு.ஆங்காங்கே பாமாவின் மைன்ட் வாய்ஸ் இருக்கும்.

ஒபாமா சோனியா காந்தியானால்:


பிரதமர் பதவி தான் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. கிங்மேக்கர் பொசிசனும் நிலையில்லை. இந்த வேஷம் வேணாம்.

ஒபாமா ராகுல் காந்தியானால்:

அடுத்த எலக்சன்ல தாடிக்கார அண்ணாச்சியை அனுப்பிவிட்டு பிரதமர் பதவியை பிடிச்சிடனும். இது இழவு காத்த கிளி கதை போல போனாலும் போய்டும். ஸோ இந்த வேசமும் வேணாம்.

ஒபாமா அப்துல் கலாமானால்:

அய்யயோ இந்த வேஷம் போட்டவுடன் டெக்னிகல் விசயமாவே தோணுதே. வேணாம்பா இந்த வேஷம்.

ஒபாமா மன்மோகன் சிங்கானால்:

இது ரொம்ப டேஞ்சரான வேஷம். வேணாம்டா இந்த வேஷம்.

ஒபாமா கருனாநிதியானால்:

அய்யயோ அமெரிக்க கஜானா முழுசும் கூட பத்தாதே ஒட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுக்க. இந்த வேஷம் போட்டா அமெரிக்க கஜானா அதோ கதி தான். இந்த வேஷம் அறவே வேணாம்.

ஒபாமா மம்தா பானர்ஜியானால்:

இந்தியாவில் நடந்த இரயிவே விபத்துக்கு சீனாவின் கம்யூனிஸ்ட்டுகளும் வட கொரியாவின் கம்யூனிஸ்ட்டுகளும் தான் காரணம். அவர்களின் மீது பிரதமர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஐயையோ சம்பந்தம் சமபந்தமில்லாமல் பேசுறேனே. வேணாம்பா இந்த வேஷம்.

ஒபாமா லாலு பிரசாத்தானால்:

எப்படியாச்சும் மிச்சேலை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக்கிடனும். ஹிலாரி வேற பயமுறுத்திகிட்டு இருக்கு. மிச்சேல் தான் ஹிலாரிக்கு சரியான போட்டியா இருக்க முடியும். ஐ இந்த வேஷம் நமக்கு கொஞ்சம் நல்லா இருக்கே.

ஒபாமா மாயாவதியானால்:

அமெரிக்காவுல இருக்குற எல்லா பூங்காவுலையும் எனக்கு நானே சிலை வைக்கணும் போல தோணுதே. வேண்டாம்பா இந்த விவகாரமான வேஷம்.

ஒபாமா பால் தாக்கரேயானால்:

ஏதாச்சும் கலவரத்தை தூண்டி விடனும் போல இருக்கே. பேசாமல் அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம். மற்றவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் போல் தான் நடக்கணும் என்று அறிக்கை கொடுத்திடலாமா? நைட் ஆச்சுனா பாட்டிலை வேற தேடனும் போல இருக்கே. ஏதோ நம்மை மாதிரி கொஞ்சமாச்சும் டெரர் பீலிங் உள்ள ஆள் இவர் தான் போல. இருந்தாலும் இந்த வேசமும் வேணாம். இது என்னுடையது அல்ல.இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனுப்பிய சகோதரர் அவர்களுக்கு நன்றி...

அன்புடன்
உங்கள்
மாறன்....

Nov 4, 2010

நேயர்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்......


ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் பாத்து நேரத்தை சாகடிக்கிறது நம்ம சமூக வழக்கம் ...
அப்படி இந்த வருஷம் சிறப்பா என்ன நிகழ்ச்சிகள் இருக்குன்னு ஒரு குறும்பு பார்வை....

காலை 6 மணிக்கு சுவாமி சித்தியானந்தரின் அருளுரை...

