Aug 20, 2010

கீ போர்டு / மவுஸ் லாக்....

பல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது நின்று போகலாம்.

அலுவலகத்தில் முக்கியமான பைல் ஒன்றை இயக்குகையில் சிறிது தூரம் நடந்து சென்று போன் ஒன்றில் பேச வேண்டிய திருக்கும். அல்லது அடுத்த அறையில் முக்கியமான பைல் ஒன்றை எடுத்து வர வேண்டியதிருக்கும். அந்நேரத்தில்,அலுவலக சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் தெரிந்த ஒருவர், உங்கள் கீ போர்டின் மூலம், கம்ப்யூட்டரில் உள்ள பைலைத் திறக்கலாம்; அல்லது எடிட் செய்திடலாம். இதனைத் தடுக்க உங்கள் கம்ப்யூட்டரின் கீ போர்டை லாக் செய்திடலாம்.

நாம் பெரிய பைல் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அதற்கு 30 நிமிடங்கள் ஆகலாம். இதற்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, மானிட்டரைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. நகர்ந்தால், கீ போர்டை யாராவது கையாண்டு, டவுண்லோட் செய்வதனை, அவர்கள் அறியாமலேயே கெடுத்துவிடலாம். இங்கும் கீ போர்டினை லாக் செய்திடும் அவசியம் நமக்கு நேர்கிறது.

இந்த தேவைகளுக்கான தீர்வை கிட் கீ லாக் (Kidkey Lock) என்னும் புரோகிராம் தருகிறது. இது இணையத்தில் இலவசமாக 746 கேபி என்ற அளவில் கிடைக்கிறது.இதனைப் பெற http://kidkeylock.en.softonic.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

டவுண்லோட் செய்து பதிந்த பின்னர், இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. இதனை இயக்கி, நாம் எதனை எல்லாம் லாக் செய்திட வேண்டும் என விரும்புகிறோமோ அதற்கேற்ற வகையில் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். கீ போர்டு மட்டுமின்றி மவுஸ் இயக்கமும் பூட்டப்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்க இரண்டு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டும். ஒன்று இதனை செட் செய்திட; மற்றொன்று இதனை இயக்கிட. இயக்கத்தை நிறுத்தும் பாஸ்வேர்டினை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாமும் கீ போர்டினை இயக்க முடியாது. அந்நேரத்தில் மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குவதே தீர்வாக முடியும்.



அன்புடன்
உங்கள்
மாறன்...

Aug 13, 2010

ஐ.பி.முகவரிக்குத் தட்டுப்பாடு.....

சென்ற 1980 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் முகவரிகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகவரிகள், ஒரு பொதுவான கட்டமைப்பில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

இந்த கட்டமைப்புIpv4 (Internet Protocol version 4) என அழைக்கப்பட்டு வந்தது. இவற்றை வரையறை செய்து, பெயர் வழங்கும் பணியை, பன்னாட்டு அமைப்பான ICANNமேற்பார்வையிட்டு வருகிறது. 

பெயர் வழங்குவதற்கான இந்த Ipv4 கட்டமைப்பு சில நூறு கோடிகள் முகவரியினை அமைக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில மாதங்களில் இதனால் வழங்க முடியாத அளவிற்குத் தேவைப்படும் ஐ.பி. முகவரிகள் எண்ணிக்கை உயரும். 

சாத்தியப்படக் கூடிய எண்ணிக்கையில், இன்னும் 4% அல்லது 5% தான் மீதம் உள்ளது. கம்ப்யூட்டர்கள் மட்டுமின்றி, தற்போது, டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், வீடியோ கேம் சாதனங்கள் நேரடியாக இன்டர்நெட்டில் இணைக்கப்படுவதால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐ.பி. முகவரி தரப்பட வேண்டியுள்ளது. மேலும் எப்போதும் இன்டர்நெட்டில் இணைந்திருக்கும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக மொபைல் போன்களை இங்கு குறிப்பிடலாம். புஷ் மெயில் போன்ற வசதிகள் பெற இவையும் தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றன. இவற்றிற்கும் நிரந்தர முகவரி தேவைப்படுகிறது. எப்போதும் இணைப்பில் இருக்கும் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே தான் இந்த தட்டுப்பாடு. 

தற்போதைக்கு இந்த தட்டுப்பாடு, ஓரளவிற்குச் சமாளிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர முகவரிக்குப் பதிலாகப் பல இடங்களில் தற்காலிக முகவரிகள் தரப்படுகின்றன. ஆனால் இது நிரந்தர தீர்வாகாது. 

இவற்றை எதிர்பார்த்தே, இன்டர்நெட் பொறியியல் வல்லுநர்கள், Ipv4 கட்டமைப்பிற்குப் பதிலாக, Ipv6 (Internet Protocol version 6)என்னும் கட்டமைப்பினைத் தற்போது உருவாக்கியுள்ளனர். இதன் தொடக்க உருவாக்கம் 1998 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இது 128 பிட்களில் அமைக்கப்படுவதால், ட்ரில்லியன் கணக்கில், ஐ.பி. முகவரிகளை அமைக்க முடியும். 

Ipv4 கட்டமைப்பு 32 பிட்களில் இயங்கக் கூடியது. எனவே 2 to the power of 32 என்ற கணக்கின்படி, 400 கோடி முகவரிகளே அமைக்க முடியும். தொடக்கக் காலத்தில் இது போதும் என்று திட்டமிடப்பட்டது. இன்டர்நெட் இந்த அளவிற்கு விரியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஆனால், சுதாரித்துக் கொண்ட இன்டர்நெட் வல்லுநர்கள், 1998 ஆம் ஆண்டு முதல் புதிய Ipv6 கட்டமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டமைப்பிலேயே, நெட்வொர்க் பாதுகாப்பிற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

புதிய கட்டமைப்பில், தகவல் தொகுப்பு என்று அழைக்கப்படுகின்ற இன்டர்நெட் பாக்கெட் பார்மட்டின் வடிவமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒரு தகவல் பாக்கெட்டினை, ஒரே நேரத்தில் பல ஐ.பி. முகவரிகளுக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தினை இதில் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த வகையில், ஒரு பாக்கெட் ஹெடர் மிக எளிதாக அமைந்திருக்கும். இது இன்டர்நெட் செயல்பாட்டின் வேகத்தினை இன்னும் அதிகமாக்கும். 

Ipv6  இயக்கம் 128 பிட் என்பதால், ஐ.பி. அட்ரஸ் அமைக்க, நிறைய ஸ்பேஸ் கிடைக்கிறது. ஸ்பேஸ் அதிகம் என்பதால், ஐ.பி. முகவரிகளைப் பலப்பல வகைகளில் அமைக்க முடியும். இதனைப் பயன்படுத்தி 2 to the power of 128 முகவரிகள் அமைக்க முடியும். இது ஏறத்தாழ 3.4×10 to the power of 36 முகவரிகள் ஆக இவை இருக்கும். 

மேலும் இதில் கூடுதல் பாதுகாப்பினையும், இயக்கத்தில் வேகத்தையும், எளிமையையும் வழங்க முடியும். இந்த நடைமுறை புழக்கத்தில் வருகையில், பழைய நடைமுறையும் சேர்ந்தே இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த கண்டுபிடிப்பிற்கும் தேவை தான் அடிப்படை என்று ஒரு பழமொழி உண்டு. அது இங்கு உண்மையாகி உள்ளது.

அன்புடன்
உங்கள்
மாறன்...


கருத்து சொன்னவர்கள் (Recently):