Jan 25, 2010

வெப்சைட் Block பண்ண புதிய வழி....



வீட்டில் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் இணையதளங்களை குழந்தகள் பார்க்கா வண்ணம் தடை செய்ய பல Parantal Control மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வகை மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதில்லை. மேலும் அவற்றை இலகுவாக ஏமாற்றி சில தளங்கள் வந்து விடுகின்றன. இதற்கு புதிய வழி ஒன்றை இந்த பதிவில் தந்துள்ளேன்.

www.opendns.com என்னும் தளம் இந்த வசதியை இலவசமாக தருகிறது.

இதில் ஒரு இலவச கணக்கை துவங்கவும்.







பின்னர் உங்கள் ஐ.பி -யை Add செய்யவும்.


இதற்கு ஒரு அடையாள பெயரை தரவும்.




Catagory wise Block பண்ண முடியும்.




பின்னர் உங்கள் Local Area Connection -ன் DNS-ல்

208.67.222.222
208.67.220.220 Add பண்ணவும். 




பின்னர் 3 நிமிடத்தில் உங்கள் DNS setup செயல்பட ஆரம்பிக்கும். பின்னர் Block List -ல் உள்ள தளங்கள் உங்களுக்கு செயல்படாது.



கணிணியில் Local Area Connection  -ல் DNS ஐ.பி சேர்ப்பதற்கு பதிலாக உங்கள் DSL Router -ம் பண்ண முடியும்.
மேலதிக தகவல்களுக்கு http://www.opendns.com/support/videos/  ஐ பார்க்கவும்.


அன்புடன்
உங்கள்
மாறன்....




இலவச மெயில் அலர்ட் உங்கள் மொபைலில்...

நான் உபயோகித்துக்கொண்டிருக்கும் ஒரு முறையை உங்களுக்கு எழுதுகிறேன். இதற்கு முதலில் நீங்கள் way2sms.com ல் இலவச கணக்கு ஒன்றை வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் உடனே துவங்குங்கள்.



பின்னர் அதில் உள்ள மெயில் ஆப்ஷனில் உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் ஒன்றை துவக்குங்கள்.


பின்னர் மெயில் அலர்ட் எந்த எண்ணுக்கு வர வேண்டும் என்பதனை பதிவு செய்யுங்கள். (வாரம் ஒருமுறை இதனை re-activate செய்ய வேண்டும்).

இனி உங்கள் மின்னஞ்சலை Forward செய்ய வேண்டும்,

நீங்கள் யாஹூ உபயோகித்தால்,

உங்கள் மெயிலில் options ஐ க்ளிக் செய்யவும்,
அதில் pop&forwarding ஐ க்ளிக் செய்யவும்,

அதில் E-Mail address என்னுமிடத்தில் உங்களின் way2sms.com ன் ஐ.டி யை கொடுத்து சேவ் செய்யவும்.

நீங்கள் ஜீ-மெயில் யூசராக இருந்தால்,


உங்கள் மெயிலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று forwarding& POP IMAP டேப்-ல் forward a copy of incoming mail என்னும் இடத்தில் உங்கள் way2sms.com -ன் ஐ.டியைக் கொடுத்து சேவ் செய்யவும்.
இனி அனைத்து மின்னஞ்சல்கள் பற்றிய அலர்ட்கள் உங்கள் மொபைலுக்கு வர ஆரம்பிக்கும்.

மறக்காம உங்கள் கருத்துக்களை அனுப்புங்க...

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jan 19, 2010

கோபத்தை குறைக்க சில வழிகள் !...

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.


அன்புடன்

உங்கள்

மாறன்....


கூகிள் மீதான தாக்குதல் : சீனாவின் பங்கு......



சீனாவிலிருந்து கூகிள் வெளியேறலாம் என்று ஏற்கனவே ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டும் வண்ணம் உள்ளன.

ஏதோ ஹேக்கர்கள் செய்த வேலைக்கா கூகிள் வெளியேறுகிறது? என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தெளிவாகி வருகிறது.  சீன அரசே இது போன்ற ஹேக்கிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி செய்திகள் வர துவங்கி உள்ளன. பல நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் களவாடப்பட்டு இருக்கலாமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே பரவ தொடங்கி இருக்கிறது.

கூகுளின் சேவையான ஜிமெயில் உபயோகித்த மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்று கூகிள் தெரிவித்து இருந்தது. இது பழைய செய்தி. இப்போது இந்த திருட்டு வேலையில் கூகிள் சீன அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உதவி இருக்கலாம் என்று Reuters செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறி விட்டது.  இந்த தாக்குதல்கள் பயனர்கள் கணினியில் மல்வேர்களை (malware) நிறுவி அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஜனவரி 13 -க்கு பிறகு, சீன கூகிள் அலுவலர்கள் கூகிள் இன்டெர்னல் நெட்வொர்க்குகளை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல சீன கூகிள் அலுவலர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், சிலர் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.


இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு உள்ளுக்குள் நடக்கும் அலுவலக நடவடிக்கைகள் பற்றி வெளியே கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறி உள்ளார்கள். அமெரிக்க அரசு புகுந்து சீனாவிடம் விளக்கம் கேட்கும் அளவிற்கு பிரச்சினை நடந்திருக்கிறது என்றால்,  என்னமோ நடந்திருக்கு! நடந்துகிட்டிருக்கு!! மர்மமா இருக்குது!!. கூகிள் இன்னும் சில தினங்களில் சீன அரசுடன் பேச போவதாக அறிவித்து உள்ளார்கள்.

இந்த கூகிள் மீதான தாக்குதலுக்கு 'ஆபரேசன் அரோரா' (Operation Aurora) என்று பெயரிட்டு உள்ளார்கள். மைக்ரோசாப்ட்டின் இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உள்ள பாதுகாப்பு ஓட்டையே இந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக Macafee இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இது தகவல்கள் திருடப்பட வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறி உள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசுகள் மக்களை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளன.

