Apr 28, 2010

உங்கள் ஐ.பி-யை மறைக்க...

உங்கள் ஐ.பி-யை மறைக்க Online proxy, proxy software என பயன்படுத்துகிறீர்களா? அதற்கு மாற்றாக மிக எளிமையான மற்றும் விரைவான வழி VPN.

இந்த இலவச VPN வசதியை www.itshidden.com தளம் வழங்குகிறது. இதனை எப்படி உபயோகிப்பது,
முதலில் அந்த தளத்தில் இலவச உறுப்பினராகுங்கள்,
அதில் பதிவு செய்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு ஒரு புதிய VPN ஐ உங்கள் கணிணியில் setup செய்யுங்கள்.












இது பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

அன்புடன்
உங்கள்
மாறன்...
For more info: www.maran.co.nr

Apr 25, 2010

மாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு...

எப்போதும் கணினி பற்றி பேசி அலுத்துபோய் விட்டது. அதனால் தான் இன்று கொஞ்சம் வித்தியாசம்....

அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.

ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.

அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.

தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா... என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.  உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம்  என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.

அப்பாடா... தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.

`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று...  அவனை நீ சாப்பிடு. இல்லை... கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.

அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.

சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.

`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும்.  கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால்,  உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன். உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை  கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும்.  உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.

தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது. நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.

அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை.  இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன். இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே...' என்றது.

`தவறு செய்துவிட்டோமே...'என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.

மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.

பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.

தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.

நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க...' என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.

பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?   முதலில் மாமியார்களுக்கு... மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். `நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்' என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள். பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள். நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள். மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள். பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல. அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள். நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.
இனி, மருமகள்களுக்கு...

டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.

எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்' என்று சொல்லி பாருங்கள். `மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்' என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.

வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான். அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.

சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.

வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள். அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.

நன்றி
அன்புடன்
மாறன்....
www.maran.co.nr

Apr 24, 2010

Chat -ல் ஐ.பி யை கண்டுபிடிக்க புதிய வழி...

Chat பண்ணும் பொழுதோ அல்லது யாராவது நண்பர்களுடைய ஐ.பி யை கண்டிபிடிக்க வேண்டும் என்று சிலர் மின்னஞ்சலில் கேட்டிருந்தனர். அது எப்படி என்பதனை விளக்கியுள்ளேன்.



1. முதலில் IP Finder Script ஐ பதிவிறக்கவும்.

2. அந்த Archive -ல் ip.php மற்றும் ip_log.txt என்ற இரண்டு கோப்புகளையும் Extract
செய்யவும் .

3. அந்த இரண்டு கோப்புகளையும் ஏதவது ஒரு இலவச Hosting provider -ல் Upload
செய்யவும்.

4.இப்போது www.yourname.x10hosting.com/ip.php என்ற லிங்க் ஐ உங்கள் நண்பருக்கு
chat-ல் அனுப்பவும். (Url ஐ ஷொர்ட் ஆக்குவது, ip.php -யை index.php ஆக்குவது
என முடிந்த வரை சந்தேகம் வராமல் பண்ணுங்கள்)


5.இப்போது உங்கள் நண்பர் அந்த லின்க்-கை கிளிக் செய்தால், அவரது ஐ.பி ip_log.txt Fileல் 79.93.144.25 Thursday 29th of Dec 2009 05:31:27 AM என்பது போல இருக்கும்.

இது பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்...

அன்புடன்
உங்கள்
மாறன்...

Apr 10, 2010

எக்ஸெல் கடவுச்சொல் தொலைந்து போனால் அதை கண்டு பிடிக்க ஏதாவது உபாயம் உண்டா....

நமது நண்பர் தீபக் வாசுதேவன் அவர்களுக்காக இந்த பதிப்பை வெளியிடுகிறேன்.
நாம் ஒரு சில excel File களை, பாதுகாப்பு கருதி கடவுச்சொல் போட்டு வைத்திருப்போம்.
அனால் நாளடைவில் அதை மறந்து விடுவோம். அதற்கான தீர்வு...