காமிராவில் சிக்காமல் பூஜை செய்வது எப்படி ?
 யாகத்தில் மண்ணெண்ணெய் மகத்துவம் ....
ஆயில் மசாஜின் பயன்கள்...
எதுவுமே செயாததுபோல் முகத்தை வைத்துக்கொள்வது எப்படி ? மற்றும் 
கட்டிபிடி வைத்தியம் பற்றி செயல் விளக்கங்களுடன் விளக்கவிருக்கிறார்...
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்... 
carlzeiss Zoom Lenses,
Nokia Z series with 12 Mega Pixel Camera
Sony HD Handy cam
Canon
மற்றும்
சன் பிக்சர்ஸ்
















காலை 7 மணிக்கு 
தமிழக முதல்வர் தீப ஒளி திரு நாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்..

விளம்பர தாரர்கள்...
கெஞ்சி கேட்டும் யாரும் வரவில்லை...
எனவே இடைவேளை இல்லாமல் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்...சேனலை மாற்றாமல் பார்பவர்களுக்கு முதல்வர் வசனம் எழுதிய உளியின் ஓசை என்ற மாபெரும் வெற்றித்திரைபடம் பரிசாக வழங்கப்படும்...











காலை  8 மணிக்கு 

சிறந்த தேடியந்திரம் கூகிளா(Google)  இல்லை (Bing) பிங்கா?
என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டி மன்றம்..


பாப்பையா : நம்ம ஆளுங்களும் சலிக்காம தேடுராய்ங்கள்ள ..

ராசா : எதுல தேடுனாலும் ஒரே படம் தானைய்யா வருது...
நம்ம ஆளுங்களும் நமிதாவ தேட தான் கூகிள் பயன்படுதுரங்க...இதுக்கு முன்னாடி பேசின பாரதி பாஸ்கர் என்னமோ கூகிள தான் உலகத்தையே இயக்குதுன்னு பேசிட்டு போனாங்க ...அவங்களுக்கு தெரிஞ்சுது அவளவு தான்..

இவ்வளவு ஏன்யா ஒரே பிரவுசர்ல எத்தன நாளையா தேடுறது...ஒரே மூஞ்சிய எவ்வளவு நாளாய்யா பாக்குறது ? கூகிள் மனைவினா பிங் மச்சினி ய்யா...

பாப்பையா :  தேடித்தான் பாருங்களேன் ய்யா ...
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்..
Android mobile Apllns
Yahoo Bing
google Labs

காலை  9 மணிக்கு 
புத்தம் புதிய இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு இசை வெளியீடே காணாத புத்தம் புதிய திரை இசை பாடல்கள் உங்கள் பார்வைக்கு..

நிகழ்ச்சியை வழங்குபவர்கள்... 

Tamilo.com


காலை 10 மணிக்கு 

திரைக்கு வந்து டைட்டில் கார்ட் வரை கூட ஓடாத புத்தம் புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படம் 

பெண் சிங்கம்...
மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரபடத்தை பார்த்து வசனம் எழுதியது யார் என்ற கடினமான கேள்விக்கு விடை அளித்தால் இதே படத்தின் BluRay Disc வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் .


நிகழ்ச்சியை வழங்குபவர்கள்... 
Zandu bam
Move
Anacin 
Colderin
Cipla Labs
vicks
uthagai thailam
&
nattu marunthu

மாலை 7 மணிக்கு 
நீயா நானா சிறப்பு தீபாவளி விவாதத்தில் 
மொக்கையாக பதிவிடுபவர்கள் ஆண்களே என்ற அணியில் பெண்களும் ...
இல்லை பெண்களே என்று பேச அப்பாவி ஆண்களும் வந்திருக்காங்க...

ஆன்லைன் டேட்ஸ் வழங்கும் நீயா நானா ஒரு மிக பெரிய விளம்பர இடைவேளைக்கு பிறகு அடுத்த தீபாவளியில் தொடரும்......

நிகழ்ச்சியை வழங்குபவர்கள்... 