ஜிமெயில் போலவே யாஹூ உள்பட பல நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் இந்த தாக்குதலில் பாதிக்க பட்டிருக்கலாம். கூகிள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறுகிறது. இந்த தாக்குதலில் பல விசயங்களை வெளியிடாமல் கூகிள் மௌனம் காத்து வருவது உண்மை. அவை கூகுளுக்கும், அமெரிக்க அரசுக்குமே வெளிச்சம்.

நம்மூர் செய்திக்கு வருவோம். சீனா இந்திய கணினிகளை தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு செயலர் நாராயணன் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். தனது அலுவலகம், அரசு நிறுவன கணினிகள் டிசம்பர் 15 அன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறுகிறார். இது போன்று சைபர் தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல என்கிறார்.


PDF ஆவணம் ஒன்று டிராஜனுடன்(trojan) இணைத்து மின்னஞ்சல் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாக கூறுகிறார். இது சீனாவில் இருந்ததுதான் வந்தது என்றும், துல்லியமாக எந்த இடத்தில் இருந்து வந்தது என்று கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சீனா இந்திய ராணுவ கணினிகளை தாக்கி பல தகவல்களை திருடியது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கணினிகள் சீனாவிலிருந்து அதிக தாக்குதலுக்கு உள்ளாகின என்ற குற்றசாட்டும் ஏற்கனவே உண்டு.

அவ்வப்போது இது போன்று சீனா மீது சைபர் தாக்குதல் தொடர்பான புகார்கள் வந்திருந்தாலும், இந்த முறை கூகிள் எழுப்பி உள்ளதால் இது உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் சக்தியாகவே சீனா மாறி வருகிறது. உலக நாடுகள் இந்த விசயத்தில் ஒரு கண்டிப்பான முடிவை எடுத்து, இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இது.

இந்த புகார்களுக்கு சீனாவிடம் கேட்டால், "ஹேக்கிங் வேலை எந்த வடிவில் இருந்தாலும், சீனாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது." என்ற பதில் வருகிறது.

நல்ல பதில்!
நன்றி TVS50

அன்புடன்
உங்கள்
மாறன்....


Jan 15, 2010

Mail Tracking...

நீங்கள் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்னர், அந்த மின்னஞ்சலை பெறுபவர் எப்போது படிக்கிறார், எங்கிருந்து எத்தனை முறை படிக்கிறார் என்பதனை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த வசதியினை www.spypig.com என்னும் தளம் இலவசமாக தருகின்றது.

இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, சப்ஜெக்ட், எத்தனை முறை வரை track பண்ண வேண்டும் போன்ற தகவல்களி கொடுத்தவுடன் உங்களுக்கான படம் ஒன்று தரப்படும் அதனை copy செய்து உங்கள் மின்னஞ்சலில் ஒட்டி விடவும் (60 செகண்டுக்குள்). பின்னர் அந்த மின்னஞ்சலை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பிவிடலாம்.


மின்னஞ்சலை பிரித்து படித்தவுடன் உங்களுக்கு அவர் எங்கிருந்து படித்திருக்கிறார் என்ற தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.


இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்..

அன்புடன்
உங்கள்
மாறன்....

Jan 14, 2010

சீனாவிலிருந்து வெளியேறும் கூகுள்....

தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள்.

இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா.

இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளார்.

என்ன நடந்தது?

சீனாவின் பெரும் சந்தையைக் கலக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்குள் கால் வைத்தது கூகுள். ஆனால் அப்போதே கூகுளுக்கு சீனா தனது கட்டுப்பாடுகள், தணிக்கை விதி முறைகளைக் கூறிவிட்டது. இவற்றுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சீனாவில் இணையதளம் இயங்க முடியும் என்று கூறப்பட்டுவிட, அதை முழுமையாக ஒப்புக் கொண்டது கூகுளும்.

ஆனால் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சர்வாதிகாரத்துக்கு எதிரான இயக்கங்கள் கூகுளையே பிளாக் மற்றும் மின்னஞ்சல் சேவைக்குப் பயன்படுத்துகின்றன. கூகுள் சேவை மூலம் இந்த அமைப்புகள், தனக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பப்படுவதாக நம்புகிறது சீனா.

பெயரளவுக்கு மார்க்கெட் பொருளாதாரம் பேசினாலும், தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சி முறை சர்வாதிகாரத்தை நிலை நாட்டி வரும் சீனாவுக்கு இதில் மகா எரிச்சல்.

இந்த நிலையில்தான் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மற்றும் ப்ளாக்கர் சேவைகளை குறிவைத்துத் தாக்குதல் நடந்தது. ஆராய்ந்ததில் இதன் ஆரம்பமே சீனாதான் என்பது தெரிந்தது.

எனவே இனியும் சீன கட்டுப்பாடுகளுக்கு தலைவணங்குவது சரியாக வராது என்றும், சீனாவிலிருந்து வெளியேருகிறோம் என்றும் அறிவித்துள்ளது கூகுள். கூகுளைப் போன்ற சேவைய வழங்கும் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இந்த சைபர் தொல்லைக்கு ஆளாகியுள்ளதால் அவர்களும் கூகுள் வழியில் வெளியேறக்கூடும் என்பதால், அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது கூகுள்.

நன்றி
அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

Jan 13, 2010

பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்...

பென்டிரைவில் உபயோகிக்க பல இயங்குதளங்கள் (Operating Systems) வந்தாலும் அவை Windows Xp அளவுக்கு நன்றாக இருப்பதில்லை.Windows Xp ஐ பென்டிரைவில் இன்ஸ்டால் பண்ண முயற்சி செய்யும் போது (Hard disk இல்லாமல்)
(Hard disk Not Found) என்ற பிழைச்செய்தி கிடைத்தது. இதனை சரி செய்ய வேண்டுமெனில் நமது பென்டிரைவை Hard disk formatting Tool ஒன்றை உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நான் உபயோகித்த Tool, HP USB FW.


இதன் மூலம் Format செய்த பின்னர் பென்டிரைவில் இன்ஸ்டால் ஆகத்துவங்கியது.
Windows Xp அதற்கென 1.5 ஜிகா பைட்டுகளை எடுத்துக்கொள்ளும். எனவே உங்கள் பென்டிரைவ் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

அன்புடன்
உங்கள்
மாறன்....
www.maran.co.nr

Jan 7, 2010

சோமாலிய கடற்கொள்ளையர்கள் சொல்லும் உண்மை.....

