Dec 10, 2011

ஃபோல்டர்களுக்கு போடலாம் பூட்டு....

கணினியில் எங்களுடைய ஆவனங்களை இலகுவான பாவனைக்காக
 நாங்கள் பிரித்து வைப்பதற்கு எமக்கு ஃபோல்டர்கள் உதவுகின்றன.
இந்த ஃபோல்டர்களில் காணப்படுகிற ஆவணங்கள் முக்கியமானவையாகும்.
எனவே இவற்றை மிகவும் அவதானமாக பாதுகாக்க வேண்டும்..இதற்காக
நம்மில் பலர் அவற்றை Hidden செய்து வைப்பதுண்டு.சிலர் அவற்றை வேறு பெயர்களில் பாதுகாப்பதும் உண்டு. அனால் இவையெல்லாம் சாதாரண யுத்திகள்தான. 

உங்கள் கணினியை கையாள்கிற இன்னொருவரோ அல்லது வேறு ஏதேனும் வைரஸ் புரோக்கிராம்களோ அவற்றை இலகுவாக அழித்துவிட முடியும் அலல்து திருட முடியும். இதை தடுப்பதற்காகவே சந்தையில் இலவசமாகவும்
காசு கொடுத்து பெற வேண்டியவையாகவும் பல மென்பொருட்கள் காணப்படுகிறன. ஆனால் அவையும் சில சமயங்களில் நம் காலை வாரிவிடும். எனவே எங்களுடைய ஆவனங்களை எவ்வாறு பாதுகாப்பது?? மற்றவர்களை நம்பாமல் நாமாகவே ஒரு Locker ஐ உருவாக்கினால்..

எந்தவொரு கணினி மொழி அறிவும் இன்றி உங்களாலும் கூட ஒரு பாதுகாப்பான ஃபோல்டர் லொக்கரை உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?? முடியும். அதனை வெறும் நோட்பேடை வைத்து செய்யலாம். முதலில் கீழே உள்ள கோடிங்கை பிரதி செய்து ஒரு புதிய நோட்பேடை திறந்து அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின்னர் நான் Your password here என்று கொடுத்துள்ள பகுதியில் உங்கள் கோப்புக்கான பாஸ்வேர்டை வழங்கி
பின்னர் Ctrl+S அழுத்தி சேமிக்க வேண்டும் அப்பொது தோன்றும் Save As மெனுவில் Filename இல் Locker.bat என்று கொடுத்து உங்கள் கணினியின் உங்கள் ஆவணங்கள் இருக்கிற பகுதியில் சேமித்து கொள்ளுங்கள். 

பின் சேமித்த அந்த ஃபைலை இரட்டை கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.. அப்பொது உங்கள் Locker.bat ஃபைல் உள்ள அதே இடத்தில் Locker என்ற பெயரில் ஒரு வெறுமையான ஃபோல்டர் உருவாகி இருக்கும். இனி உங்கள் ஆவணங்களை அதுனுள் போட்டு பின் மென்பொருளை (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்க அப்போது உங்கள் ஃபைலை பாதுகாக்கவா என்று கேட்டும் அதில் Y என்பதை அழுத்தி என்டர் செய்யவும் இப்பொது அந்த ஃபோல்டர் மறைந்து விடும். பின் தேவையான சந்தர்ப்பத்தில் (Locker.bat) ஐ இரட்டை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்ட்டை வழங்கி ஃபைலை மீள பெறலாம்..ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளை பத்திரமாக வையுங்கள்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER

:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.

goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"

attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"

echo Folder locked

goto End

:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==Your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker

echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
 :MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
 
அன்புடன்
உங்கள்
மாறன்....

Nov 23, 2011

பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?...

"வால் தெருவைக் கைப்பற்றுவோம்'' என்னும் போர் முழக்கம் அண்மைக்கால உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


வால் தெரு அமெரிக்க முதலாளித்துவத்தின் புகலிடம்! ""பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?'' என்னும் வெளிப்படையான கேள்வி அமெரிக்காவை மூச்சுத் திணறச் செய்துவிட்டது. உலகின் பாதி சிவப்பாகிவிட்ட காலகட்டத்தில்கூட, இப்படி ஒரு போராட்டம் அமெரிக்காவில் வேர் பிடிக்க முடியவில்லை.


