எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும். இன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கம்ப்யூட்டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன. இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால், மால்வேர்கள், கம்ப்யூட்டரில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பாக்ஸ் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பாக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிரா மினைப் பயன்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்கு வதால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரின் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்குத் தொடர்பின்றி இன்டர்நெட் பிரவுசர் நடைபெறுகிறது. "Browser in a box" என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு 'guest' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த, அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பாக்ஸ் இயக்கப்பட்ட பின்னர், விண்டோஸ் மூலம் எந்த ஒரு பைலையும் அப்லோட் செய்திடவோ, அல்லது இன்டர்நெட்டி லிருந்து டவுண்லோட் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பிட் பாக்ஸ் இயக்கப்படும் போதும், புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இன்டர்நெட் அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. பிட்பாக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது. பிட் பாக்ஸ் பிரவுசரை, இலவசமாக டவுண்லோட் செய்திட http://download. sirrix.com/content/pages/bbdl.htm என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த தளம் ஜெர்மானிய மொழியில் இருப்பினும், தரவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதில்லை. உங்கள் பெயர், இமெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து டவுண்லோட் என்ற பட்டனை அழுத்தினால், டவுண்லோட் தளம் காட்டப்பட்டு, இது டவுண்லோட் ஆகும். இதன் பைல் அளவு 900 மெகா பைட் என்பது சற்று அதிகம் தான். எனவே டவுண்லோட் செய்திட அதிக நேரம் ஆகலாம். இணைய இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இதனை டவுண்லோட் செய்திட முயற்சிக்கவும். உங்கள். மாறன்... |
Aug 6, 2011
Posts by : Admin
பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...