Dec 25, 2010

நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை...

  உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ...  அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...  'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான  விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு,  தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது  தாமதமாக வர...(!?)  அல்லது  வந்த வலி குறைய...  வேண்டுமானால்,  பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!



(Courtesy:- Safety Letter, Saline Water Conversion Corporation, Saudi Arabia.)

1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.

2#      திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.

3#   சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )

4#      உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின்  விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள )  ஏதாவது ஒரு நிலையான  கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

5# விசைப்பலகை,  நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும்  அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும். 

6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

7#  முழங்கை கோணம் தோராயமாக  90°  இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

8#     'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.

9#   முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி  சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.

10#     ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால்,  உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2  நிமிடங்கள் வரை 
இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது.

அன்புடன்
உங்கள்
மாறன்....

Dec 23, 2010

விண்டோஸ் 7 மாறப் போறீங்களா.....

விண்டோஸ் 7 சிஸ்டம் மாற விரும்புபவர்கள், முதலில் எந்த எடிஷனுக்கு மாறப் போகிறார்கள் என்பதனை முடிவு செய்திட வேண்டும். குறைந்தது மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இந்த மூன்றில் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சற்று விலை குறைந்தது. அல்டிமேட் விலை அதிகம். விலைக்கேற்ற வகையில் 

கூடுதல் வசதிகள் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தனி நபர் பயன்பாட்டிற்கு, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனே போதுமானது. மற்ற இரண்டும் பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதனை முடிவு செய்த பின்னரே, 32 அல்லது 64 பிட் சிஸ்டம் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு? கீழே காணலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரில், 64 பிட் இணையான சிபியு ப்ராசசர் இருப்பின், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷன் பதிய வேண்டும். இதற்கு கம்ப்யூட்டருடன் வந்த குறிப்புரையில் சிபியு குறித்த தகவல்களைப் பார்க்கலாம். அல்லது கம்ப்யூட்டர்  வழங்கியவரிடம், 64 பிட் செக்கர் போன்ற புரோகிராம்களை  இயக்கிப் பார்க்கலாம்.

2. 32 பிட் சிஸ்டத்தில்   ராம் மெமரி யூனிட் 4 கிகா பைட்  வரையறையுடன் கிடைக்கிறது. அதாவது, இன்னும் கூடுதலாக ராம் மெமரியை நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும், 4 கிகா பைட் மெமரி மட்டுமே செயல்படும். இதனை விலக்கி, கூடுதலாகச் செயல்பட வைக்க, நிறைய செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாகப் பயன்படுத்துவோருக்கு அது இயலாது. இந்த 4 கிகா பைட் ராம் மெமரியும் முழுமையாக விண்டோஸ் இயக்கத்திற்குக் கிடைக்காது. வீடியோ கார்ட் போன்ற சாதனங்கள் இந்த ராம் மெமரி இடத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றன. மைக்ரோசாப்ட், 64 பிட்  விண்டோஸ் 7 எடிஷனில்,   ராம் மெமரியில் பயன்பாட்டிற்குக் கிடைப்பதனைத் தானாக வரையறை செய்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனுக்கு 16 ஜிபி, அல்டிமேட் மற்றும் புரபஷனல் எடிஷனுக்கு 192 ஜிபி என வரையறுத்துள்ளது.

3. 64 பிட் எடிஷனில் பல கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. டேட்டா எக்ஸிகியூஷன் பாதுகாப்பு மற்றும் கெர்னல் பாதுகாப்பு ஆகியன தரப்பட்டுள்ளன. இதனால் நம் பயன்பாட்டின் போது என்ன தடை ஏற்பட்டாலும், இழப்பு எதுவும் நேராது.

