Jan 23, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்...



விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.

அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


அன்புடன்
உங்கள்
மாறன்...

Jan 22, 2011

புத்தாண்டு கம்ப்யூட்டர் சபதங்கள்...



புதிய ஆண்டு 2011 பிறந்து தவழத் தொடங்கிவிட்டது. தங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட், அல்லது இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு, சில புத்தாண்டு சபதங்களை எடுக்கச் சொல்வோமா! வழக்கமாக நாம் சில சபதங்களை எடுப்போம். இன்று முதல் உடற்பயிற்சி, புகைப்பதை நிறுத்து, எடையை எப்படியாவது குறை, குறைவாகச் செலவழி, அதிகமாகச் சேமி என ஒவ்வொரு ஆண்டும் எதனையாவது உறுதியாகச் சொல்வோம். இந்த சபதங்களின் பின்னணியில் இருப்பது தனி மனித ஒழுக்கம் பேணுவதே.

இங்கு நாம் மற்றவர்களுக்கு இன்னல் இன்றி, அனைவரும் சந்தோஷமாக இருக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

கீழ்க்கண்ட சபதங்களை எடுத்துச் செயல்படுத்து வதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதிலும் இன்டர்நெட்டை அணுகிப் பயன்படுத்து வதிலும் சிக்கல்கள் குறையலாம்; குறைவான தவறுகளை செய்யலாம்; மால்வேர் தாக்குதல் களிலிருந்து தப்பிக்கலாம். இவற்றைப் பார்ப்போமா!

1.அனைத்து டயலாக் மற்றும் எச்சரிக்கை செய்திகளையும் படிப்பேன். எடுத்துக் காட்டாக, இப்படிச் செய்தால், இந்த பைல் ஒரேயடியாக நீக்கப்பட்டுவிடும் என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகையில், இந்த கட்டம் என்ன சொல்லப்போகிறது என்று உதாசீனப்படுத்தினால், பைல் அவ்வளவுதான்.

2. நான் என்னுடைய பைல்களை அடிக்கடி சேவ் செய்வேன். பல புரோகிராம்களில் தானாக சேவ் செய்திடும் வசதி இருந்தாலும், அவை குறிப்பிட்ட காலக் கெடுவில் தான் அந்த வசதியை இயக்கும். எனவே அடிக்கடி சேவ் செய்வது, உங்கள் உழைப்பைக் காப்பாற்றும். அதே போல பைலை எடிட் செய்கையில், தனித்தனியே சேவ் செய்திடுவேன். ஏனென்றால், அப்போதுதான் எடிட் செய்த மாற்றங்கள் இல்லாத பழைய நிலையில் உள்ள பைல் வேண்டும் எனில், அந்த பைல் நமக்குக் கிடைக்கும்.

3. என்னுடைய பைல்களின் பேக் அப் காப்பியை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எடுக்காமல் அடிக்கடி எடுப்பேன். ஏனென்றால் நாம் பதிவு செய்திடும் சிடிக்கள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஹார்ட் ட்ரைவ்/பிளாஷ் ட்ரைவ் படிக்க இயலா நிலைக்குத் தள்ளப்படலாம்.

4. மற்றவரிடம், கம்ப்யூட்டர் பிரச்னைக்கு உதவி கேட்கையில், என்னுடைய பிரச்னையைத் தெளிவாகக் கூறுவேன். இது மிக முக்கியம். எந்த ஒரு சிறிய பிரச்னையாக இருந்தாலும், இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு எண், பிரவுசர் மற்றும் என்ன செய்திடுகையில் கம்ப்யூட்டர் முடங்கிப் போனது, புதிதாக இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் ஆகிய தகவல்களைக் கூறிப் பின்னர் பிரச்னையைக் கூற வேண்டும்.

5. பேஸ்புக் அல்லது பிற சமுதாயத் தளங்களில் போட்டோக்களை போஸ்ட் செய்கையில் பல முறை யோசிப்பேன். அப்படியே போட்டோக்களை தளங்களுக்கு அனுப்பி என் பக்கத்தில் அமைத்தாலும், அவற்றை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை வரையறை செய்திடுவேன். இதனை எல்லாரும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், 20 வயதில் ஒருவர் தன் போட்டோவினை ஒரு சமுதாய தளத்தில் பேஸ்ட் செய்தார். ஆனால் அதனால், அவரின் 32 ஆவது வயதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது.

6. என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்றைய நாள் வரை மேம்படுத்தி வைத்துப் பயன்படுத்துவேன். அப்போதுதான், அண்மைக் காலத்திய வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அணுக விடாமல் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைக் காத்திட முடியும்.

7. இணையத்தில் பார்ப்பதை எல்லாம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின்னர் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவில்லையே என்று குற்றம் சொல்ல மாட்டேன். தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வது, கம்ப்யூட்டர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்களின் செயல்பாட்டு வேகத்தை மட்டுப்படுத்தும்.

