Nov 28, 2009

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?


1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.

2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)

3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.

கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!

ப்பூ இவ்வளவுதான் !!!

நன்றி
சூர்யா கண்ணன்

Nov 19, 2009

இலவச லேப்டாப் வாங்கலாம் வாருங்கள்

நண்பர்களே முன்பு ஒரு பதிவில் இலவச டிஷர்ட் வாங்குவதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுபோல இலவச லேப்டாப் வழங்குகிறார்கள்.  சுட்டி

இங்கு சென்று ரெஜிஸ்டர் செய்தால் போதும். உங்களை பின் தொடர்ந்து 25 பேர் ரெஜிஸ்டர் செய்தால் போதும் என்கிறது இந்த வலைத்தளம் முயற்சி செய்து பாருங்கள்.

முன்பு குறிப்பிட்டிருந்து டி-ஷர்ட் முற்றிலும் உண்மையே எனக்கு ஒரு டி ஷர்ட் அனுப்பி வைத்திருந்தனர். சுட்டி

டிஷர்ட் வாங்கியவர்கள் கூறினால் அடுத்த பதிவில் அவர்கள் பெயரை வெளியிடலாம்.  மின்னஞ்சல் அலல்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.





ரீடரில் படிக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த தளம் தமிழ் அன்பர்கள் அனைவரையும் சென்றடைய உங்கள் ஆதரவு தேவை. உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். ரீடரில் படிக்கும் அனைவருக்கும் நன்றி.

நன்றி
மாறன்
 
   

Nov 17, 2009

மென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ


கணினியில் இயங்குதளம் செயலிழந்து போகும் போது
மீண்டும் நிறுவ வேண்டி இருக்கும். நீங்கள் நிறுவி வைத்து இருந்த அனைத்து மென்பொருள்களையும் இழக்க வேண்டி வரும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட எளிதான
வேலையாக இருக்கும். ஆனால் தேவையான
மென்பொருள்களை பயர்பாக்ஸ், VLC, சாட்டிங் மென்பொருள்  என்று  மீண்டும் இணையத்தில் தேடி ஒவ்வொன்றாக தரவிறக்கி
 நிறுவது சலிப்படி தரக்கூடிய ஒன்று.


இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது.
ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை
தேர்ந்தெடுத்து கொண்டு ஒட்டு மொத்தமாக கணினியில் நிறுவிடலாம்.


நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள்.
அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள்
தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.





இப்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.





நிறைய வேலையும் மிச்சம். உங்கள் நேரமும் மிச்சம்.


நன்றி TVS50...
அன்புடன்
மாறன்



கருத்து சொன்னவர்கள் (Recently):