உலகெங்குமுள்ள நாடுகள் சுரண்டப்படுவதால், குவிந்து வழிகின்ற செல்வத்தில் அடிமட்ட மக்களுக்குப் பங்கில்லை என்றாலும், வழிவதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பாவது அவர்களுக்கு இருந்தது. அதோடு அவர்கள் அமைதியடைந்தனர்.


இன்று "உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது வாழலாம்' என்னும் நிலைக்கும் மோசம் வந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்; கிடைக்கும் வேலைக்கும் போதிய ஊதியம் இல்லை என்பது இன்னொருபுறம்.


ஒபாமாவுக்கு முந்திய காலத்திலேயே இந்தச் சிக்கல் தோன்றிவிட்டது. ஆயினும், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று ஒபாமா தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்!


""இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த அந்த மக்கள் நாம்தாம்!'' ஒபாமாவின் இந்த முழக்கம் அமெரிக்கர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டியது. அந்தத் தருணம் வந்துவிட்டதாக மக்கள் நம்பினார்கள்.


மூடி இறுகிப் போயிருந்த கதவுகளை ஒபாமா திறந்துவிடப் போகிறார்; வாழ்க்கைச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்று எதிர்பார்த்திருந்தார்கள்.


பொருளாதார முறை மாறாமல் பீடத்தில் அமர்கின்ற மனிதர்கள் மாறுவதால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? ஒபாமா இன்று புறந்தள்ளப்பட்ட மனிதராகிவிட்டார்!


1989-ல் சோவியத் நாடு சீர்குலைந்து சிதறிச் சின்னாபின்னப்பட்ட பிறகு, தம்பட்டம் அடித்துக்கொண்டு உயர்ந்தெழுந்த தாராளமயமாக்கல் கொள்கை உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளை வெடித்துப் போகுமளவுக்குப் பெருக்கச் செய்தது.


அந்தக் கொள்கை உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தது. மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப. சிதம்பரமும் இந்தியாவில் அந்தக் கொள்கை ஈன்றெடுத்த மக்கள்தாம்!


நாளொன்றுக்கு 32 ரூபாய் வருவாய் உள்ளவனும், ஒரு கணவனும், மனைவியும் இரு மக்களும் வசிப்பதற்கு 77 மாடிகள் கொண்ட வீட்டை 7,000 கோடி ரூபாய்க்குக் கட்டிக் கொண்டுள்ள அம்பானியும் வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்த நினைக்கும் மன்மோகன் அரசின் கொள்கைகள் தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைதாம்.


ஒரு தனிமனிதன் தன்னுடைய சிறு தொழில் முறிந்து திவாலாகிப் போகின்றபோது கண்டுகொள்ளாத ஓர் அரசு, விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் கடனில் மூழ்குகின்றபோது கவலை கொள்கிறது. அரசு கை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கடமையாக்குகிறது அந்த நிறுவனம்; அப்படிச் செய்வது இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவியும் பரிந்துரைக்க முந்துகிறார்.


இதேபோல் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வங்கிகள் முறிவுற்றபோதும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நலிவுற்றபோதும், அவற்றுக்கு முட்டுக்கொடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் முனைந்து நின்ற நிலையில் மக்களிடம் ஏற்பட்ட கொதிப்புத்தான் இந்த "வால் தெருவைக் கைப்பற்றுவோம்' என்ற போராட்டம்.


மக்களின் வரிப்பணம் பெருமுதலாளிகளை முட்டுக்கொடுக்க ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? அவர்களின் நிறுவனங்களைக் காக்க அரசு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்?


வளம் கொழிக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கை என்றீர்களே! தொண்ணூறு பேரை உறிஞ்சிப் பத்துப் பேர் வாழ்வது என்ன கொள்கை?


வசதியுள்ள சிலருக்கும் வசதியற்ற பலருக்கும் உலகம் இதுவரை அறிந்திராத வகையில் இடைவெளி அகன்று போயிருப்பதுதானே இந்தக் கொள்கையால் ஏற்பட்ட பயன்?


பெருமுதலாளிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவதன் விளைவுதானே இந்த அராஜகப் போக்கு!


கூழுக்குப் போட உப்பில்லை என்பானுக்கும், பாலுக்குப் போடச் சீனி இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றுதான்! ஆனால், தேவை ஒன்றுதானா? எவனுடைய தேவை முன்னுரிமை உடையது?


"கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்னும் நூலில் சான்ரசுகின் சொல்வார்: ""ஒருவனிடம் பத்து ரூபாய் இருப்பதால் அவன் மகிழ்ச்சியடைவதில்லை; பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பத்து ரூபாய் இல்லாதபோதுதான் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அப்போதுதான் அடுத்தவனுக்கு ஒரு விலை குறிக்க முடியும்?''


தாராளமயமாக்கல் கொள்கை மேட்டுக்குடியினர்க்கும், அடிமட்ட நிலையினர்க்கும் இருக்கும் இடைவெளியை மென்மேலும் பெருக்குவதில்தான் உயிர்த்திருக்கிறது.


2008-ல் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கும் பொருளாதாரச் சீர்குலைவின் விளைவுதான் பெருமுதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே வெடித்துக் கிளம்பும் இந்தப் போராட்டம்!


கிரீசு நொறுங்கிவிட்டது; இத்தாலி தவியாய்த் தவிக்கிறது. அயர்லாந்து நன்றாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டு மக்கள்தான் நிறைவாக வாழ்கிறார்கள்?


அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் பிராங்பர்ட், ஸ்பெயினின் மாட்ரிட், போர்ச்சுகலின் லிஸ்பன், செர்பியா, மெக்ஸிகோ, பெரு, சிலி என 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் தெருவைக் கைப்பற்றுங்கள்' என்னும் போர்த் தீ கொழுந்து விட்டு எரிகிறது.


இந்தப் போராட்டத்தின் சிறப்பு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இதன் களங்களாக உள்ளன என்பதுதான். இன்னொரு சிறப்பு, குறிப்பான எந்தத் தலைவனாலும் இது வழிநடத்தப்படவில்லை என்பது. தானாக வெடித்துக் கிளம்பிய ஒன்று இது!


பிறிதொரு பெருஞ்சிறப்பு, இந்தப் போராட்டம் எந்தக் குறிப்பிட்ட தனியொரு ஆட்சியாளனுக்கும் எதிரானதில்லை.


கோபம் ஒபாமா மீதன்று, கடைப்பிடிக்கப்படும் பொருளாதார முறையின் மீதானது.


ஒபாமாவானாலும், புஷ் ஆனாலும், மன்மோகன் ஆனாலும், அத்வானி ஆனாலும், எவரானாலும் போர்டு நிறுவனத்துக்கும், அம்பானிகளுக்கும் சேவை செய்ய வந்தவர்களே!


2008-ல் பல மேலைநாடுகளைத் தாக்கிய பொருளாதார மந்தம் என்னும் நிலை இந்தியாவைத் தாக்கவில்லை என்று மன்மோகன் ஒரு முறை மகிழ்ந்தார்.


ஆனால், அதற்கு முன்னரே இந்தியாவின் நிலை கவலைக்கிடம். அங்கே 82 நாடுகளில் போராட்டம் என்றால் இந்தியாவில் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற ஒன்பது மாநிலங்களில் 60 மாவட்டங்களில் நம்முடைய ஆட்சியும் இல்லை; அரசியல் சாசனமும் இல்லை. அவை மாவோயியவாதிகளின் பிடியில் இருக்கின்றன.


ஆந்திரம் தொடங்கி நேபாளம் வரை அந்த இயக்கம் வேர் பிடித்து நிலைபெற்றிருக்கிறது.


இந்தியாவின் உள்துறை அமைச்சராகத் திகழும் ப. சிதம்பரம், ""மாவோயியம் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடுமையானது'' என்று சொல்கிறார். அவரால் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; மாவோயியத்தையும் ஒழிக்க முடியவில்லை.