8. இமெயில் கடிதங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்ப மாட்டேன். பல லட்சம் டாலர் உள்ளது. உங்கள் வங்கி கணக்குக் கொடுத்தால், 10% உங்களுக்கு. உங்களுக்கு இமெயில் லாட்டரி கிடைத்துள்ளது. வங்கி தன் அக்கவுண்ட்கள் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அமைக்கிறது. உங்கள் கணக்கு விபரத்தைக் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் --- என்பன போன்ற செய்திகளை முழுமையாகப் படிக்காமல், ட்ரேஷ் பெட்டியில் கூடத் தங்கவிடாமல் அழிப்பேன்.

9.செக்யூரிட்டி கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், பாஸ்வேர்ட்களைப் போல அவற்றைப் பாதுகாப்பேன். ஏனென்றால், அவையும் மிக முக்கியமானவையே. ஹேக்கர்கள் இது போன்ற தகவல்களை வைத்து,உங்கள் தகவல்களைத் திருட முடியும்.

10. மற்ற இன்டர்நெட் பிரவுசர்களையும் பயன்படுத்துவேன். ஒரு பிரவுசரை மட்டுமே பயன்படுத்த மாட்டேன். அப்போதுதான், ஒரு பிரவுசர் பழுதானாலும், அடுத்த பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வர முடியும்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன புத்தாண்டு சபதங்களுடன் ஒப்பிடுகையில், நம் கம்ப்யூட்டருக்கான சபதங்கள், பின்பற்ற மிகவும் எளிமையானவையே. பின்பற்றக் கூடியவையே. எனவே நம் கம்ப்யூட்டர் பணியில் தொய்வும், முறிவும் ஏற்படாமல் இருக்க இந்த சபதங்களை எடுத்துக் கொள்ளுமாறு தரப்பட்டுள்ளது.


அன்புடன்
உங்கள்
மாறன்....

Jan 15, 2011

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்....

அன்புடன்
உங்கள்
மாறன்....

Jan 13, 2011

குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு...

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.  நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட்டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012  ஆம் ஆண்டில் இந்த  பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. பிடிஎப் வியூவர்  sandbox   என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது.  இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான். இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும். சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் கிடைக்கும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...
For mor info: www.maran.co.nr

Jan 12, 2011

பேஸ்புக் தகவல் தரவிறக்கம்...


நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது.

பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர்.

இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்.

உள்ளே நுழைந்த பின்னர்,Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர்Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்துLearn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும்.

நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும்.

இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...
For more info: www.maran.co.nr

Jan 5, 2011

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்...


சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.


பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.

இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.

நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places):

இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.

நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த:

உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.

முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும்.

அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.

3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம்.

உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

4. அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு?

எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

5. அணுகுவதற்குத் தடை:

உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம்.

Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

6.இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம்.

இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும்.

Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.

பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.

அன்புடன்
உங்கள்
மாறன்....



விண்டோஸ் அப்டேட் சிக்கல்கள்...


எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தும் பல வாசகர்கள், தங்கள் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்துவிட்டதாகவும், விண்டோஸ் எக்ஸ்பியை மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் எப்படி அதனை அப்டேட் செய்வது என்றும் கேட்டுள்ளனர். விண்டோஸ் வழக்கமாக தானாக அப்டேட் செய்து கொள்கிறது. இத்துடன் நாம் அப்டேட் பைல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின் ஒரு நாளில் பயன்படுத்த வசதி உள்ளதா? இல்லை எனில் எப்படி முழுமையாக அப்டேட் செய்வது எனக் கேட்டுள்ளனர். சில மாதங்களாகவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடிக்கடி ரீபார்மட் செய்வது நமக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தீர்வினைப் பார்க்கலாம்.

விண்டோஸ் அப்டேட்ஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மைக் காலத்தில் வெளியிட்ட விண்டோஸ் துணை சாதன வசதிகள், சரி செய்யப்பட்ட முக்கிய பிரச்னைகள்  (Hot fixes)பாதுகாப்பு வழிகள் (Security Fixes),  மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் (விண்டோஸ் மீடியா பிளேயர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவை) ஆகியவற்றை அளிக்கும் சேவை ஆகும். இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தீர்வுகள் நம்மை, அவ்வப்போது தாக்கும் புதிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறனை அளிக்கின்றன.