சோமாலியா என்றதும் பசியும், பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் தான் யாருக்கும் ஞாபகம் வரும் இதுவரை. இப்போதோ கடற்கொள்ளையர்கள் எனும் சொல் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களையும், உலக நாடுகளையும் மிரட்டுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 95 கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் உக்ரேனிய ஆயுதக்கப்பல், சுவிஸ் நாட்டு அக்யுர், இத்தாலி நாட்டின் புரோகிரசோ, ஜப்பானின் எம்டி ஸ்டோல்ட் வாலர், சௌதி அரேபியாவின் சிரியஸ் ஸ்டார் இன்னும் ஹாங்காங், போர்ச்சுக்கல், பின்லாந்து போன்ற நாடுகளின் கப்பல்கள் உட்பட 35

கப்பல்களை கடத்தியிருக்கிறார்கள். இவற்றில் பிணையத்தொகை கொடுத்து மீட்டது போக இன்னும் 17கப்பல்களும், 339 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளனர். சௌதி அராம்கோவின் சியஸ் ஸ்டார் உலகிலேயே மிகப்பெரிய கப்பலாகும். இதில் 100மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயும் உள்ளது. இந்தக்கப்பலுக்கு மட்டும் 25மில்லியன் டாலர் பிணையத்தொகையாக அவர்கள் கேட்டுள்ளனர்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGyFevpAh24RSELmdyQ521p5BMS-g0zZ5F5NTGCy-XfglkULm5BWsKMy-FzOVWDbfgGIqXD6F87GRV9Kqx2qQwalJnkD8t-9z-17I3klV0JRUAOgcorDXr-46w6sJjXCKAKYLKKsqR-M_l/s400/show_image_NpAdvSinglePhoto.jpg

     கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் என்று உலகமே அலரத்தொடங்கிவிட்டது. போர்க்கப்பல்களை ஏடன் வளைகுடா பகுதிக்கு அனுப்புமாறு ஐநா சபை தன் உறுப்புநாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவும் தன்னுடைய ஐஎன்எஸ் தாபர் எனும் கப்பலை சுற்றுக்காவல் பணிக்காக அந்தப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உட்பட பல நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. கடற்கொள்ளையர்களை அழிக்க உலகம் முழுமூச்சுடன் இறங்கிவிட்டது.

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/10/somali-pirates1.jpg



     சூயஸ்கால்வாய் தோண்டப்படுவதற்கு முன்புவரை ஐரோப்பிய நாடுகள் இந்தியப்பெருங்கடல் நாடுகளுக்கு வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே வரவேண்டியதிருந்தது. சூயஸ்கால்வாய் தோண்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததும் செங்கடல் பகுதி கப்பல் போக்குவரத்து மிகுந்த‌ பகுதியானது. இந்தப்பகுதியில் மிக நீண்ட கடல்கரையை கொண்ட நாடு சோமாலியா. மீன்பிடிப்பிலும் அதனைச்சார்ந்த தொழில்களிலும் சிறந்து விளங்கவேண்டிய அளவிற்கு புவியியல் அமைப்பைக்கொண்ட நாடு சோமாலியா. ஆனால் உள்ளூர் மீனவர்கள் கூட மீன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். கார‌ண‌ம் ப‌ன்னாட்டு ப‌காசுர‌ மீன்பிடிக‌ப்ப‌ல்க‌ள் இய‌ந்திர‌ங்க‌ளுட‌னும் தேர்ந்த‌ தொழில்நுட்ப‌த்துட‌னும் இந்த‌ப்ப‌குதியையே ச‌ல்ல‌டை போட்டு அரித்துவிடுகின்ற‌ன‌. இதை த‌ட்டிக்கேட்ப‌த‌ற்கோ, மீன்பிடி தொழிலை ஊக்க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கோ நிலையான‌ அர‌ச‌மைப்பு எதுவும் சோமாலியாவில் இல்லை. அந்த‌ந்த‌ப்ப‌குதியில் ஆதிக்க‌ம் மிகுந்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் பாதுகாப்புக்கென‌ ஆயுத‌க்குழுக்க‌ளை ஏற்ப‌டுத்திக்கொண்டு, த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தை த‌க்க‌வைத்துக்கொள்வ‌த‌ற்காக‌ தொடர்ச்சியாக‌ குழு மோத‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தொடர்ச்சியான‌ இந்த‌ ச‌ண்டையில் விவ‌சாய‌மோ வேறு உற்ப‌த்திக‌ளோ இல்ல‌ம‌ல் போன‌து. நில‌த்திலுள்ள‌ க‌னிம‌ங்க‌ளோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளின் கைக‌ளில். அமெரிக்காவும் த‌ன் ப‌ங்குக்கு ம‌க்க‌ள் அல்காய்தாவை ஆத‌ரிப்ப‌தாக‌ கூறி (சோமாலிய‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் இஸ்லாமிய‌ர்க‌ள்) யுத்த‌க்குழுக்க‌ளுக்கு ஆயுத‌ம் வ‌ழ‌ங்கிய‌துட‌ன் எத்தியோப்பியாவையும் சோமாலிய‌ மீது ப‌டையெடுக்க‌த்தூண்டிய‌து. இவ்வாறு சின்னாபின்ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சோமாலிய‌ ம‌க்க‌ளில் ஒரு ப‌குதியின‌ர் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளாக‌ உருமாறினார்க‌ள்.