அலைக்கற்றை ஊழலில் இவர் பெயரும் சேர்ந்து அடிபடத் தொடங்கிய உடனே, இவர் சனியின் பீடிப்புத்தான் இதற்குக் காரணம் என்று ஒரு நவக்கிரகக் கோயிலுக்குத் தன் மனைவி, மகன், மருமகளுடன் சென்று காக்கை மண்பொம்மையைத் தலையில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் மூன்று முறை பிராகாரம் வந்திருக்கிறார்.


மாவோயியத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்குக்கூட ஏதாவது ஒரு தீர்த்த யாத்திரைக்குச் சிதம்பரம் திட்டமிட்டு வைத்திருக்கக் கூடும்!


60 மாவட்டங்களில் மாவோயியவாதிகள் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன?


இந்தியா முழுவதும் வனச் செல்வம், மலைச் செல்வம், சுரங்கச் செல்வம் ஆகியவை கடந்த சில காலங்களாகக் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. ஆட்சியாளர்களும் தொழில் நிறுவனங்களும் கூட்டாளிகள்!


மதுரைக்குப் பக்கத்தில் கீழவளவில் இருந்த ஒரு மலையே காணாமல்போய், மலை இருந்த இடம் சமதளம் ஆகிவிட்டது.


அழகிரி ஆசீர்வாதம் மலைக்குக் கிட்டாமல், சில மனிதர்களுக்குக் கிட்டியமையால் மலை தன் ஆவியைத் துறந்துவிட்டது என்கிறார்கள் சுற்றுப்புறத்தில் வாழும் பொதுமக்கள்.


கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யத்தால் ஒரு சுரங்கமே சீனாவுக்கு ஏற்றுமதியானது; எல்லாம் நம் அரசின் துணையோடுதான்.


அதில் அடித்த கொள்ளையைக் கொண்டு ரெட்டி சகோதரர்களால் எடியூரப்பாவின் அரசை உருவாக்கவும் முடிந்தது; அவரைக் கண்ணீர் விட வைத்துக் கீழிறக்கவும் முடிந்தது.


மாவோயிய முறைகள் நியாயமானவை என்பதல்ல; சுரண்டல்காரர்களோடு கூட்டணி சேரும் ஆட்சியாளர்கள்தாமே மாவோயியவாதிகளின் பிறப்புக்குக் காரணம்.


பெருமுதலாளிகளின் கருவறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் வளர்கிறார்கள் என்பதுதானே மார்க்சீய அறிவு வாதம்.


மாவோயியவாதிகளோடு மன்மோகன் சிங்குக்குள்ள கோபமே கனி வளங்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை என்பதுதானே.


தாராளமயமாக்கல் என்பதன் தாரக மந்திரம் சந்தை. தன்னுடைய பேரழகு மனைவியின் மேகம் போன்ற பெருங்கூந்தல் கூட ஒரு தொழில்முனைவோனுக்குச் சந்தைப் பொருள்தான்!


"வால் தெருவைக் கைப்பற்றுவது' என்பதன் பொருள் சுரண்டலை ஒழிப்பது என்பதுதான்.


பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?


நன்றி: தினமணி

Oct 21, 2011

வெப் ஹேக்கிங் கத்துக்கணுமா??????...

எனக்கு மெயில் அனுப்பிய பாதிபேர் கேட்ட ஒரு விஷயம் Admin பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிக்கிறது? இந்த மாதிரி ஆர்வமா இருக்கறவங்களுக்குதான் இந்த Post.

Vulnerable Web App (DVWA)



Vulnerable Web App (DVWA) அப்படின்னு ஒரு Tool ஐ ஒரு Ethical Hacking Site ல் பாத்தேன், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பாத்தீங்கன்னா,
இது ஒரு PHP, My SQL Application.

இதை பயன்படுத்தி,

  • SQL Injection
  • XSS (Cross Site Scripting)
  • LFI (Local File Inclusion)
  • RFI (Remote File Inclusion)
  • Command Execution
  • Upload Script
  • Login Brute Force
மாதிரி Vulnerable attack பண்ண முடியும்.

இதை பதிவிறக்க,

http://sourceforge.net/projects/dvwa/files/dvwa-1.0.6.zip/download

ஒரு முக்கியமான விஷயம்,

இந்த Script ஐ உங்களோட Domain Space -ல Upload பண்ணிறாதீங்க....
அப்புறம் உங்களை வச்சு வேற யாராவது கத்துக்க போறாங்க... :-P

அன்புடன்

உங்கள்
மாறன்......
Read more on www.maran.co.nr

Aug 25, 2011

கீ போர்டில் கீ செயல்பாட்டினை மாற்ற...