Online Dates website 
orkut
Facebook
Hi5
Blogger.com
Tamilveli.com

மாலை 8 மணிக்கு 

நானா காமெடி போலிசா இல்லவே இல்லை என பதறுகிறார் 

காவல் காரன் திரைபடத்தின் கதாநாயகன் ...

இளைய தளபதி ....

நான் விளம்பரங்களுக்கு வந்தது ஏன் ?
ஏன் என்னைய வெச்சே காமெடி பன்னுராய்ங்க...
நான் காமெடி பீஸ் ஆனது எப்படி மற்றும் 
இவைரைபற்றிய நகைச்சுவை SMS களுக்கு சளைக்காமல் பதிலடி கொடுக்கிறார்...சூடான இந்த பேட்டியைகாண தவறாதீர்கள்..




நிகழ்ச்சியை வழங்குபவர்கள்... 
Joy Alukkas Jwellery
Coca cola,
Kaval karan The Comedy Movie
Lotus DVD 
Youtube 
மற்றும்



நேயர்களே விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில் நிகழ்ச்சிகளை பாருங்கள்...தீபாவளியை எங்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..

இது என்னுடையது அல்ல. நன்றி தமிழன்-கோபி.



அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உங்கள்
மாறன்...

Nov 3, 2010

நானா மெயில் அனுப்பினேன் ?...

திடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், மால்வேர் புரோகிராம் செக் செய்திடச் சொல்வார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் என்ன நடக்கிறது? என்று நீங்கள் விழிப்பீர்கள். ஏனென்றால், நண்பர்கள் குறிப்பிடும் அந்த மெயில் எல்லாம், உறுதியாக நீங்கள் அனுப்பவில்லை என்று தெரியும். ஏன் அது உங்கள்  கம்ப்யூட்டரால் கூட அனுப்பப்பட்டிருக்காது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஒருவரின்  கம்ப்யூட்டர் ஸ்பேம் மெயில் அல்லது வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டு, அது  உங்கள் இமெயில் அக்கவுண்ட் மூலமாக இந்த ஸ்பேம் மெயில்களை, அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கு இதனை அனுப்பி இருக்கலாம். அல்லது நீங்கள் அறியாத ஒரு நபர், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினையே ஹைஜாக் செய்திருக்கலாம்.  இதற்கான தீர்வு என்ன? முதலில் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை நீங்கள் அணுகித் திறந்து பார்க்க முடிகிறது என்றால், அதன் பாஸ்வேர்டை உடனே இன்னும் கடுமையான பாஸ்வேர்டாக மாற்றவும்.  உங்களால் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை, வழக்கமான பாஸ்வேர்ட் பயன்படுத்தித் திறக்க முடியவில்லை என்றால், உங்கள் இமெயில் அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது  என்று பொருள். யாரோ ஒருவர், உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டினை மாற்றி, இது போல ஸ்பேம் மெயில்களுக்கெனப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு சிலர், இது போல இமெயில் ஹைஜாக் செய்த பின்னர், அதன் இமெயிலுக்கு உரியவர் பெயரில், அவரின் உற்ற நண்பருக்கு, தான் டில்லி வந்து மாட்டிக் கொண்டதாகவும், பணம் தேவை எனக்கூறி ஏதேனும் ஒரு அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப வேண்டிக் கொள்வார். இதில் அனைத்துமே ஏமாற்று வேலையாக இருக்கும்.  இது போல இமெயில்கள் ஹைஜாக் செய்யப்படுகையில், உடனே உங்களுக்கு இமெயில் சேவையினை வழங்குபவரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக உங்கள் அக்கவுண்ட்டினை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்ளவும்.