     ம‌னித‌ன் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட்டி அதில் ப‌ண்ட‌ மாற்ற‌ம் செய்ய‌த்தொட‌ங்கிய‌ கால‌ம் முத‌ல் க‌ப்ப‌ல்க‌ளை கொள்ளைய‌டிப்ப‌தும் க‌ட‌த்துவ‌தும் வ‌ர‌லாறு நெடுக‌ ந‌ட‌ந்துகொண்டுதானுள்ள‌து. க‌ரீபிய‌க்க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் அட்ட‌காச‌ம் பிர‌சித்தி பெற்ற‌து. சிங்க‌ப்பூர் ப‌ண‌க்கார‌ நாடாக‌ இருப்ப‌த‌ற்கு க‌ட‌ற்கொள்ளையில் பெற்ற‌ ப‌ண‌த்தை வ‌ர்த்த‌க‌த்தில் முத‌லீடு செய்த‌துதான் முத‌ன்மையான‌ கார‌ண‌ம். முன்னாள் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் வாரிசுக‌ள் இன்று அங்கே ம‌திப்புமிக்க‌ முத‌லாளிக‌ள். க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கி த‌ன் நாட்டில் அவ‌ர்க‌ளை முத‌லீடு செய்ய‌வைத்த‌து அமெரிக்கா. த‌ங்க‌ம் ஏற்றிவ‌ந்த‌ ஸ்பெயின் க‌ப்ப‌ல்க‌ளை கொள்ளைய‌டித்த‌ ஆங்கிலேய‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் ப‌ண‌ம் இங்கிலாந்துக்கு உத‌விய‌து(ந‌ன்றி: க‌லைய‌க‌ம்) இப்ப‌டி க‌ட‌ற்க‌ள்ளையால் ஆதாய‌ம‌டைந்த‌ நாடுக‌ள் சோமாலிய‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளை ஒழித்துக்க‌ட்ட‌ முழுமூச்சுட‌ன் கிள‌ம்பியிருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? க‌ட‌ற்கொள்ளையை த‌டுப்ப‌து தான் நோக்க‌மா? இல்லை அத‌ன் பின்னே வேறொரு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌ச்ச‌னை ஒன்று உள்ள‌து.

http://cache.daylife.com/imageserve/09jz9p6cFWc8h/610x.jpg


     இந்த‌ இட‌த்தில் ஒரு விள‌க்க‌ம் தேவைப்ப‌டுகிற‌து. சௌதி அரேபிய‌க்க‌ப்ப‌ல், ஜ‌ப்பானிய‌க்க‌ப்ப‌ல் என்றால் அந்த‌ந்த‌ நாட்டின் அர‌சுக்குச்சொந்த‌மான‌ க‌ப்ப‌ல்க‌ள் அல்ல‌. த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு சொந்த‌மான‌து தான். ஒருசில‌ பெருமுத‌லாளிக‌ளுக்கு சொந்த‌மான‌ க‌ப்ப‌ல்க‌ளையும் அதிலுள்ள‌ ச‌ர‌க்குக‌ளுகளையும் பாதுகாப்ப‌த‌ற்குத்தான் க‌ப்ப‌ற்ப‌டை அனுப்ப‌ப்ப‌டுகிற‌து. ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இய‌ங்கும் க‌ப்ப‌ற்ப‌டை, அடித்த‌ட்டு ம‌க்க‌ளை காப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ க‌ப்ப‌ற்ப‌டை முத‌லாளிக‌ளின் சொத்தை பாதுகாப்ப‌த‌ற்கு அனுப்ப‌ப்ப‌டுகிற‌து. எடுத்துக்காட்டாக‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்கள் சிங்கள் ராணுவத்தால் தின‌மும் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ள் க‌ட‌லில். அதை த‌டுப்ப‌த‌ற்கு வ‌ராத‌ இந்திய‌ போர்க்க‌ப்ப‌ல் சோமாலிய‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்களிட‌மிருந்து முத‌லாளிக‌ளின் சொத்தை பாதுகாப்ப‌த‌ற்கு விரைந்து சென்று சுற்றுக்காவ‌ல் ப‌ணியில் ஈடுப‌டுகிற‌து. மேலும் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ க‌ப்ப‌ல்க‌ளை விடுவிப்ப‌த‌ற்கு கொடுக்க‌ப்ப‌டும் பெருந்தொகையையும் அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் விலையை உய‌ர்த்துவ‌த‌ன் மூல‌ம் ஒன்றுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்காக‌ ம‌க்க‌ளிட‌மிருந்து வ‌சூலித்துக்கொள்ளும். பின் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் ஏறிய‌விலை ஏறிய‌து தான் இற‌ங்க‌ப்போவ‌தில்லை. என‌வே இந்த‌ க‌ட‌ற்கொள்ளையும் ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ளின் லாபத்திற்குத்தான் ப‌ய‌ன்ப‌ட‌ப்போகிற‌து.

