Aug 25, 2011

கீ போர்டில் கீ செயல்பாட்டினை மாற்ற...

கம்ப்யூட்டர் கீ போர்டில் நீங்கள் அனைத்து கீகளையும் பயன்படுத்து கிறீர்களா? இந்த கேள்விக்கு நாம் அனை வருமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, சில கீகளைப் பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்வோம். ஒரு சிலர் கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், பாஸ்/பிரேக் வலது விண்டோஸ் கீ அருகே உள்ள மெனு கீ போன்றவற்றைப் பயன் படுத்துவதே இல்லை. ஏன் இந்த கீகளைப் பயன் படுத்தவில்லை என்றால், வேறு சில செயல் பாடுகளுக்கு இந்த கீகளைப் பயன் படுத்தலாமே என்று நமக்கு எண்ணம் தோன்றுகிறதா? ஆமாம், செய் திடலாமே என்றும் ஆசை வருகிறது. ஆனால் எப்படி?

 எப்படி ஒரு கீயினை நம் விருப்பத்திற் கேற்றபடி செயல்பட அமைப்பது? ஒரு வழி ரெஜிஸ்ட்ரியை மாற்றுவது. ஆனால் பொதுவாக அதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில், எக்குத் தப்பாக ஏதாவது செய்துவிட்டால், பின்னர் கம்ப்யூட்டரே இயங்கா நிலை ஏற்பட்டுவிடும். இந்த சிக்கல்களில் உங்களுக்கு நல்லதொரு தீர்வைத் தரும் புரோகிராம் ஒன்று ஷார்ப் கீஸ் (Sharp keys) என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் மூலம், எந்த கீயிலும் இன்னொரு கீயின் செயல்பாட்டை அமைத்திடலாம், அதுவும் மிக எளிதாகவும் வேகமாகவும்.

நான் இந்த புரோகிராம் மூலம் எஸ்கேப் கீயினை கேப்ஸ் லாக் கீயாக மாற்றினேன். பின்னர் மீண்டும் அதனைப் பழையபடியே மாற்றி அமைத்தேன். இதே போல இந்த புரோகிராம் மூலம் எந்த கீயின் செயல்பாட்டினையும் மாற்றி அமைத் திடலாம். அது மட்டுமின்றி, ஒரு கீ எந்த செயல்பாட்டினையும் மேற்கொள்ளாமல் செயல் இழந்த கீயாகவும் அமைத்திடலாம். கீ ஒன்றில் அப்ளிகேஷன் ஒன்றையும் செட் செய்திடலாம். அல்லது போல்டர் ஒன்றையும் அமைத்திடலாம். எடுத்துக் காட்டாக, வால்யூம் எழாமல் இருக்க ஒரு கீயை நான் அமைத்தேன். ஒரு கீயில் மை டாகுமென்ட்ஸ் போல்டரை அமைத்தேன். அந்த கீயினை அழுத்தியவுடன், மை கம்ப்யூட்டர் போல்டர் விரிந்தது. ஆனால் எந்த மாறுதலை ஏற்படுத்திய பின்னரும், அதற்கேற்ப ரெஜிஸ்ட்ரியில் மாறுதல் செய்திட வேண்டும். அந்த வேலையை இந்த ஷார்ப் கீஸ் புரோகிராம் மேற்கொள்கிறது.

எனவே கீ அமைப்பை மாற்றிய பின், ரெஜிஸ்ட்ரியில் மாற்றங் களை அழுத்துவதற்கான கீயையும் அழுத் திய பின்னர், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்தால் தான், இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்படும். இல்லையேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த புரோகிராமினைப் பெற http://www.randyrants.com/2006/07/sharpkeys_211.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Aug 6, 2011

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்...


எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.

இன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது.

இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கம்ப்யூட்டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.

இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால், மால்வேர்கள், கம்ப்யூட்டரில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பாக்ஸ் இயங்குகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பாக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிரா மினைப் பயன்படுத்துகிறது.

இது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்கு வதால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரின் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்குத் தொடர்பின்றி இன்டர்நெட் பிரவுசர் நடைபெறுகிறது.

"Browser in a box" என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு 'guest' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது.

இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த, அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பாக்ஸ் இயக்கப்பட்ட பின்னர், விண்டோஸ் மூலம் எந்த ஒரு பைலையும் அப்லோட் செய்திடவோ, அல்லது இன்டர்நெட்டி லிருந்து டவுண்லோட் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பிட் பாக்ஸ் இயக்கப்படும் போதும், புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இன்டர்நெட் அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

பிட்பாக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது.
பிட் பாக்ஸ் பிரவுசரை, இலவசமாக டவுண்லோட் செய்திட http://download. sirrix.com/content/pages/bbdl.htm என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த தளம் ஜெர்மானிய மொழியில் இருப்பினும், தரவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதில்லை.

உங்கள் பெயர், இமெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து டவுண்லோட் என்ற பட்டனை அழுத்தினால், டவுண்லோட் தளம் காட்டப்பட்டு, இது டவுண்லோட் ஆகும். இதன் பைல் அளவு 900 மெகா பைட் என்பது சற்று அதிகம் தான். எனவே டவுண்லோட் செய்திட அதிக நேரம் ஆகலாம். இணைய இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இதனை டவுண்லோட் செய்திட முயற்சிக்கவும்.

அன்புடன்

உங்கள்.

மாறன்...
www.maran.co.nr

Aug 3, 2011

கூகுள் மொழி பெயர்க்கிறது...

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.


மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.


இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன். அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது. இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது. I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது. வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது.

அன்புடன்
உங்கள்
மாறன்...

கருத்து சொன்னவர்கள் (Recently):