கம்ப்யூட்டர் கீ போர்டில் நீங்கள் அனைத்து கீகளையும் பயன்படுத்து கிறீர்களா? இந்த கேள்விக்கு நாம் அனை வருமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, சில கீகளைப் பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்வோம். ஒரு சிலர் கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், பாஸ்/பிரேக் வலது விண்டோஸ் கீ அருகே உள்ள மெனு கீ போன்றவற்றைப் பயன் படுத்துவதே இல்லை. ஏன் இந்த கீகளைப் பயன் படுத்தவில்லை என்றால், வேறு சில செயல் பாடுகளுக்கு இந்த கீகளைப் பயன் படுத்தலாமே என்று நமக்கு எண்ணம் தோன்றுகிறதா? ஆமாம், செய் திடலாமே என்றும் ஆசை வருகிறது. ஆனால் எப்படி?

 எப்படி ஒரு கீயினை நம் விருப்பத்திற் கேற்றபடி செயல்பட அமைப்பது? ஒரு வழி ரெஜிஸ்ட்ரியை மாற்றுவது. ஆனால் பொதுவாக அதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில், எக்குத் தப்பாக ஏதாவது செய்துவிட்டால், பின்னர் கம்ப்யூட்டரே இயங்கா நிலை ஏற்பட்டுவிடும். இந்த சிக்கல்களில் உங்களுக்கு நல்லதொரு தீர்வைத் தரும் புரோகிராம் ஒன்று ஷார்ப் கீஸ் (Sharp keys) என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் மூலம், எந்த கீயிலும் இன்னொரு கீயின் செயல்பாட்டை அமைத்திடலாம், அதுவும் மிக எளிதாகவும் வேகமாகவும்.

நான் இந்த புரோகிராம் மூலம் எஸ்கேப் கீயினை கேப்ஸ் லாக் கீயாக மாற்றினேன். பின்னர் மீண்டும் அதனைப் பழையபடியே மாற்றி அமைத்தேன். இதே போல இந்த புரோகிராம் மூலம் எந்த கீயின் செயல்பாட்டினையும் மாற்றி அமைத் திடலாம். அது மட்டுமின்றி, ஒரு கீ எந்த செயல்பாட்டினையும் மேற்கொள்ளாமல் செயல் இழந்த கீயாகவும் அமைத்திடலாம். கீ ஒன்றில் அப்ளிகேஷன் ஒன்றையும் செட் செய்திடலாம். அல்லது போல்டர் ஒன்றையும் அமைத்திடலாம். எடுத்துக் காட்டாக, வால்யூம் எழாமல் இருக்க ஒரு கீயை நான் அமைத்தேன். ஒரு கீயில் மை டாகுமென்ட்ஸ் போல்டரை அமைத்தேன். அந்த கீயினை அழுத்தியவுடன், மை கம்ப்யூட்டர் போல்டர் விரிந்தது. ஆனால் எந்த மாறுதலை ஏற்படுத்திய பின்னரும், அதற்கேற்ப ரெஜிஸ்ட்ரியில் மாறுதல் செய்திட வேண்டும். அந்த வேலையை இந்த ஷார்ப் கீஸ் புரோகிராம் மேற்கொள்கிறது.

எனவே கீ அமைப்பை மாற்றிய பின், ரெஜிஸ்ட்ரியில் மாற்றங் களை அழுத்துவதற்கான கீயையும் அழுத் திய பின்னர், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்தால் தான், இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்படும். இல்லையேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த புரோகிராமினைப் பெற http://www.randyrants.com/2006/07/sharpkeys_211.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Aug 6, 2011

பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்...


எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.

இன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது.

இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கம்ப்யூட்டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.

இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால், மால்வேர்கள், கம்ப்யூட்டரில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பாக்ஸ் இயங்குகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பாக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிரா மினைப் பயன்படுத்துகிறது.

