Oct 23, 2009

சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்

தயவுசெய்து சிரிக்காம படிங்க....
 
ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
  1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
  2.  விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.
  3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
  4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
  5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது.. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.
  6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.
  7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
  8. என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
  9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
  10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?
  11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?
 
நன்றி
மணி
(ஷார்ஜா)

Oct 21, 2009

பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,

தற்பொழுது பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின்  தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக..,



USB Firewall எனப்படும் இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, பென் ட்ரைவை கனெக்ட் செய்யும் பொழுது, இந்த மென்பொருள், அதில் தானாகவே உங்கள் கணினியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. (முக்கியமாக Autorun.inf)

கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.





உங்கள் கணினியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப் பட்டிருந்தாலும், அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

நன்றி
மாறன்....

Oct 11, 2009

கோப்புகளை Recover,Delete செய்வதற்கு இலவச மென்பொருள்கள்

 


பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும்,அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும்.அதனால் , இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இலவச மென்பொருள்களை நமக்களிக்கும் நிறுவனங்களுக்கு முதலில் நன்றி சொல்வோம்.


1.Recover Deleted Files :
வேண்டிய கோப்புகளை(File) தெரியாமல் அழித்து விட்டால் ,அவற்றை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்.நன்றாக வேலை செய்கின்றது.




2.Permanently Delete Files :
கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் மென்பொருள்.ஒரு முறை இம்மென்பொருளை கொண்டு அழித்துவிட்டால் மீண்டும் கோப்புகளை மீட்டெடுக்க முடியாது.






அன்புடன்
கிராமத்து பையன்

Oct 10, 2009

உலகத்தின் முதல் லேப்டாப்



உலகத்தின் முதல் லேப்டாப் ஏப்ரல் 1981 ல் உருவாக்கப்பட்டது.
இதன் பெயர் Osbourne 1.



5" மானிட்டர்.
64K RAM
Dual 5 1/4" - 91 K Floppy Drive
24.5 pounds weight.
விலை $1795.00

உண்மைதானா?



.............சூர்யா ௧ண்ணன்

Oct 5, 2009

Microsoft Security Essential for free



Proven Antivirus Protection for free?

Get high-quality, hassle-free antivirus protection for your home PC now.

It provides real time protection for home PC that protects against from viruses, spyware, and other malcious things.


Microsoft Security Essentials is a freeware application from Microsoft that is easy to install, use.

Note : Your PC must run genuine Windows to install this application.

Link to download Microsoft Security Essentials : Microsoft Security Essentials - Free Antivirus

Key Features
  • Comprehensive malware protection
  • Simple,Free download
  • Automatic Updates
  • Easy To use


Thanks
MARAN

கருத்து சொன்னவர்கள் (Recently):