     2004 டிச‌ம்ப‌ரில் ஏற்ப‌ட்ட‌ ஓங்க‌லை(சுனாமி) ஒரு மிக‌ப்பெரிய‌ உண்மையை உல‌கிற்கு எடுத்துக்காட்டிய‌து. அதுதான் சோமாலிய‌ க‌ட‌ற்கொள்ளைக‌ளை வேட்டையாட‌க்கிள‌ம்பிய‌தின் பின்னாலும் மறைந்திருக்கும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌‌ பிர‌ச்ச‌னை. ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ சோமாலிய‌க்க‌ட‌ற்ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளைத்தான் ஓங்க‌லை வெளிச்ச‌ம் போட்டுக்காட்டிய‌து. சோமாலிய‌க்க‌ட‌ற்ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌ட்டுவ‌ந்த‌ ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் ஓங்க‌லையால் க‌ட‌ற்க‌ரையில் குவிந்த‌ன‌. காரீய‌ம், காட்மிய‌ம் போன்ற‌ க‌ழிவுக‌ளும், யுரேனிய‌க்க‌திவீச்சுக்க‌ழிவுக‌ளும் ம‌ற்றும் ம‌ருத்துவ‌, ர‌சாய‌ன‌க்க‌ழிவுக‌ள் என‌ ப‌ல‌வ‌கை ந‌ச்சுக்க‌ழிவுக‌ளால் இன்ன‌தென்று தெரியாத‌ புதுப்புது வியாதிக‌ளுக்கும், புற்று நோய் போன்ற‌ கொடிய‌ நோய்க‌ளுக்கும் ஆளாகி மாண்டு வ‌ருகின்ற‌னர் மக்கள். ப‌ல்லாண்டு கால‌மாக‌ ஏட‌ன் குடாவில் கொட்ட‌ப்ப‌ட்டுவ‌ரும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை ஓங்க‌லை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌போதும் ஊட‌க‌ங்க‌ளில் இந்த‌ விச‌ய‌ம் க‌வ‌ன‌ம் பெற‌வில்லை. ப‌ட்டினிச்சாவுக‌ளின் முதுகுக்குப்பின்னே கொடிய‌ க‌ழிவுக‌ளால் ஏற்ப‌ட்ட‌ கோர‌ ம‌ர‌ண‌ங்க‌ளும் புதைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இப்போது க‌ப்ப‌ல்க‌ளுக்கு பெறும் ப‌ணைய‌த்தொகை மூல‌ம் சோமாலிய‌க்க‌ட‌ற்க‌ரையை சுத்த‌ப்ப‌டுத்த‌ப்போகிறோம் என‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ள் அறிவித்திருப்ப‌தால்தான் அது உல‌கின் க‌வ‌ன‌த்திற்கு வ‌ந்திருக்கிற‌து. ஏகாதிப‌த்திய‌ங்க‌ளின் இந்த‌ அயோக்கிய‌த்த‌ன‌த்தை ஓங்க‌லை அம்ப‌ல‌ப‌டுத்தி நான்காண்டுக‌ளாகியும் இதுப‌ற்றி எதுவும் கூறாம‌ல் ஊமையாய் இருந்த‌ ஐநா ச‌பை த‌ற்போது வேறுவ‌ழியில்லாம‌ல் ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் கொட்ட‌ப்ப‌டுவ‌தை ஒப்புக்கொண்டுள்ள‌து. இப்போதும் ஆட்கொல்லி ந‌ச்சுக்க‌ளை கொட்டி ம‌க்க‌ளை கொன்ற‌ ஏக‌திப‌த்திய‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் மீது எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌த்துணியாத‌ ஐநா ச‌பை க‌ட‌ற்கொள்ளையை ஒடுக்குவ‌த‌ற்கு அந்த‌ ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ளிட‌மே போர்க்க‌ப்ப‌ல்க‌ளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிற‌து.

     1992ல் உல‌க‌ நாடுக‌ளிடையே ஒரு உட‌ன்பாடு கையெழுத்தான‌து. பேச‌ல் என்று அழைக்க‌ப்ப‌டும் அந்த‌ உட‌ன்பாடு த‌குந்த‌ பாதுகாப்பு ஏற்ப‌டுக‌ள் இல்லாம‌ல் உல‌கின் எந்த‌ப்ப‌குதியிலும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் கொட்ட‌ப்ப‌டுவ‌தை த‌டுக்கிற‌து. இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட‌ யோக்கிய‌சிகாம‌ணி நாடுக‌ள்தான் யாருக்கும் தெரியாம‌ல் எந்த‌ பாதுகாப்பு ஏற்பாடுக‌ளும் இல்லாம‌ல் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை க‌ட‌லில் கொட்டிக் கொண்டிருந்திருக்கின்ற‌ன‌. அதே யோக்கிய‌சிகாம‌ணி நாடுக‌ள் தான் வெளிப்ப‌ட்டுவிட்ட‌ த‌ங்க‌ள் அயோக்கிய‌த்த‌ன‌த்தை ம‌றைப்ப‌த‌ற்கு க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளை த‌ண்டிக்க‌த்துடிக்கின்ற‌ன‌. ம‌னித‌ ம‌ர‌ண‌த்திலும் லாப‌ம் பெற‌த்துடிக்கும் இந்த‌ கொலைகார‌ நிறுவ‌ன‌ங்க‌ளால்தான் த‌ற்போது ந‌ச்சுக்க‌ழிவு ஏற்றும‌தி வியாபார‌ம் ச‌க்கைபோடு போடுகிற‌து. இத‌ற்காக‌த்தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ண‌க்கார‌ நாடுக‌ளிட‌மிருந்து க‌ழிவுக‌ளை இற‌க்கும‌தி செய்து ஏழை நாடுக‌ளின் விவ‌சாயிக‌ளை விலைபேசி அவ‌ர்க‌ளின் விளைநிலங்க‌ளில் புதைத்துவ‌ருகின்ற‌ன. சோமாலியா ம‌ட்டுமில்லாம‌ல் நைஜீரியா, கினியா, பிசாவ், ஜீபொடி, சென‌க‌ல் போன்ற‌ நாடுக‌ளிலும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இந்தியாவிலும் கூட‌ காகித‌ ஆலைக்க‌ழிவுக‌ள் என்ற‌ பெய‌ரில் இக்க‌ழிவுக‌ள் நில‌ங்க‌ளில் புதைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. (அண்மையில் அணுஆற்ற‌லில் இய‌ங்கும் நிமிட்ஸ் கப்பல் சென்னைக்கு துணை ந‌டிகைக‌ளை விசாரித்துச்செல்வ‌த‌ற்குத்தான் வ‌ந்த‌து என்று ந‌ம்புகிறீர்க‌ளா?)‌ க‌திர்வீச்சு வெளிப்ப‌டாம‌ல் புதைப்ப‌த‌ற்கு ஒரு ட‌ன்னுக்கு ஆயிர‌ம் டால‌ர் செல‌வு பிடிக்குமென்றால், ஏழை நாடுக‌ளின் க‌ட‌ல்க‌ளிலும், நில‌ங்க‌ளிலும் புதைப்ப‌த‌ற்கு இர‌ண்ட‌ரை டால‌ர்தான் செல‌வு பிடிக்கும். லாப‌ம்தானே முக்கிய‌ம். ஏழை ம‌க்க‌ளின் உயிர் முக்கிய‌மான‌தா என்ன‌?

