வரிசைத் தலைப்புகள் பிரிண்ட்:
பல பக்கங்களில் அமைந்திருக்கும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை பிரிண்ட் செய்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் வரிசைகளுக்கான தலைப்புகள் அச்சடிக்கப்பட்டால் தான், அவற்றின் முழுத் தகவல்களையும் அறிய முடியும். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் 8 நெட்டு வரிசைகளும், 500 படுக்கை வரிசைகளும் இருந்தால், நெட்டு வரிசைக்கான தலைப்புகள், முதல் படுக்கை வரிசையில் மட்டுமே இருக்கும். இதனைப் பிரிண்ட் செய்கையில் முதல் பக்கத்தில் மட்டுமே இந்த தலைப்புகள் அச்சாகும். தொடர்ந்து வரும் பக்கங்களில் அச்சாகாது. மற்ற பக்கங்களிலும் இவை தேவை என்றால், கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1.எந்த ஒர்க் ஷீட்டில் இந்த தேவைகள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த ஒர்க்ஷீட்டில் எங்காவது கிளிக் செய்து, பின் பைல் (File) மெனுவில் பேஜ் செட் அப் (Page setup)பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் ஷீட் (Sheet) என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் பிரிண்ட் டைட்டில்ஸ் (Print Titles) என்பதன் கீழாக, Rows to repeat at top, Columns to repeat at left என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். இதில் கிளிக் செய்தால் நீளமான ஒரு சிறிய விண் டோ கிடைக்கும். இதில் எந்த வரிசை என்பதனை என்டர் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
3 அதன் பின் பிரிண்ட் தேர்ந்தெடுத்து ஒர்க்ஷீட்டைனை பிரிண்ட்செய்தால் மேலாகவும் இடது புறமாகவும் தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்தின் மேலாகவும் அச்சிடப்படும்.
எக்ஸெல் பங்ஷன் கீகள்
F1 விண்டோ பேனல் எதுவானாலும் அதற்கான உதவிக் குறிப்புகள் பெற
F2 எந்த செல்லையும் எடிட் செய்திட கீ அழுத்த
F3 பார்முலாவில் பெயரை செருக
F4 முந்தைய கட்டளையை திரும்ப செயல்படுத்த
F5 Go to டயலாக் பாக்ஸ் செயல்படுத்த
F6 ஒர்க்ஷீட்டில் பேனல்களுக்கு இடையே செல்ல
F7 ஒர்க் ஷீட்டில் ஸ்பெல்லிங் செக் செய்திட
F8 ஸ்டேட்டஸ் லைனில் எக்ஸ்டென்டட் மோட் பெற
F9 ஒர்க் ஷீட்டில் கால்குலேஷன் மேற்கொள்ள
F10 மெயின் மெனு பார் தேர்ந்தெடுக்க
F11 அப்போது உள்ள ஒர்க்ஷீட்டில் சார்ட் ஒன்றை செருக
F12 save அண் டயலாக் பாக்ஸ் செயல்படுத்த
வேர்டில் பாரா மார்க்கர் உண்டா?
வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில் நாம் பல பாராக்களை அமைக்கிறோம். பாரா என்பது என்ன? ஒரு சொல்லையும் இன்னொரு சொல்லையும் இடைவெளி விட்டு அமைத்தால், இந்த இரண்டு சொல்லும் இரண்டு பாராக்களாக இருக்குமா? அல்லது ஒரு பாராவில் இத்தனை சொற்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என விதி உள்ளதா? முதலில் கூறியபடி இரண்டு பாராக்களின் இடைவெளியை வைத்துத்தான் நாம் பாரா என்கிறோம். பொதுவாக ஒரு பொருள் அல்லது அது குறித்த விளக்கம்,விவாதம், கருத்து போன்றவற்றை வைத்துத்தான் நாம் பாரா பிரிக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டருக்கு நாம் தரும் கருத்து, விவாதம் எல்லாம் தெரியாது. நாம் பாராவை அமைக்கும் போது ஒரு மார்க்கரைத் தானாக அமைத்துக் கொள்ளும். எனவே இரு பாரா மார்க்கர்களுக்கு இடையே உள்ளவை தான் பாரா என்று எடுத்துக் கொள்கிறது. இந்த மார்க்கர்கள் எங்கு உள்ளன. இவற்றை நாம் பார்க்க முடியாதா? என்ற கேள்வி எழுகிறதா? பாரா மார்க்கர்கள் டாகுமெண்ட்டில் காட்டப்படுவதில்லை. இதனை அவசியம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஸ்டாண்டர்ட் டூல் பாரில் பார்த்தால் பாரா மார்க்கர் அடையாளம் காணப்படும். சில வேளைகளில் இந்த பாரா மார்க்கர் அடையாளம் மற்ற அடையாளங்களுடன் இணைத்து மறைத்துவைக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட இணைந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் விரியும் கட்டத்தில் அனைத்து அடையாளங்களையும் காணலாம். இந்த பாரா அடையாளத்தில் கிளிக் செய்தால் உங்கள் டெக்ஸ்ட் முழுவதும் பாரா மார்க்கர் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இது காட்டப்படும். அது மட்டுமின்றி நீங்கள் இரு சொற்களுக்கிடையே ஸ்பேஸ் ஏற்படுத்தி இருந்தால் அங்கெல்லாம் அந்த சொற்களுக் கிடையில் புள்ளி ஒன்று காட்டப்படும். இவை பிரிண்ட்டில் கிடைக்காது. இவை மீண்டும் மறைக்கப்பட வேண்டும் என்றால் அதே மார்க்கரில் மீண்டும் கிளிக் செய்திடுங்கள். மறைந்துவிடும்.
அன்புடன்
உங்கள்
மாறன்......
1 comments:
What i do not realize is actually how you are no longer actually a lot more smartly-favored
than you may be now. You are so intelligent. You recognize therefore significantly when it comes to this
subject, produced me individually imagine it from numerous various angles.
Its like men and diet plans for women to lose Weight;
http://dietplansforwomentoloseweightfast.com, don't seem to be involved unless it is something
to accomplish with Girl gaga! Your personal stuffs outstanding.
Always deal with it up!
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...