இலவசமாக இமெயில் தரும் பிரபல நிறுவனங்கள் எனில், அவர்கள் தளத்தில் இதற்கான வழி தரப்பட்டிருக்கும். சில பிரபல இமெயில் அக்கவுண்ட்டில் இது போல ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜிமெயில் – http://mail.google.com/support/bin/ answer.py?hl=en&answer=50270 
யாஹூ: http://help.yahoo.com/l/us/yahoo/ abuse/issues/issues-713223.html
ஹாட்மெயில்:  http://windowslivehelp.com/ solution.aspx?solutionid=1fe6ed3e-eef6-4c57-933f-f3c408f1c5c1
ஆனால், பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட்டில் நுழைய முடியும் என்றால், அந்த அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்படவில்லை; ஆனால் உங்களுடைய பாஸ்வேர்டினைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று பொருள். உடனே மேலே குறிப்பிட்டபடி, பாஸ்வேர்டினை மாற்றவும்.

அன்புடன்
உங்கள்
மாறன்....

கூகுள் தரும் உடனடித் தீர்வு



தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற  தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன.  நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன.  கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக  streaming search  என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம்.  அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது.  பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம். புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற  எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.
இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.
ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, "Exchange rates dollar to INR" என டைப் செய்திட முடிவெடுத்து,  Ex   என டைப் செய்தவுடனேயே, Expedia  என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் "Exch" என டைப் செய்தவுடன் கூகுள் அது "Exchange rates" என உணர்ந்து  அவை சார்பான   தன்   கால்குலேட்டர்  தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது. பின் தொடர்ந்து  "Exchange rates d" எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம். அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது.  சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம்.  வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும். கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு  350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.
இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும்  என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ  என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம். அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.
மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.
கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.  மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை. விரைவில் கிடைக்கலாம். அதுவரை http://www.google.com/webhp?sclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch   இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.
இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.
அன்புடன்
உங்கள்
மாறன்...

Nov 2, 2010

மெமரி சோதனை அப்ளிகேஷன்...



கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க  அதிகமான  அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று  தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் மெமரியில் ஏற்றி வைத்து,   கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மிகவும் மந்த நிலையில் இயங்க வைப்போம். மெமரி பயன்பாடு நமக்குத் தொடர்ந்து காட்டப்பட்டால், அதற்கேற்ப புரோகிராம்களின் இயக்கத்தினை நிறுத்தித் தேவைப்பட்ட புரோகிராம்களை மட்டும் இயக்கலாம்.  இதற்கான சில மெமரி கண்காணித்துக் காட்டும் புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு  காணலாம்.

1.Mem Info: மெம் இன்போ எனப்படும் இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, மெமரி மற்றும் சிபியு பயன்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. மெமரி பயன்பாட்டினை வண்ணக் குறியீட்டில்  காட்டுகிறது. மெமரியைப் பயன்படுத்துவது சற்று அதிகமாகும் போது நம்மை எச்சரிக்கிறது.  எந்த அளவில் எச்சரிக்கை செய்திட வேண்டும் என்பதனையும் இதில் செட் செய்துவிடலாம். மெமரியை டிபிராக் செய்திடும் வசதியும் இதில் உண்டு. சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்படுகிறது. அண்மையில் வெளி வந்த இதன் பதிப்பு, வண்ணக் குறியீடுகளுடன் நமக்கு தகவல்களைக் காட்டுகிறது. இதனைப் பெற http://www.carthagosoft.net/meminfo.htm என்ற தளத்திற்குச் செல்லவும்.

2.Performance Monitor: இந்த புரோகிராம், மெமரி பயன்பாட்டினைச் சோதனையிடுவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் சோதனையிடுகிறது.  இதுவும் சிஸ்டம் ட்ரேயில் இருந்து செயல்படுகிறது. ராம் மெமரி, டிஸ்க் பயன்பாடு மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டினை, திரையின் மேல் புறத்தில் காட்டுகிறது. இந்த புரோகிராமினை   www.hexagora.com/en_dw _davperf.asp என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

3.FreeRAM XP Pro: இந்த புரோகிராம் கூடுதல் வசதிகள் பல கொண்டதாக இயங்குகிறது. மெமரியினைக் கண்காணிப்பதுடன், மெமரியின் வேகத்தினை அதிகப்படுத்தவும் செய்கிறது. தானாகவே மெமரியில் உள்ள தேவையற்றவற்றை விலக்குகிறது. எந்த புரோகிராம்கள் மெமரியினைப் பயன்படுத்துகின்றன என்று காட்டுகிறது. என்ன நடக்கிறது என்று தகவல் தருகிறது. மெமரியினைச் சுருக்கிப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்துகிறது. இதனைப் பெற http://www.yourwaresolutions.com/ software.html#framxpro என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

அன்புடன்

உங்கள் 

மாறன்...

www.maran.co.nr

Nov 1, 2010

பி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்க...

அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.

சில பி.டி.எப். கோப்புகளை இணையத்திலேயே பார்க்க படிக்க வகை செய்யப்பட்டிருக்கும். இதில் சில பக்கங்களை அல்லது பத்திகளை காப்பி செய்திட முயற்சி செய்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகாது. ஏனென்றால், அதனை பி.டி.எப். ஆக வடிவமைத்தவர் காப்பி  செய்வதனைத் தடை செய்திடும் தளையை அமைத்திருப்பார்.  இதில் நம்மை மிக மிக கோபப்பட வைத்திடும் நிகழ்வாக, நாம் சில வேளைகளில் கட்டணம் செலுத்திப் பெற்ற பி.டி.எப்.கோப்புகளிலும் இந்த தளைகள் இருக்கும். ஒரு சில பி.டி.எப். கோப்புகள் பாஸ்வேர்ட் தடையுடன் வரும். இதனை நாம் எதுவுமே செய்திட முடியாது. லட்டு போல பி.டி.எப். பைல் கிடைத்தும், உடைத்துச் சாப்பிட இயலவில்லையே என்று கவலைப்படுவோம்; ஆதங்கப்படுவோம் மற்றும் ஆத்திரப்படுவோம். இந்த கவலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நமக்கு உதவிடும் இணையதளம் ஒன்று உள்ளது. இந்த தளம் பி.டி.எப். பைல் ஒன்றில் உள்ள நகலெடுக்கும், அச்செடுக்கும் தளைகளை நீக்கித் தருகிறது. அதே போல பாஸ்வேர்ட் தடை இருந்தால், அதனையும் உடைத்துத் தருகிறது.  இந்த தளத்தின் பெயர் http://www.freemypdf.com இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் நடுப்பக்கத்தில் மிக முக்கியமான பிரவுஸ் (Browse)  பட்டனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, தளைகள் மற்றும் தடைகள் கொண்ட பி.டி.எப். கோப்பினைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடவும். கோப்பின் அதிக பட்ச அளவு 7 எம்.பிக்குள் இருக்க வேண்டும். கோப்பு வெற்றிகரமாக மேலே அந்த தளத்திற்கு அனுப்பப் பட்டவுடன் Do It   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஒருசில நொடிகளில், தளைகளும் தடைகளும் நீக்கப்பட்ட பி.டி.எப்.கோப்பு உள்ள புதிய இணையப் பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் அந்த பைலுக்கான லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்து அந்த கோப்பினை இறக்கிப் பயன்படுத்தவும். இந்த சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதற்கு ஏதேனும் நன்கொடையாகக் கட்டணம் செலுத்தலாம்.  இவ்வாறு தளைகளை நீக்குதல், பூட்டப்பட்ட வீட்டின் பூட்டுகளை உடைத்துத் திருட்டுத்தனமாகச் செல்வதற்குச் சமமில்லையா என உங்கள் மனது கேட்கலாம். எனவே தான் இந்த சேவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு அல்ல என்று இந்த தளத்தில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது. உங்கள் அறிவுத் தேடல்களுக்கு மட்டுமே இந்த உதவியை நாடவேண்டும். வர்த்தக ரீதியாக லாபம் அடைய இதனைப் பயன்படுத்தக் கூடாது.


அன்புடன்
உங்கள்
மாறன்...

www.maran.co.nr
கருத்து சொன்னவர்கள் (Recently):