     ம‌றுப‌க்கம், இந்த‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ள் மெய்யாக‌வே ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை சுத்த‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌த்தான் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌த்துகிறார்க‌ளா? சாவின் விளிம்பிலுள்ள‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை காப்ப‌த‌ற்கு ஐநா அனுப்பிய‌ உணவு, நிவார‌ணப் பொருட்க‌ளைக்கூட‌ கொள்ளைய‌டித்துச்சென்ற‌வ‌ர்க‌ள் தான் இவ‌ர்க‌ள். த‌ம்முடைய‌ முழு ஆதிக்க‌த்திற்காக‌ ச‌ண்டையிட்டுக்கொள்ளும் இவ‌ர்க‌ளிட‌ம் க‌ழிவுக‌ளை அக‌ற்றுவ‌த‌ற்கான‌ திட்ட‌மோ அமைப்புக‌ளோ இல்லை. ப‌ட்டினியால் செதுக்கொண்டிருக்கும் சொந்த‌ம‌க்க‌ளின் சாவைக்குறித்த‌ தெளிவான‌ பார்வை இல்லை. நாட்டின் நில‌மை, அத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள், அதை தீர்க்கும் செய‌ல் முறைக‌ள் என‌ எதுவுமின்றி ம‌க்க‌ளைத்திர‌ட்டாம‌ல், போராட்ட‌த்தை முன்னெடுக்காம‌ல் சில‌ க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌த்துவ‌தால் எதுவும் விளைந்துவிட‌ப்போவ‌தில்லை.

     ந‌ச்சுக்க‌ழிவு கொட்டுத‌ல், உல‌க‌ம் வெப்ப‌ம‌ய‌மாத‌ல், த‌ண்ணீர்க்கொள்ளை, சூழ‌லை மாசுப‌டுத்துத‌ல், விண்வெளிக்குப்பைக‌ள் என்று ஏகாதிப‌த்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ ம‌க்க‌ள் மீது திணிக்கும் பிர‌ச்ச‌னைக‌ள் ப‌ல‌ப்ப‌ல‌. இவைக‌ள் ஏதாவ‌து ஒரு த‌னி நாட்டுட‌ன் தொட‌ர்புள்ள‌தென்றோ, சில‌பிரிவு ம‌க்க‌ளுக்கான‌ பிர‌ச்ச‌னை என்றோ ஒதுக்கிவிட‌முடியாது. இவைக‌ளை உண‌ர்ந்து மைய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்தை தொட‌ங்காத‌வ‌ரை ஏழை நாடுக‌ளையும் அத‌ன் ம‌க்க‌ளையும் ஏகாதிப‌த்திய‌ங்க‌ள் கொன்று குவித்துக்கொண்டேயிருக்கும்.

மறக்காம உங்கள் கருத்துக்களை அனுப்புங்க.....

அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

Jan 5, 2010

உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?...

உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?
கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.

நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)


நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)


(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..


இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.



http://remote.12dt.com/lookup.php


http://www.geobytes.com/ipLocator.htm

உங்கள் கருத்துக்களை கண்டிபாக அனுப்புங்க...

அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

Jan 4, 2010

டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்...

அமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.

வருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன ? உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன ? என்ன நடந்தது ?

உலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

டாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.

ஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.

ஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.
ஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.

அந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒருவர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் நஷ்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது ? யார் செய்த தவறு இது ? யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் ?

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது ? கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.
இப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.

சரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,

வெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதியாளர்கள் நஷ்டப்பட்டனர்.

இயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளால் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்த கட்டுரை 21.12.2008 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jan 3, 2010

ஏமாளி மக்களா நாம்...

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jan 1, 2010

சிங்கப்பூர் வரலாறு......


1952 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரிட்டன்  பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் செலக்ட் ஆனாங்க. 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.

சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது


சிங்கப்பூர் துறைமுகம்



அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

சிங்கையில் எனது மாமனாரின் நண்பரான சீனர் ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் ஒரு தமிழனாக என் மனதை மிகவும் பாதித்தது. என்ன விஷயம்னா, சிங்கையின் துவக்க காலத்தில் சீனர்கள் கூலிகளாக மட்டுமே இருந்தனர். ஆனால் தமிழர்கள் வணிகத்தில் இறங்கி கொடிகட்டிப் பறக்கத் துவங்கினர். ஆரம்ப காலப் பொருளாதாரத்தில் தமிழர்களின் பங்கு பெருமளவில் இருந்து இருக்கின்றது.அப்போது எண்ணிக்கை அளவிலும் சீனர்களும் தமிழர்களும் சமமாகவே இருந்து இருக்கின்றனர்.சீனர்கள் தங்கள் சேமிப்பை சீனாவிற்கு அனுப்பவில்லை.காரணம் அங்கு கம்யூனிசம் நிலவியதால் சொத்து வாங்க முடியாது.அது மட்டும் இன்றி சிங்கையின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அவர்களுக்கு காணததைக் கண்டமாதிரி இருந்ததால் குடும்பம்த்தோடு சிங்கையே நம் பூமி என்று சீனாவை மறந்து வசிக்கத் துவங்கினர்.சிங்கையில் சேர்த்த காசை சீனர்கள் சிங்கையிலேயே முதலீடு செய்து மெல்ல கூலி என்ற நிலையில் இருந்து உயர்ந்து வணிகர் என்ற நிலைக்கு உயர்கின்றனர்.மொத்தக் குடும்பமும் இங்கே இருப்பதால் மக்கள் தொகை அளவிலும் உயரத் துவங்குகின்றனர்.


மாறாக அங்கு வணிகம் புரிந்த தமிழர்கள் கிடைக்கின்ற லாபத்தை சரியாக பிரித்து எடுத்து தமிழகம் அனுப்பி இங்கு ஊரில் சொத்து வாங்கத் துவங்குகின்றனர்.அதெல்லாம் போகட்டும்...அதுக்கப்புறம் நம்மாளுங்க பண்ணிய ஒரு காரியம்தான் மிகுந்த பின்னடைவை உருவாக்குகின்றது. அது என்னன்னா, நம்பாளு ஊருல வந்து கல்யாணம் பண்ணுவான். அப்புறம் ஓரிரு மாதம் பொண்டாட்டி பிள்ளைத்தாச்சி ஆகும் வரை வெயிட் பண்ணிட்டு மொத மாசம் கர்பம்னு தெரிஞ்சவுடனே கப்பல்ல டிக்கட்டப் போட்டு சிங்கை போய்ட்டு ஒரு 3 வருசமோ 5 வருசமோ கழிச்சு ஊருக்கு வந்து அடுத்த பிள்ளைக்கு அடி போட்டுட்டு மீண்டும்.......

