நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்களில் கணினியில் படம் மற்றும் பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் ஒவ்வொன்றிலும் ஒரு வித பிடிப்பு அனைவருக்கு இருக்கிறது. அப்படி உள்ள ப்ளேயர்களில் எஸஎம் ப்ளேயர் SM Player ஒரு மிகவும் வேகமான ப்ளேயர் என்பதில் வேற்று கருத்து இருக்க முடியாது. இந்த ப்ளேயர் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது ஒரு சிறப்பு. அது மட்டுமில்லாமல் விண்டோஸ் மற்றும் லினக்ஸில் இயங்க கூடியது. இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி இந்த மென்பொருள் கூடிய வரை அனைத்து வகையான ஆடியோ வீடியோ கோப்புகளை கையாள்கிறது.
உங்களிடம் விண்டோஸ் நிறுவப்பட்ட பிறகு உங்கள் விண்டோஸில் என்ன சிடி கீ நிறுவினோம் என்று தெரியவில்லையா அல்லது உங்களின் விண்டோஸ் கீ தொலைந்து விட்டதா கவலை வேண்டாம். உங்கள் விண்டோஸ் இந்த மென்பொருளை தரவிறக்குங்கள். நிறுவ வேண்டிய தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இந்த மென்பொருளை திறந்தால் போதும் உங்கள் விண்டோஸ் கீ மற்றும் ஆபிஸ் கீ என்ன நிறுவி உள்ளீர்கள் என்று உங்களுக்கு தெரிந்து விடும்.. இதன் மூலம் இதை ஒரு நோட் பேட் கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
சுட்டி இது இயங்கும் தளங்கள்
விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, ஆபிஸ் எக்ஸ்பி , ஆபிஸ் 2003 ஆபிஸ் 2007.
கூகிளின் பிகாஸா வலைத்தளத்திலிருந்து ஒரு ஆல்பத்தையோ அல்லது மொத்த ஆல்பத்தையோ தரவிறக்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்களில் இயங்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருள் தரவிறக்க
சுட்டி நீங்கள் வெளியில் போய் காசு கொடுத்து கார் கற்றுக் கொள்ளாமல் நமக்கு ஒரு ஆசிரியர் உதவியுடன் கணினி வழியாக கார் ஒட்ட கற்றுக் கொடுத்தால் எப்படியிருக்கும். அதற்கு இந்த தளங்கள் உதவுகிறது. இந்த தளத்தில் சென்று ஆசிரியரை தேர்ந்தெடுத்து கொண்டால் நீங்கள் கார் எப்படி ஓட்ட வேண்டும் எந்த நிறுத்தக் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.
இணையத்தள சுட்டி ஒன்று இணையத்தள சுட்டி இரண்டு உங்கள் ஆண்டி வைரஸ் சரிவர இயங்குகிறதா என்று தெரிந்து கொள்வது இதோ ஒரு எளிய வழி கீழுள்ள வழிமுறைகளின் படி இயங்கினால் போதும்.
முதலில் நோட்பேடை திறந்து கொள்ளுங்கள்.
பிறகு கீழுள்ள சிகப்பு வண்ணமிட்ட வரியை காப்பி செய்து கொள்ளுங்கள்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* பிறகு "
checkantivirus.com" என்று பெயர் சூட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்பு இயங்கு நிலையில் இருந்தால் நீங்கள் கோப்பை சேமித்து வெளி வந்த உடனே உங்கள் கணிணியில் வைரஸ் இருக்கிறது என்று காட்டிக் கொடுத்து விடும்.
அன்புடன்
உங்கள்
மாறன்...