பொதுவாக, அப்டேட்ஸ் எனப்படும் மேம்படுத்தப்படும் செயல்பாட்டினை, இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் அப்டேட் சர்வீஸ் (Windows Updates)  என்பதன் மூலம்,  மைக்ரோசாப்ட் தானாகவே மேற்கொள்கிறது. ஆனால், இந்த மேம்படுத்தப்படுத்தலுக்கான கோப்புகளை, கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, பின்னர் நாம் விரும்பும் நாளில், இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள நாம் விரும்பலாம். அல்லது இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவற்றைப் பதியலாம். இத்தகைய சூழ்நிலைகள் பல நேரங்களில் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்த பின்னர், இந்த பைல்களை இயக்கி, விண்டோஸ் சிஸ்டத்தினை முழுமையாக நவீனமாக அமைத்துக் கொள்ளலாம்.  இந்த பைல்களை சிடியில் பதிந்து வைத்துக் கொள்வதற்கான  வழிகளை இங்கு காண்போம்.

1. முதலில் விண்டோஸ் அப்டேட் டவுண்லோடர்(Security Fixes), என்னும் பைலை http://wud.jcarle.com/ ProgramFiles.aspx  து என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும்.

2. அடுத்து http://wud.jcarle. com/ UpdateLists.aspx என்ற முகவரி யில் உள்ள தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதற்கான அப்டேட் பட்டியலை டவுண்லோட் செய்திடவும்.  உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சரியான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இங்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் அப்டேட்டிங் சரியாக நடைபெறாது.

3. அப்டேட்ஸ் பட்டியலை இறக்கி, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள் உங்கள் நோக்கத்திற்கான வேலையை மேற்கொள்ள தயாராகிவிட்டீர்கள். அடுத்து விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் பைலை இயக்கவும். இதற்கான விண்டோ கிடைத்தவுடன் ஓகே கிளிக் செய்து தொடரவும்.

4. இனி அப்டேட்ஸ் பட்டியல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது   "Compressed UL file installed என்றபடி ஒரு மெசேஜ் விண்டோ கிடைக்கும். ஓகே கிளிக் செய்து தொடரவும். இந்த நேரத்தில் சிலருக்கு  "Warning, .NET framework component is not installed"    என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.  .NET framework  என்ற இந்த வசதி கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்பதால் இந்த செய்தி தரப்படுகிறது. எனவே தயங்காமல், இடையே இதனையும் இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.microsoft.com /downloads/details.a spx?FamilyID=0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f5

5.  UL பைல் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் விண்டோவிற்கு மீண்டும் வருவீர்கள். அங்கு விண்டோஸ் அப்டேட்ஸ் செய்வதற்கான சில அடிப்படை வசதிகள் பட்டியலிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
6. உங்களுக்கு எந்த வசதிகள் எல்லாம் அப்டேட் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவை எல்லாவற்றையும் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தையும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் இதுவரை வந்தமைக்கான சர்வீஸ் பேக், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பல மோசமான பிழைகளைச் சரி செய்திட்ட புரோகிராம்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், டாட் நெட் பிரேம்வொர்க் போன்றவையும் இருக்கும்.

7. இனி, Change" பட்டனில் கிளிக் செய்து,இந்த பைல்கள் அனைத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு போல்டரில் சேமித்து வைக்கவும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள ட்ரைவில் இவற்றை வைக்க வேண்டாம். வேறு ஒரு ட்ரைவில், போல்டரில் வைத்திடவும்.

8. இப்போது எல்லாம் தயாராக உள்ளது. இனி Change"  பட்டனில் கிளிக் செய்திடவும். அனைத்து அப்டேட் பைல்களும், நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் பதியப்படும். பைல்களின் அளவு சற்று அதிகமாகவே இருப்பதால், சற்று கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.  அப்ளிகேஷன் விண்டோ வினையோ, இணைய இணைப்பையோ இந்த வேளையில் மூடக் கூடாது.

9. டவுண்லோட் முடிந்தவுடன், குறிப்பிட்ட போல்டரைத் திறந்து பார்த்தால், அப்டேட் செய்வதற்கான அனைத்து பைல்களும் இருப்பதனைப் பார்க்கலாம்.

10. இதில் உள்ளவற்றை, கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட, குறிப்பிட்ட அப்ளிகேஷன் பைலை டபுள் கிளிக் செய்தால் போதும். கம்ப்யூட்டரில் அவை அப்டேட் செய்யப்படும்.

11. இந்த பைல்களை ஒரு டிவிடியில் பதிந்து எடுத்துச் சென்று, வேறு எந்த கம்ப்யூட்டரிலும் அப்டேட்டிங் பணியை மேற்கொள்ளலாம்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Jan 1, 2011

தெரிந்து கொள்ளலாம் வாங்க...


கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன.

நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன.

இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா?

இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனைhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb963902என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள்.

சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும். தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம்.

இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns போலவே ஆகிய SilentRunners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis(http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும்.

புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும்.

இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை.

இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும்.

அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும்.

சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.


அன்புடன்
உங்கள்
மாறன்...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...




அன்புடன்
உங்கள்
மாறன்....
கருத்து சொன்னவர்கள் (Recently):