இதோ இந்த லிங்கை கிளிக் செய்து install செய்யவும். ----> Download

பிறகு இந்த program ஐ ஓபன் செய்து password கண்டுபிடிக்க வேண்டிய file location ஐ கொடுக்கவும்.
பிறகு Romove button ஐ அழுத்தவும். அவ்வளவுதான், உங்களுக்கான அடுத்த File password இல்லாமல் ரெடி.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Apr 9, 2010

1 ஜிபி அளவிலான மிக பெரிய கோப்புகளை உங்கள் நண்பருக்கு அனுப்ப...

நண்பர்களே உங்களுடைய கணிணியில் உள்ள நெருப்பு நரி உலாவி வழியாக அனைவரும் இணையத்தளத்தில்
உலா வருகின்றனாரா.  உங்கள் உலாவியை உபயோகிப்பவர்கள் ஆளுக்கொரு ஆடு - ஆன் உபயோகிக்கன்றனரா.  இதை தடுத்த நிறுத்தலாம் சுலபமாக.

முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியை திறந்து கொள்ளுங்கள்.


அதிலுள்ள முகவரி தட்டச்சு செய்யுமிடத்தில் about:config என்று தட்டச்சு செய்து என்டர் தட்டுங்கள்


I'll be careful, I promise! என்று ஒரு பட்டன் தென்படும் அதை கிளிக் செய்யுங்கள்.


அதில் Filter என்னுமிடத்தில்
xpinstall.enabled  என்று டைப் செய்தால் கீழே தெரிய வரும்


அதை வலது கிளிக் செய்து Toggle என்பதை கிளிக் செய்து வெளியேறுங்கள்.


நெருப்பு நரி உலாவியை ஒருமுறை மூடி திறங்கள்.


முடிந்தது இனி உங்கள் உலாவியில் நீங்கள் மட்டுமே ஆடு ஆனை நிறுவ முடியும்.


மீண்டும் ஆடு -  ஆன் நிறுவ வேண்டுமெனில் இதே முறையை பின்பற்றுக.


நீங்கள் வைத்திருக்கு .swf வகையான கோப்புகளை எடிட் செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது




மென்பொருள் தரவிறக்க சுட்டி


நீங்கள் வைத்திருக்கும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் தளம் நிறைய இருக்கிறது அவையனைத்தும் 100 எம்பி முதல் 500 எம்பி வரையிலான கோப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் இந்த தளத்தில் ஒரு கோப்பின் அளவும் 2 ஜிபி வரை தரவேற்ற முடிகிறது.  உங்களிடம் 2 ஜிபி வீடியோ கோப்புகள் இருந்தால் எளிதாக இந்த தளத்தில் தரவேற்றலாம். ஆனால் பொறுமை வேண்டும் அதே உங்கள் சிறு கோப்புகளை எளிதாக வேகமாக தரவேற்றுகிறது.  சோதித்து பார்க்க இணையத்தள சுட்டி


இதை பகிர்ந்த நண்பர் வடிவேலன் அவர்களுக்கு நன்றி.


என்றும்
அன்புடன்
உங்கள்
மாறன்.....

Apr 2, 2010

கீகளை மாற்றி அமைக்க முடியுமா...

கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கீகளை மாற்றி அமைக்க முடியுமா?இந்த கேள்வி சற்று
ஆபத்தானதுதான் என்றாலும் சிலருக்கு இந்த கட்டாயத் தேவை அவ்வப் போது
ஏற்படத்தான் செய்கிறது.குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் கீகள் அருகே
ஒரு சில கீகள் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக வலது புறம் உள்ள விண்டோஸ் கீ மற்றும் அதன் அருகே உள்ள
மெனு கீ ஆகியவற்றை கூறலாம்.பல வேளைகளில் இவற்றை அழுத்தி நாம் ஏமாறுவது
உண்டு.அப்போது இந்த கீயை நாம் விரும்பும் கீயாக மாற்றி விடலாமே என்று கூட
எண்ணுவோம்.