4. சில தடைகளும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் உள்ளன. இது சில பயனாளர்களுக்கு அதிகச் சிக்கலைக் கொடுக்கின்றன. விண்டோஸ்  7 சிஸ்டத்தின், 64 பிட் எடிஷனில், 16 பிட் அப்ளிகேஷன்கள் இனி இயங்கவே இயங்காது. எனவே பல ட்ரைவர் அப்ளிகேஷன்கள் மாற்றப்பட வேண்டும். சில ஹார்ட்வேர் சாதனங்களும் இதனுடன் இணைந்து இயங்காத நிலை ஏற்படும்.

5. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான 32 பிட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் தொடர்ந்து இயங்கும்.  ஆனால் சில அப்ளிகேஷன்கள் இயங்கா நிலை அல்லது  (32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வேகத்தைக் காட்டிலும் ) மிக மிக மெதுவாக இயங்கும் நிலை ஏற்படும்.

6. விண்டோஸ் 64 பிட் எடிஷன்களில், விண்டோஸ் 7 இன்ஸ்டலேஷன் ஹார்ட் டிரைவில் சற்றுப் பெரிய அளவில் அமையும். விண்டோஸ் 7, 32 பிட் எடிஷன்களுக்கு, மைக்ரோசாப்ட் 16 கிகா பைட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது. 64 பிட் எடிஷன்களுக்கு 20 கிகா பைட் 
இடம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலே கூறியுள்ள தகவல்கள் இன்னும் உங்களுக்கு ஒரு தெளிவைத் தரவில்லை என்றால், உங்களிடம் உள்ள, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும், கட்டாயமாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களின் தன்மைகளைக் குறித்துக் கொண்டு, பின் மேலே கூறப்பட்டுள்ளவற்றை இணைத்துப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.
இருப்பினும் சுருக்கமாக ஒரு முடிவிற்கு வரலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிபியு, விண்டோஸ்  64 பிட் எடிஷனுக்கு இணைவாக இயங்குவதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியை 4 கிகாபைட் அல்லது கூடுதலான அளவிற்கு உயர்த்துவதாக இருந்தால், 64 பிட் விண்டோஸ் எடிஷன் இன்ஸ்டால் செய்திடலாம்.

ஆனால், நீங்கள் இன்னும் பழைய 16 பிட்  சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அல்லது அந்தக் காலத்து கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் இருந்தால், விண்டோஸ் 32 பிட் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னும் தெளிவு வேண்டும் என்றால், கீழ்க் காணும் தலைப்புகளில் இணையத்தில், மைக்ரோசாப்ட் தளங்களில் கிடைக்கும் குறிப்புகளைப் படிக்கலாம்.
தலைப்புகள்:
Windows 7 Upgrade Advisor
Windows 7 Compatibility Center
Windows 7 Application Compatibility Lista

அன்புடன்
உங்கள்
மாறன்....

Dec 22, 2010

ஓபன் ஐடி : எல்லா பாஸ்வோர்டுகளுக்கும் தல...

நாம் பிளாக்கரில் பின்னூட்டம் இடும் இடத்தில் காணப்படும் ஓபன் ஐடி பற்றிபலருக்கு தெரியாது.

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.

அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.

பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.
இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகி
விடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.
இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் 'ப்ரீ யுவர் ஐடி'.
'ஓபன் ஐடி டாட் நெட்' இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.
வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.
உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.
ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.
நீங்களும் இங்கே www.openid.net சென்று பதிந்து கொள்ளுங்கள். பதிவை பகிர்ந்த நபருக்கு நன்றி.
அன்புடன்
உங்கள்
மாறன்...

Dec 21, 2010

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்....




கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது.http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.

அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.

நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது

அன்புடன்
உங்கள்
மாறன்...

Dec 20, 2010

கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்.....

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator)என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. 

இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.http://www.montpellier-informatique.com/predator/en/index.php?n=Main.DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். 

பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.


இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். 

எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். 

இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்..

அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr

Dec 13, 2010

புளூடூத் என்ற பெயர் யார் தந்தது...


900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பகிர்வை பகிர்ந்த நண்பருக்கு அன்பருக்கு நன்றி.


அன்புடன்
உங்கள் 
மாறன்...

கருத்து சொன்னவர்கள் (Recently):