இது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்கு வதால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரின் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்குத் தொடர்பின்றி இன்டர்நெட் பிரவுசர் நடைபெறுகிறது.

"Browser in a box" என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு 'guest' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது.

இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த, அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பாக்ஸ் இயக்கப்பட்ட பின்னர், விண்டோஸ் மூலம் எந்த ஒரு பைலையும் அப்லோட் செய்திடவோ, அல்லது இன்டர்நெட்டி லிருந்து டவுண்லோட் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பிட் பாக்ஸ் இயக்கப்படும் போதும், புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இன்டர்நெட் அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

பிட்பாக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது.
பிட் பாக்ஸ் பிரவுசரை, இலவசமாக டவுண்லோட் செய்திட http://download. sirrix.com/content/pages/bbdl.htm என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த தளம் ஜெர்மானிய மொழியில் இருப்பினும், தரவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதில்லை.

உங்கள் பெயர், இமெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து டவுண்லோட் என்ற பட்டனை அழுத்தினால், டவுண்லோட் தளம் காட்டப்பட்டு, இது டவுண்லோட் ஆகும். இதன் பைல் அளவு 900 மெகா பைட் என்பது சற்று அதிகம் தான். எனவே டவுண்லோட் செய்திட அதிக நேரம் ஆகலாம். இணைய இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இதனை டவுண்லோட் செய்திட முயற்சிக்கவும்.

அன்புடன்

உங்கள்.

மாறன்...
www.maran.co.nr

Aug 3, 2011

கூகுள் மொழி பெயர்க்கிறது...

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.


மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.


இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன். அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது. இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது. I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது. வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jul 28, 2011

ஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒரே மென்பொருள் Universal Viewer...



கணினியில் ஒவ்வொரு வகையான வேலைகளுக்கும் ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள் , text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player , ஆபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office , Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.


இதற்கென்று இருக்கும் ஒரு மேம்பட்ட மென்பொருள் தான் Universal Viewer. இதன் மூலம் எல்லா வகையான மல்டிமீடியா மற்றும் ஆவணங்களை ஒரே மென்பொருளில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பெரும்பாலான கோப்பு வகைகளை பார்க்கும் படி ஆதரிக்கிறது.



இதன் மூலம் பார்க்கக்கூடிய கோப்புகளும் வகைகளும்.


1. Text Files - txt, binary, hex, unicode, Rtf, Utf-8


2. Image files - bmp, jpg, tiff, png, gif and etc


3. Internet files - html, xml, pdf


4. Multimedia files - avi, mpg, mp3, wmv and etc


5. MS Office files - doc, docx, xls, ppt


இத்தனை வகையான கோப்புகளையும் ஒரே மென்பொருளில் பார்ப்பதனால் நேரமும் மிச்சமாகும். வேறு மென்பொருள்களை தேடி அலையவும் தேவையில்லை. இந்த மென்பொருளை Right click மெனுவில் வரும்படி வைத்துக் கொண்டால் பலவகையான கோப்புகளை எளிதாக விரைவாக திறந்து படிக்கலாம். பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Universal Viewer

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jul 19, 2011

rundll32.exe பைலின் வேலையும் பயனும்...



விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது.

இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம்.

ராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.

கம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது.

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும்.

இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jul 2, 2011

நான்.. இனி செல்லாக் காசு....

சிறு பிள்ளைகளின் உள்ளங்கையில் கூட, அடம்பிடிக்காமல் உட்கார்ந்து கொள்ளும் தன்னடக்கம் மிக்கவன் நான். கீழே விழுந்தால் கூட ஓங்கி ஒலிக்காமல், மெல்ல சிணுங்குவேன். அன்று...ஆடவரின் சட்டைப் பைக்குள் நான் இருந்தால், அவர்கள் மகாராஜா. குட்டி குட்டி வட்டமாய், சுற்றி சுற்றி வந்த என்னை பெருமைமிக்க இந்திய அரசு இன்று, செல்லாக் காசாக்கி விட்டது.

