Mar 30, 2010

உங்கள் படம் Folder Background-ல் வர......

  நண்பர்களே, எக்ஸ்.பீ -ல் Folder Background ஆக உங்கள் படத்தை வைக்க முடியும். அது எப்படி என்பதை பார்க்கலாம்,

முதலில்,
நீங்கள் Background வைக்கப்போகும் Folder ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர், நோட்பேடில் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image="Your_Image"


இதில் Your_image என்ற இடத்தில் உங்கள் படத்தின் location ஐ கொடுக்கவும்.

Eg:- C:\Documents and Settings\Administrator\My Documents\My Pictures\Google Talk Received Images\angelina_jolie_wallpaper_02.jpg

பின்னர் இதனை "desktop.ini" என்னும் பெயரில் அந்த Folder-ல் சேமிக்கவும்.

பின்னர் Run Open செய்து கீழே உள்ள கமெண்ட்டை, கொடுக்கவும்.

"attrib +s "D:\sankar"






பின்னர் அந்த Folder-ஐ Open செய்யவும்,
அதில் desktop.ini என்ற பைலை Right click----> Properties சென்று Hidden ஆக மாற்றவும்.
இப்போ உங்க Folder ready. ( ஒரு பொதுவான Location-ல் படத்தை வைத்துவிட்டு, desktop.ini பைலை காப்பி செய்து தேவையான அனைத்து போல்டரிலும் காப்பி செய்யலாம்.)

இப்போது உங்கள் போல்டரின் Background,
அட என்ன அப்படியே பாக்குறிங்க....... உங்கள் கருத்துக்களை என்னக்கு சொல்லுங்க....


அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

Mar 29, 2010

சிஸ்டம் பாஸ்வோர்ட் மறப்பவர்களுக்கு...

கம்ப்யூட்டரில்
பாஸ்வோர்ட் மறந்து போச்சு என்று கேட்பவர்களுக்கு நான் அருமருந்து ஒன்று
தரப்போகிறேன். பாஸ்வோர்ட் டைப் செய்கிறோம்.சில வேளைகளில் தவறாக டைப்
செய்கிறோம்.சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வோர்ட் அல்லது வேறு ஒரு
பாஸ்வோர்ட் கொடுக்கிறோம்.இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது
யு.எஸ்.பி.டிரைவில் பாஸ்வொர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து
பாஸ்வோர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா?

இந்த டிஸ்க்கிர்க்குப் பெயர் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்க் (Password Rest Disk) ஆகும்.இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி அல்லது யு.எஸ்.பி.டிரைவ் வைத்துப் பயன்படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1. முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.

2. அதன் பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப்
பார்க்கவும்.இதில் Prevent Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விசார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.

7. தற்ப்பொதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வோர்ட் டைப்
செய்திடவும்.பின் Next அழுத்தவும்.உங்கள் Password டிஸ்க் ரெடி ஆகிவிடும்.
8. இனி விசார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம்.இதனை எப்படி பயன்படுத்துவது?எப்போதாவது உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போய்விட்டதா?

1. வெல்கம் ஸ்க்ரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2.அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும்.அதில் உங்கள் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use Your Password Disk " என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard
என்ற விசார்ட் திறக்கப்படும்.தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட் அமைப்பதற்கான வழி
முறை கிடைக்கும்.அதனை பின்பற்றவும்.புதிய பாஸ்வோர்ட் ஒன்றினை அமைத்து
இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை.இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம்.

Read more: http://www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....

Mar 23, 2010

பைல் சிஸ்டம் என்றால் என்ன....




பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் பதியப்படும் பைல்களைக் இயங்கு தளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணினியில் இருக்கலாம். எனினும் அவறறை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணினி நத்தை வேகத்திலேயே இயங்கும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணினியும் எதிர் கொள்ளும்.
வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமன முறைகளில் பொருட்களை ஒழுங்கு படுத்துவது போல் கணினியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT16, FAT32, NTFS என்ப் பல வழி முறைகள உள்ளன. இவை ஓவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.
ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தில் டேட்டாவை சேமிப்பதில் காட்டும் திறன்
ஹாட் டிஸ்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் பட்டியலிடுதல் மூலம் அவற்றை விரைவாக மீட்டுக் கொள்ளும் திறன்
பைல்களை அழித்தல், பெயரிடுதல். பிரதி செய்தல், இடம் மாற்றுதல் போன்ற பைல் சர்ந்த அடிப்படை விடயங்களை மேற்கொள்ளுதல் எனபன பொதுவான பண்புகளாகும்.
இந்த அடிப்படை விடயங்களுடன் சில பைல் சிஸ்டம் பைகளைச் சுருக்குதல் (compression) , குறியீட்டு முறைக்கு மாற்றுதல் (encryption), கடவுச் சொல் (password) மூலம் பாதுகாப்பளித்தல் போன்ற கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும்.
FAT16 (File Allocation Table) என்றால் என்ன? எம்.எஸ்.டொஸ் இயங்கு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்த பைல் சிஸ்டம் அதிக பட்சம் 2GB கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கிற்கே பொருந்தும்.
ஹாட் டிஸ்கில் டேட்டா மெல்லீய பொது மையம் கொண்ட ட்ரேக்ஸ் (tracks) எனும் பாதையிலேயே பதியப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரேக்கும் செக்டர்ஸ் (Sectors) எனும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு ட்ரேக்கும் ஒரே அளவான செக்டர்களைக் கொண்டிருக்கும். டிஸ்கில் உள்ள டேட்டாவை பதியும் மிகவும் சிறிய பகுதியே செக்டர் ஆகும். ஒரு செக்டரின் அளவு 512 பைட்டுகளாகும். ஹாட் டிஸ்கை போமட் செய்யும் போதே இவ்வாறு பிரிக்கப்படுகின்றன..
இந்த இடத்தில் நான் ஒரு "கணக்கு வாத்தியார்" வேலை பார்க்க வேண்டியுள்ளது.
ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவு 10 கிலோ பைட் எனின் அந்த ஹாட் டிஸ்க் 20 செக்டர்களாகப் பிரிக்கப்படும். எனினும் இயங்குதளமானது நேரடியாக ஒவ்வொரு செக்டரையும் அணுகுவதில்லை. மாறாக அது பல செக்டர்களை ஒன்று சேர்த்து க்ளஸ்டர் (Cluster) எனும் ஒரு அணியாக மாற்றி அதனையே அணுகுகின்றது. இதனை (Allocation unit) எனவும் அழைக்கப்படும்.
உதாரணமாக ஒவ்வொரு செக்டரையும் ஒரு பையை கையில் வைத்திருக்கும் ஒரு நபருக்கு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு பையிலும் 512 பைட் டேட்டாவையே சேமிக்க முடியும். ஒவ்வொரு நபரையும் 1,2,3 என இலக்கமிடாமல், பைல் சிஸ்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து ஒரு அணியாக மாற்றி அவர்களை முதலாவது அணி எனப் பெயரிடுகிறது. மொத்தமாக 400 பேர் இருப்பார்கள் எனின் பைல் சிஸ்டம் அணிக்கு நால்வராக 100 அணிகளாகப் பிரித்துக் கொள்ளும்.
இன்னொரு வகையில் சொல்வதானால் 400 செக்டர்கள் கொண்ட ஒரு ஹாட் டிஸ்கில் (200 கிலோபைட்) பங்கீட்டு அளவாக 4 செக்டர்களை ஒரு க்ளஸ்டர் கொண்டிருப்பின் மொத்தமாக 100 க்ளஸ்டர்கள் காணப்படும்.
பைல் சிஸ்டமானது ஒரு குறித்த செக்டரை அணுக வேண்டுமானால், முதலில் அந்த செக்டர் இடம் பெறும் க்ளஸ்டர் இலக்கத்தையே அணுகும். அந்த க்ளஸ்டருக்குள் செக்டரின் தொடரிலக்கத்தின் மூலம் உரிய செக்டரை அடையும். அதாவது ரிம்ஸி எனும் நபரைக் கண்டு பிடிக்க ரிம்ஸி இடம் பெறும் அணியை முதலில் அணுகி அங்கு ரிம்ஸியைக் கண்டு பிடிப்பதற்கு ஒத்ததாகும்.
FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் இம்முறையிலேயே இயங்குகின்றன. அப்படியானால் இவற்றுக் கிடையே என்ன வேறுபாடு உள்ளன?
முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது. பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும்.


அன்புடன்
உங்கள்
மாறன்...

Mar 21, 2010

பைலைத் திறக்காமலேயே பார்வையிட....


உங்களிட்ம ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது.

இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,
.
அடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.

Read more: http://www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....

Mar 16, 2010

விண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய...

.
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி  கருப்புத்  திரையில் வந்திருக்கலாம்.
Windows could not start because the following file missing 
or corrupt: 
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select 'r' at the First screen to start repair.

அல்லது


என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode  சென்றாலும் இதே நிலைதான்.  

இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். 

முதலில்   வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM). 
இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும். 


ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள். 


இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும். 


மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM  C:\WINDOWS\SYSTEM32\CONFIG

(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் 'C:' என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE  C:\WINDOWS\SYSTEM32\CONFIG

பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்.


அன்புடன்
உங்கள்
மாறன்.....

மறக்காம உங்கள் கருத்துக்களை அனுப்புங்க.......

Mar 8, 2010

பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க முடியுமா???

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொலவது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt' கீயை அழுத்தியவாறே இலக்கம் '255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்? அதுதான் எனக்கும் புரியவில்லை


Read more: http://www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்...

Mar 2, 2010

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்....

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.

ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.


உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம்.

ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.


(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது "Assign the following drive letter" என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. "Assign the following drive letter" என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.


Read more: www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....
கருத்து சொன்னவர்கள் (Recently):