Jul 20, 2010

இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம்:கம்ப்யூட்டரில் "டைப்' செய்ய வசதி...


இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை கம்ப்யூட்டரில் "டைப்' செய்ய வசதியாக புதிய "எழுத்துரு (Font)', "போராடியன் டெக்னாலஜிஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், சமீபத்தில் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல, நமது நாட்டின் ரூபாய்க்கும்அடையாள சின்னமாக விளங்கும் வகையில் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சின்னத்தை, ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக சேர்ந்துள்ள உதயகுமார் வடிவமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்திய ரூபாய்க்கான சின்னத்தை, சர்வதேச அளவில் பொதுவான கீ-போர்டுகளில் பயன்படுத்தும் வகையில், "போராடியன் டெக்னாலஜிஸ்' நிறுவனம்புதிய "எழுத்துரு (Font)' வடிவமைத்துள்ளது. மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், கம்ப்யூட்டர் கீ-போர்டில், "டாப்' கீக்கு மேல்புற கீயை இயக்கினால், இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை, "டைப்' செய்யும் வகையில் புதிய "எழுத்துரு (Font)' வடிவமைத்துள்ளது.

இந்த புதிய சின்னத்தை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வசதியாக http://blog.foradian.com என்ற இணையதள முகவரியிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்து கொள்ளவும் வழி வகை செய்துள்ளது.இதுகுறித்து, "போராடியன் டெக்னாலஜிஸ்' அதிகாரிகள் கூறுகையில், ""இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம் முழுமையாக புழக்கத்திற்கு வர சில வருடங்களாகும். கம்ப்யூட்டர் கீ-போர்டில், "டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை இயக்கினால் செயல்படும் வகையில் புதிய "எழுத்துரு (Font)' வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் கீ-போர்டில்,"டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை அதிகமானவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், அந்த கீ தேர்வு செய்யப்பட்டது. இதுவரை இந்த "எழுத்துரு (Font)' ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் "டவுண்லோடு' செய்துள்ளனர்,'' என்றனர்.நட்பு வட்டார இணையதளங்களான பேஸ்புக், ஆர்குட் பயன்பாட்டாளர்கள் பலர் இந்தபுதிய சின்னத்தை, "டவுண்லோடு' செய்து பயன்படுத்த துவங்கியுள்ளனர்.


"எழுத்துரு (Font)' பயன்படுத்தும் முறை:"டவுண்லோடு' செய்யப்பட்ட "எழுத்துரு (Font)'"காபி' செய்து, c:windows/fonts  என்ற "போல்டரில்' பேஸ்ட் செய்யவும். பின் "வேர்ட் பைலை' திறந்து கீ-போர்ட்டில் "டாப்' கீக்கு மேல்புறமுள்ள கீயை இயக்கவும். பின், டைப் செய்யப்பட்ட எழுத்தை "செலக்ட்' செய்து, மேலே "ஸ்டேடஸ் பாரில்' உள்ள upee_foradian fontசெலக்ட் செய்யவும். இந்திய ரூபாயக்கான புதிய சின்னத்தின் எழுத்து திரையில் தெரியும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

1 comments:

Anonymous said...

Hi there I am so thrilled I found your blog, I really found you by accident,
while I was researching on Askjeeve for something else, Nonetheless I am here now and would just like to say thanks a lot for a incredible post and a all round thrilling blog (I also love the theme/design), I don't have time to read through
it all at the minute but I have bookmarked it and also included your
RSS feeds, so when I have time I will be back to read
a lot more, Please do keep up the superb work.


My blog post :: minecraft.net

Post a Comment

மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

கருத்து சொன்னவர்கள் (Recently):