ஆம்...நான் தான் 25 காசு பேசுகிறேன்... இன்னமும் உங்கள் வீட்டில் நான் இருக்கிறேன். உங்களிடமிருந்து விடைபெறும் முன், என்னைப் பற்றி, நான் வாழ்ந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்...படிக்கிறீங்களா?பிரிட்டீஷார் என் மதிப்பறிந்து, ஏக மரியாதை செய்தனர். அது ஒரு கனாக்காலம். ஒரு நாள் முழுக்க வயலில் வேலை செய்தால், என்னையே கூலியாக தந்தனர். அந்தக் கூலியில் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, அரிசி, பலசரக்கு பொருட்களை வாங்க உதவினேன். மற்றவர்களைப் போல வெறும் இரும்பல்ல, நான். நிக்கலும், வெள்ளியும் கலந்த கலவை. விலைமதிப்புள்ளவன். கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக என்னை உண்டியலில் இடும் போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டேன். இறைவனுக்காக என்னை அர்ப்பணிக்கின்றனரே என்று. வெள்ளியால் ஆன என்னை மட்டும் தனியாக பிரித்து, பொருட்கள் செய்ய பயன்படுத்திக் கொண்டனர். அந்தளவிற்கு பெருமையானவாக இருந்தேனே...


வியாபாரிகளிடம் அதிகளவில் சேரும் என் இனத்தவரை, வங்கியில் மூட்டையாக கொண்டு போய் தான் சேர்த்தனர். வங்கியாளர்களும் முகம் சுளிக்காமல், எங்களை எண்ணி மதிப்பிட்டனர். அப்போதெல்லாம் வெற்று காகிதத்திற்கு (ரூபாய்) அதிகம் பெருமையில்லை. 1956 ல் ஒரு பவுன் தங்கத்தின் விலையே 63 ரூபாய் தான். என்னை விலையாக கொடுத்து, தியேட்டரில் சொகுசான "பாக்ஸ்' இருக்கையில் அமர்ந்து சினிமாவை ரசித்தனர். டவுன் பஸ்சில் "25 காசு டிக்கெட்'...உங்களுக்கு ஞாபகமில்லையா? என்னை தந்தால், ஒரு "சென்ட்' பாட்டில், சீருடை தைக்க பயன்படும் ஒரு கஜம் காடாத்துணி, 60 பக்க நோட்டு வாங்கலாம். 
எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், ஒரு ரூபாயுடன் என்னையும் சேர்த்து, "ஒன்ணேகால் ரூபாயை குலதெய்வத்திற்கு முடிஞ்சு போடுங்க' என்றுக்கூறி, எனக்கு பெருமை சேர்த்தனர். முன்பெல்லாம், இறந்தவர்களின் நெற்றியில் என்னை வைத்த காலமும் உண்டு. அது போய் பல வருஷம் ஆச்சு..எனக்கு மதிப்பு குறைய ஆரம்பிச்ச பிறகு நெற்றியில என் இடத்த அண்ணன் ஒரு ரூவா பிடிச்சிடுச்சு. அந்த காலத்தில் என்னை வெள்ளி காசாக உருவாக்கி, மதிப்பு கொடுத்தனர்.


1931க்கு பின், பித்தளை, இரும்பு, குரோமியம் கலந்த காசாக மாற்றி, எனது மதிப்பை குறைத்தனர். அப்போது எனக்கு "நாலணா' என்று பெயர். அரைபடி பொறிக்கடலை, அச்சுவெல்லம் வாங்கும் அளவிற்கு எனக்கு மதிப்பு இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஓட்டலில் தந்தால் திருப்தியாக வயிராற சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டவர்கள்... இவ்வுலகைவிட்டு விடைபெற்றுவிட, நான் மட்டும் விதிவிலக்கா என்ன?எல்லோரும் ஏற்றி விட்ட விலைவாசியால்... இங்கு இனி என்னை தந்தால் என்ன கிடைக்கும்? எனவே நான் நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டேன். இனி, எங்கோ ஓர் மூலையில் அருங்காட்சியகத்தில் மட்டுமே என்னை காணமுடியும். இனி உங்களை பொறுத்தவரை, நான் ஒரு செல்லாக் காசு.

நன்றி தினமலர்...


அன்புடன்

உங்கள்

மாறன்...

www.maran.co.nr

Jun 25, 2011

கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிய...

