நீங்கள் பென் ட்ரைவினை ஒவ்வொரு முறை சொருகும் போதும் கணினியில் அதற்கான ஐகான் ஒன்று எப்போதும் போல தோன்றும். இதை பார்த்து பார்த்து சலிப்படைந்து விட்டீர்களா? இந்த படத்தை மாற்றி உங்களுக்கு பிடித்த படத்தை எப்படி வைப்பது என்று பார்ப்போம். 1. முதலில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்துவிட்டு அதை ஐகானாக மாற்றுங்கள்.இதற்கு IconSushi என்ற இலவச மென்பொருள் உதவும். இது பல வடிவங்களிலிருந்து ஐகானாக மாற்றுகிறது. (import: ICO/BMP/PNG/PSD/EXE/DLL/ICL, Export: ICO/BMP/PNG/ICL.) .இதைப்பெற IconSushi 2. Notepad ஐத்திறந்து கீழ்வரும் மூன்று வரிகளை அடித்துக்கொள்ளுங்கள். [autorun] label=ponmalar Icon=usb_icon.ico இதில் இரண்டாவது வரியில் label என்பதில் உங்கள் பெயரோ அல்லது உங்களுக்கு பிடித்த பெயரைக்கொடுங்கள். மூன்றாவது வரியில் உங்கள் ஐகானுக்குரிய பெயரை கொடுக்கவேண்டும். உங்கள் ஐகான் படம் கண்டிப்பாக பென் டிரைவில் இருக்க வேண்டும். 3.இந்த வரிகளை அடித்து முடித்து விட்டு "autorun.inf" என்ற பெயரில் பென் டிரைவில் சேமிக்க வேண்டும். முக்கியம் கண்டிப்பாக சேமிக்கும் போது முன்னும் பின்னும் மேற்கோள் குறிகள் இருக்க வேண்டும். 4. இறுதியாக ஐகான் படமும் autorun.inf கோப்பும் பென் டிரைவில் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். இந்த இரண்டு பைல்களையும் யாருக்கும் தெரியாதவாறு மறைத்து ( Hidden ) வைத்து கொள்ளலாம். அதற்கு பிறகு நீங்கள் ஒவ்வொரு தடவையும் பென் டிரைவை செருகும் போதும் உங்களின் விருப்ப ஐகான் தான் தோன்றும். நன்றி பொன்மலர்... அன்புடன் உங்கள் மாறன்.... |
Oct 6, 2010
Posts by : Admin
பென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...