கம்ப்யூட்டர் விளையாட்டுகளை அதிகம் விளையாடுவோரும் இது போல விருப்பம்
கொள்வார்கள்.விளையாட்டுகளில் சுடுதல்,பறத்தல் போன்ற செயல்களுக்கு சில
கீகள் தரப்படும்.இவை ஒரு சிலருக்கு வாகாக இல்லை என்றல் மாற்றி அமைத்தால்
என்ன என்று எதிர்பார்ப்பார்கள்.

குறிப்பாக விளையாட்டுகளில் பல பயன்பாடுகள் ஆல்ட் மற்றும் கண்ட்ரோல்
கீகளிலும் ஸ்பேஸ் பாரிலும் ஒதுக்கப்படுகின்றன.அதனால் தான் பெரும்பாலும்
இந்த கீகளுக்கு அருகே அமைந்துள்ளன.விண்டோஸ் கீயினால் விளையாட்டில்
குறுக்கீடு ஏற்படுகிறது.இந்த கீயை முடமாக்க முடியுமா என்றும் பலர்
விரும்புகின்றனர்.

விண்டோஸ் கீ பல பயன்பாடுகளுக்கு பக்க பலமாக உள்ளது.எனவே இதனை முட மாக்கக்
கூடாது.வேண்டுமானால் அந்த கீயின் பயன் பாட்டினை வேறு ஒரு கீக்கு மாற்றலாம்.

அதாவது
விண்டோஸ் கீயினை வேறு ஒரு கீயில் வைத்து விடலாம்.இந்த செயல்பாட்டினை
மேற்கொள்ள உங்களுக்கு ஒரு சிறிய புரோகிராம் தேவைப்படும்.அந்த இலவச
புரோகிராம் பெயர் KeyTweak என்பதாகும்.இந்த புரோகிராம் http://webpages.charter.net/krumsick என்ற
முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.இதன் மூலம் உங்கள் கீ போர்டில்
உள்ள கீகளை நீங்கள் விரும்பும்படி முற்றிலுமாக கூட மாற்றி அமைக்கலாம்.

முதலில் மேலே சொன்ன தளத்திற்கு சென்று Keyboard Remapper v2.3.0
என்ற புரோகிராமினை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்
செய்யவும்.இது மிகவும் சிறிய,எளிய,முற்றிலும் இலவச புரோகிராம்.இதன் அளவு
281 கே.பி ஆகும்.

இன்ஸ்டால் செய்திட்ட பின் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ஆல் புரோகிராம்ஸ்
என்பதனை கிளிக் செய்து இந்த புரோகிராம் இருப்பதனை பார்த்து
இயக்கவும்.டெஸ்க் டாப்பில் இந்த புரோகிராமுக்கான ஐகான் பதியப்படாது
என்பதால் இந்த வேலை .இந்த புரோகிராமினை இயக்கினால் கீ போர்டில் உள்ள கீகள்
தெரியும். ஆனால் இவற்றில் எழுத்துகள் இருக்காது.அதற்க்கு பதிலாக எண்கள்
இருக்கும்.கீ போர்டு அமைப்பை வைத்து நீங்கள் தான் எந்த கீக்கு எந்த எண்
எனக் கண்டுபிடிக்க வேண்டும்.இதுவும் எளிதுதான்.உங்கள் மவுஸ் அந்த எண்
அருகே சென்றால் அது எந்த கீகானது எனக் காட்டும்.


இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் எண் 59.வலது புறம் உள்ள விண்டோஸ்
கீயின் எண் 63 .இப்போது இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் வலது
கோடிக்கு ,எடுத்துக்காட்டாக மைனஸ் அடையாளம் உள்ள கீக்கு மாற்ற
விரும்பினால் (இந்த கிதான் அதிகம் பயன்படாத கீ ஆகும்.)எனவே எண் 59 ஐ மைனஸ்
கிக்கான 105 எண்ணாக மாற்றிவிடலாம்.இது போல எந்த கீக்கான பயன்பாட்டையும்
வேறு ஒரு கீக்கு மாற்றி விடலாம்.

Read more: http://www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....

கருத்து சொன்னவர்கள் (Recently):