இந்த நேரத்துல நாடு சுதந்திரம் அடைந்து லீ குவான்யூ வந்தாரா. வந்தவுடனே அண்ணனுக்கு இந்த விசயம் கரெக்டா மூக்குல வேர்த்துருச்சு. இவிங்க பிள்ளைங்க எல்லாம் ஊரில் வளர்ந்து பெரிதானவுடன் ஒரு 18 வயசு வாக்குலதான இங்க வர்றாங்க...அதுக்கு வப்போம் மொத ஆப்புன்னு முடிவெடுக்குறாரு. வந்த கையோடு ஒரு சட்டம் போடுறாரு, அதாவது இனி சிங்கை குடிமகனின் பிள்ளைகள் சிங்கைக்கு வெளியில் பொறந்து இருந்தா சிடிசன் இல்லைங்குறாரு. அச் சட்டம் 1970 களின் ஆரம்பம் வரை இருந்தது. இதுனால இனி வாரிசு இங்க வந்து நம்ம தொழிலைப் பார்க்க முடியாதேன்னு நிறைய தமிழ் வணிகர்கள் தங்கள் வணிக அமைப்பை விற்றுவிட்டு தாயகம் திரும்புகின்றனர். அப்பிடி வித்த பல தொழில்களையும் வாங்கியவர்கள் சீனர்கள்.மெல்ல பொருளாதரம் சீனர்கள் கைக்கு மாறுது.ரொம்ப பேரு கிளம்பிட்டாங்கன்னு தெரிஞ்சவுடனேதான் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வர்றாரு. ஒரே ஒரு புள்ளைக்கு மட்டும் சிட்டிசன் வாங்கிக்கன்னு.
இன்றைக்கு கோவி அண்ணன், மகேஷ் அண்ணன் மாதிரி சமீபத்தில் (டோண்டு சார் சமீபம் அல்ல) வேலைக்குச் சென்ற தமிழர்கள் குடும்பத்தோடு இருந்தாலும் பத்து பிள்ளைப் பெற்ற காலம் மலையேறி விட்டதால் இனி எப்பவும் தமிழர்கள் அங்கு மைனாரிட்டிதான்.


நம்மாளுங்க மட்டும் ஆரம்பத்தில் இருந்து குடும்பத்தோடு சிங்கையில் இருந்து இருந்தால் இன்று சிங்கை நம் கையில். அந்த விசயத்தில் நாங்கள் எல்லாம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டுருக்கோம்னு அந்த சீனர் ஒரு மெல்லிய புன்னகையோடு என்னிடம் சொன்னாரு.தமிழனுக்கு சொல்லிக்க ஒரு நாடு அமையும் எனக்கு முன்னாடி ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அந்த நெனப்பும் இப்ப சமீப காலமா எனக்குப் போய்ருச்சு. சரி தமிழ்நாடாவது தமிழர்கள் கிட்ட இருக்கேன்னு நினைக்கையில கோயில்காளை ஷீட்டிங்கில் "கார் ஓச்சிந்தா?" அப்பிடின்னு நம்ம விஜயகாந்த் பக்கத்துல யாருகிட்டயோ கேட்டது அங்க ஷீட்டிங்கை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு கரெக்ட்டா இப்ப ஞாபகத்துக்கு வருது.

அது எப்டின்னா....சிங்கையை ஆங்கிலேயர்கள் ஆக்ரமித்த நேரத்தில இந்தியா போன்ற அவர்களது காலனி நாடுகள்ல மக்கள் மத்தியில சுதந்திர உணர்வு கொஞ்சமா தோன்ற ஆரமிச்சுடுச்சு. சிங்கையை பொறுத்த அளவில் பரப்பளவில் சிறிய நாடு(ஊரு).மக்களை பிற பகுதிகளில் இருந்துதான் வேலைக்கு கொண்டு வரணும். அப்படி வர்றவங்கள ஒன்னாமன்னா இருக்க வச்சா நமக்கு டேஞ்சருன்னு நம்ப வெள்ளக்கார தொரைங்க ரோசனை பண்ணி ஆரம்பத்துலேயே ஒருத்தரோட ஒருத்தர் சேராம பண்ணிட்டா, அதாவது நம்ப வடகரை வேலன் அண்ணே கதம்பம்னு கடை வச்சுருப்பாரே...ஒரு கட்டுரை,ஒரு துணுக்கு,ஒருகவிதை அப்பிடின்னு பிரிச்சு,பிரிச்சு அது மாதிரி இவங்களையெல்லாம் பிரிச்சு வச்சு நம்ப கடையை கொஞ்சநாள் ஓட்டிடலாம்னு முடிவு பண்ணி ஒரு திட்டத்த போட்டாங்க.

(சரணடையும் முன் துறைமுகத்தை அழிக்கும் ஆங்கில வீரர்கள் )



இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.சிங்கப்பூர் ஆற்றுப் பகுதி பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது.அவங்கல்லாம் வேற வேற இனமா இருந்தாலும் மொத்தத்துல பணக்கார சாதி.

சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும்,கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகர்களும், கல்விமான்கள் மற்றும் அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். இந்தியக் கூலிகள் தீவின் உட்பகுதியிலேயே ஒரு மூலையில் குடியேறினர்.இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. சீனக்கூலிகள் சைனா டவுன் எனும் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.இப்படி ஒவ்வொருவரும் தமது குழுக்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்த துவங்கினர்.



(போர் காலத்தில் சிங்கை நகரம் )


ஆச்சா..இப்ப ஆங்கிலேய அரசு தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்கப்பல்களையும்,தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை.22 ஆம உலக்போரின் போது ஜப்பானியப் படைகள் மலேயாவைக் கைப்பற்றிக் கொண்டன.அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது,பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன்,புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி ஜப்பானியத் தளபதி தொமொயுக்கியமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர்.



இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரிட்டன்  பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது ஜப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. ஜப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் ஜப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் ஜப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவுனதா சொல்றாங்க. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா அப்டிங்குறாங்க. மலாய் வரலாற்றின் படி 14 ஆம் நூற்றாண்டு சுமத்ரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலப்போ இந்த தீவில் ஒதுங்கிருக்காரு. அப்போது அவரரு சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக தல வரலாறு சொல்லுது.



(1890 களின் இறுதியில் சிங்கையின் தோற்றம்)



ஒரு சுபயோக சுபதினத்துல,அதாவது 1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் அப்டிங்குற ஒரு பிரிட்டீஷ் ஆசாமி தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினாரு. இறங்குனாரா...அப்புறம் அப்பிடியே ஒரு ரவுண்டு அந்த தீவ வுடுறாரு.இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்துகிட்ட அவரு, இங்க ஒரு பிஸினஸ் ஹப் போட்டா சூப்பரா இருக்குமே அப்பிடின்னு 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹீசேன் ஷாவுடன் பிரித்தானிய கிழக்கிந்திக கம்பெனி சார்பில் ஒப்பந்தம் ஒன்னச் செஞ்சுகிட்டாரு. அப்ப அந்த லூசு ஷாவுக்கு தெரியல, நம்ப கையெழுத்து போடுறது பிஸினஸ் டீலில் இல்ல, கிட்டத்தட்ட இனாம் செட்டில்மெண்ட் டீல்லன்னு. இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி வாங்கிக்கிச்சு. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்ற நாடாயிருச்சு.









(தொடக்க கால துறைமுகம்-1860 களில்)



சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் இருப்பிட அதிகாரியான ஜான் குரோபுர்ட்ங்குற ஒரு நல்லவருதான் சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார்(வேற வழி இல்லாம). இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம்.



ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்இன மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினாரு. இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் ஆட்சிக்குறிய முடியரசுநாடாக பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. அது என்ன பிரித்தாளும் சூழ்ச்சி......

குடியேற்றச் சோதனைக்கான கவுண்டரில் குடியேற்ற அதிகாரி முன் இருக்கும் மேசையில் சாக்லேட் வைத்து இருக்கின்றார்கள்.நமக்கு அவர் சாக்லேட் தந்து வரவேற்கின்றார்.இதுவரை நான் சென்று வந்த எந்த நாட்டிலும் இதுபோல நான் பார்த்ததேயில்லை.அவர் சீனராக இருந்தும் எங்களிடம் தமிழில் பேசியது மிகவும் ஆச்சர்யமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.ஆனால் பின்னர் வந்த நாட்களில் சீனர்களில் பலர் தமிழ் பேசியதும், தமிழர்களில் பலர் மேண்ட்ரின் எனும் சீன மொழியைப் பேசுவதைக் காண்பதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது.


குடியேற்றச் சோதனை, சுங்கச் சோதனை ஆகியவற்றை முடித்து விமான நிலையத்தின் வெளிப்பகுதியை அடைந்ததும் நான் முதலில் கண்டது அருமை அண்ணன் "ஜோசப் பால்ராஜ" அவர்களை. அதன் பின்னர்தான் என்னுடைய மைத்துனரைப் பார்த்தேன்.சத்தியமாக நான் சிறிதும் ஜோசப் அண்ணனை எதிர்பார்க்கவில்லை.


அந்த இடத்தில் ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் மருகி,உருகி விட்டார் என் மனைவி. "அது எப்படிங்க? முன்பின் பார்த்து, பழகியிராத ஒரு மனிதரின் வருகைக்காக, அதுவும் விமான தாமதத்தைக் கூட பொருட்படுத்தாமல் ஒரு மனிதர் வெகு நேரம் காத்திருந்து நம்மை வரவேற்று வீடுவரை வந்து விட்டுச் செல்கின்றார்?"

அவர் அப்படிக் கேட்ட ஒவ்வொரு முறையும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்த நான் இறுதியாச் சொன்னேன் "எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!"
தொடரும் .....

பலமுறை முயன்றும் நேரமின்மையால்(காசுப் பிரச்சனைங்கிறதத்தான் இப்படி கவுரவமாச் சொல்றோம்) தள்ளித்தள்ளிப் போன சிங்கப்பூர் பயணம் எனது மைத்துனரின் திருமணத்தை முன்னிட்டு தவிர்க்க முடியாமல் முடிவாயிற்று. அதான் கல்யாணம் நம்ப ஊருல சிறப்பா முடிஞ்சுருச்சே, அப்புறம் என்ன அங்க வேற வரவேற்பு? இதெல்லாம் வெட்டிச் செலவு( வேற யாருக்கு?? அங்க போற எனக்குத்தான்) என்ற என் ஒற்றைக் குரல் மொத்தக் குரல் ஓட்டெடுப்பில் தோற்றுப் போனது. தங்கமணிகளின் தகராறு எந்த அளவில் முடியும் என்பதை அண்ணன் தாமிரா மூலம் அறிந்த காரணத்தால் பொறுப்பாக விசா அப்ளை செய்தேன்.





சிங்கப்பூர் என்பதற்கு பதிலாக சுத்தப்பூர் என்று பெயர் வைத்து இருக்கலாம். சிங்கையின் சுத்ததிற்கு கட்டியம் கூறுவதுபோல இருக்கின்றது சங்கி ஏர்போர்ட். பரந்து விரிந்த அந்த விமான நிலையத்தை அவர்கள் பராமரிக்கும் அழகே தனி. சிங்கையில் பெரும்பான்மைக் குடியினர் சீனர்கள்.தமிழர்களும், மலாய்களும் கணிசமான அளவில் குடிமக்களாக உள்ளனர்.இந்த மூன்று இனத்தவர்களுமே விமான நிலையத்தில் அனைத்து பணிகளிலும் பணிபுரிகின்றனர்.




தனது கருத்தை ப்ளாக்கரில் பகிர்ந்த நண்பர் எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு நன்றி...

அன்புடன்

உங்கள்

மாறன்...

கருத்து சொன்னவர்கள் (Recently):