சிலர் கம்ப்யூட்டரை எந்நேரமும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பார் கள். சற்று நேரம் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஹைபர்னேட் செய்து, பின்னர் மீண்டும் பணி செய்திட விரும்புகையில் இயக்க நிலைக்குக் கொண்டு வருவார்கள். பல இடங்களில் ஒரு கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்து வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை களில், கம்ப்யூட்டர் ஒன்று, அதனை பூட் செய்த பின்னர், எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிய ஆவலாய் இருக்கலாம். இதற்கான வழியினை விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ளது.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத்தில், இதனைக் காண்பதற்கான வழி முறைகள்:
டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Task Manager என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது (Ctrl+Shift+Esc) என்ற கீகளை அழுத்தவும். இப்போது டாஸ்க் மானேஜர் விண்டோ கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள டேப்களில் Performance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பிரிவில், உங்கள் கம்ப்யூட்டர் பூட் செய்த பின்னர் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்று காட்டப்படும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் (புரபஷனல் எடிஷனில் மட்டும்) ஸ்டார்ட், ரன் விண்டோ (Start>Run) செல்லவும். அதில் cmd என டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது டாஸ் இயக்கக் கட்டளைப் புள்ளி (Command Prompt) கிடைக்கும். இங்கு systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும். கம்ப்யூட்டர் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் எடுத்துக் கொண்டு, நேரத்தைக் கணித்துச் சொல்லும். இது நாள், மணி, நிமிடம் மற்றும் விநாடி என்ற அளவுகளில் காட்டப்படும்.

அன்புடன்

உங்கள்

மாறன்,,,

www.maran.co.nr

Jun 17, 2011

மைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்...

தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் (Malware Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்னைக் கான தீர்வுகள் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆகிய வற்றை கூடுமானவரை தவிர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் சி.டி. அல்லது யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்து இயக்கப்படக் கூடிய, மால்வேர் நீக்கும் புரோகிராம் (malware recovery tool) ஒன்றை இலவசமாகத் தந்துள்ளது. இதனை சிஸ்டம் ஸ்வீப்பர் (System Sweeper) என மைக்ரோசாப்ட் பெயரிட் டுள்ளது.


ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்ய முடியா தவர்கள், இன்டர்நெட் இணைப்பு இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாதவர்கள், இதனைப் பயன்படுத் தலாம்.

மேலும் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்பட முடியாமல், முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடு களையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

சிஸ்டம் ஸ்வீப்பர் விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் வகைகளுக்கெனத் தனித்தனியே தரப்பட்டுள்ளது. தேவைப் படுபவர்கள் தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ற வகையில் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் இஞ்சின் தான், ஸ்வீப்பர் விண்டோஸ் புரோகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்ற மாதம், மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் சேப்டி ஸ்கேனர் என்ற புரோகிராமினை வைரஸ், ஸ்பைவேர் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிய வெளியிட்டது. இந்த சேப்டி ஸ்கேனர், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் கூறும் இரண்டு மால்வேர் எதிர்ப்பு சாதனங்களும், மைக்ரோசாப்ட் தன் பணியினைக் குறைத்துக் கொள்வதற்காக என வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிஸ்டம் ஸ்வீப்பர் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தள முகவரி http://connect.microsoft.com/systemsweeper .

அன்புடன்

உங்கள்

மாறன்...

www.maran.co.nr

May 10, 2011

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க...



நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்கEuropean Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test fileஎன்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
Notepad

பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Notepad Save As

Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.

Notepad Save dialog

பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம.உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.

கீழே நான் நிறுவி உள்ள Avira ஆண்டிவைரஸ் check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்வதை கீழே காணலாம்.

avira virus alert
அன்புடன்
உங்கள்
மாறன்...

Apr 14, 2011

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிரமாதம்!

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.


இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.


இந்த தேர்தலில் இந்தக்காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட "கேன்வாஸ்' என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.


தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்... சபாஷ்!

நன்றி

தினமலர்

Apr 12, 2011

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய...

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

அன்புடன்
உங்கள்
மாறன்....
www.maran.co.nr
கருத்து சொன்னவர்கள் (Recently):