கம்ப்யூட்டர் கீ போர்டில் நீங்கள் அனைத்து கீகளையும் பயன்படுத்து கிறீர்களா? இந்த கேள்விக்கு நாம் அனை வருமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, சில கீகளைப் பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்வோம். ஒரு சிலர் கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், பாஸ்/பிரேக் வலது விண்டோஸ் கீ அருகே உள்ள மெனு கீ போன்றவற்றைப் பயன் படுத்துவதே இல்லை. ஏன் இந்த கீகளைப் பயன் படுத்தவில்லை என்றால், வேறு சில செயல் பாடுகளுக்கு இந்த கீகளைப் பயன் படுத்தலாமே என்று நமக்கு எண்ணம் தோன்றுகிறதா? ஆமாம், செய் திடலாமே என்றும் ஆசை வருகிறது. ஆனால் எப்படி?
எப்படி ஒரு கீயினை நம் விருப்பத்திற் கேற்றபடி செயல்பட அமைப்பது? ஒரு வழி ரெஜிஸ்ட்ரியை மாற்றுவது. ஆனால் பொதுவாக அதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில், எக்குத் தப்பாக ஏதாவது செய்துவிட்டால், பின்னர் கம்ப்யூட்டரே இயங்கா நிலை ஏற்பட்டுவிடும். இந்த சிக்கல்களில் உங்களுக்கு நல்லதொரு தீர்வைத் தரும் புரோகிராம் ஒன்று ஷார்ப் கீஸ் (Sharp keys) என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் மூலம், எந்த கீயிலும் இன்னொரு கீயின் செயல்பாட்டை அமைத்திடலாம், அதுவும் மிக எளிதாகவும் வேகமாகவும்.
நான் இந்த புரோகிராம் மூலம் எஸ்கேப் கீயினை கேப்ஸ் லாக் கீயாக மாற்றினேன். பின்னர் மீண்டும் அதனைப் பழையபடியே மாற்றி அமைத்தேன். இதே போல இந்த புரோகிராம் மூலம் எந்த கீயின் செயல்பாட்டினையும் மாற்றி அமைத் திடலாம். அது மட்டுமின்றி, ஒரு கீ எந்த செயல்பாட்டினையும் மேற்கொள்ளாமல் செயல் இழந்த கீயாகவும் அமைத்திடலாம். கீ ஒன்றில் அப்ளிகேஷன் ஒன்றையும் செட் செய்திடலாம். அல்லது போல்டர் ஒன்றையும் அமைத்திடலாம். எடுத்துக் காட்டாக, வால்யூம் எழாமல் இருக்க ஒரு கீயை நான் அமைத்தேன். ஒரு கீயில் மை டாகுமென்ட்ஸ் போல்டரை அமைத்தேன். அந்த கீயினை அழுத்தியவுடன், மை கம்ப்யூட்டர் போல்டர் விரிந்தது. ஆனால் எந்த மாறுதலை ஏற்படுத்திய பின்னரும், அதற்கேற்ப ரெஜிஸ்ட்ரியில் மாறுதல் செய்திட வேண்டும். அந்த வேலையை இந்த ஷார்ப் கீஸ் புரோகிராம் மேற்கொள்கிறது.
எனவே கீ அமைப்பை மாற்றிய பின், ரெஜிஸ்ட்ரியில் மாற்றங் களை அழுத்துவதற்கான கீயையும் அழுத் திய பின்னர், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்தால் தான், இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்படும். இல்லையேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த புரோகிராமினைப் பெற http://www.randyrants.com/2006/07/sharpkeys_211.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
அன்புடன்
உங்கள்
மாறன்...
2 comments:
பயனுள்ள பதிவு நன்றி.
www.panangoor.blogspot.com
Hurrah! At last I got a web site from where I know how to actually get valuable information concerning my study and knowledge.
Look into my web-site - minecraft.net
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...