Dec 29, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நம்மோடு இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருந்த வருசம் 2009 நம்மிடம் விடை பெற்று, நான் போயிட்டு வர்ரேன், என் தம்பி 2010 வர்ராறு, அவர் ரொம்ப நல்லவரு, வல்லவரு.

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்கும்னு, கையிலிருக்கிற உடுக்கையை ஆட்டி, குறி சொல்லிட்டு போறார்.

தோழமையே!! ஒவ்வொரு வருடமும் மிக நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தானே நாம் ஆரம்பிப்போம். வரும் 2010 வருடமும் வளமான வாழ்வை தர அந்த ஆண்டவனை மனதார வேண்டுகிறோம்.

தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த 2010 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்து சென்ற 2009 ஐ பொது, அரசியல், சினிமா எனும் அடிப்படையில் பார்த்து முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Dec 28, 2009

கம்ப்யூட்டர் இன்ஜினியரின் கந்தர் ஷஷ்டி கவசம்....

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

எழுதி அனுப்பிய வலையுலக நண்பருக்கு நன்றி, இது எனது தயாரிப்பு இல்லை. நன்றாக இருந்ததே என்று பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவு தான்.........

அன்புடன்
மாறன்...

Dec 26, 2009

வைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்

WiFi என்ற Wireless Fidelity இப்பொழுது பிரபலம்.802.11a,802.11b,802.11h எனப் பல வரையறைகள் இத்தொழில் நுட்பப் பயன்பாட்டில் வெளியாகியுள்ளன.802.11gஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும்,அக்சஸ் பாயிண்டுகளும்(Access Point)  கட்டுப்படியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க் பயன்படுத்த முனைகின்றனர்.

வயர்லெஸ் நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சம் கவனிக்கப்பட வேண்டியது.அதன் பாதுகாப்பு சரியில்லையெனில்,வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து,நாசத்தை ஏற்படுத்த முடியும்.உங்கள் நெட்வொர்க்கை பயனபடுத்தி மற்றொரு நெட்வொர்க்கை தாக்க முடியும்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.அதற்கான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.
  • ஆன்டனாவை சரியான இடத்தில வையுங்கள்.உங்களுடைய நெட்வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனதில் வையுங்கள்.நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றினால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.
  • Wireless Encryption Protocol(WEP)என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது.அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகோலை செயல் இழக்கச் செய்வது வழக்கம்.எனவே அதைச் செயல்பட வையுங்கள்.எனவே உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது.
  • அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifier என்ற வசதி உண்டு.ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம்.எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள்.எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள். 
  • Dynamic Host configuration Protocol G DHCP என்ற வசதியை செயல் இழக்கச் செய்து விடுங்கள்.எனவே ஹேக்கர்களும்,கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான IP முகவரி,சப்நெட் மாஸ்க்(Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது.TCP/IP என்றால் Transmission Control Protocol/Internet Protocol எனப் பொருள்.
  • Simple Network Management Protocol G SNMP என்ற செட்டிங்களை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்;அல்லது மாற்றி விடுங்கள்.இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.
  • எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக்சஸ் பாயிண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு.உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால்,உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள்.இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா? 

Read more: http://www.maran.co.nr

அன்புடன்
மாறன்....

Dec 23, 2009

வடக்கா? வேண்டாம்....


இந்தியா ஆன்மீகத்தில் மிகச் சிறந்த நாடு. நம் முன்னோர்கள் ஏற்படுத்திய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிக்கோள் உடையதாகும். அந்தப் பழக்கத்தை கடைபிடிக்க ஒரு கதை சொல்லப்படும். இதன் நோக்கம் சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அந்தப் பழக்கத்தைக் கடைபிடிப்பதால் நாம் அடையும் அனுகூலங்கள் பல. இவ்வகையான பழக்க வழக்கங்களில் ஒன்று தலையை வட திசையில் வைத்துப் படுப்பது தவறு என்பது. இதற்கு ஒரு கதையும் கூறுவர்.
1. வட திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏன்? வடதிசையில் தலையை வைத்துப் படுக்கப்போன பேரனைப் பார்த்து, "அப்படிப் படுக்காதே, அது தவறு. மற்ற திசையில் தலை வைத்துப் படு" என்றாள் பாட்டி. "ஏன் படுத்தால் என்னவாம்?" என்று கேட்டான் பேரன். "அப்படிப் படுத்தால் உன் தலை காணாமல் போய்விடும்" என்று சொல்லி ஒரு கதையும் சொன்னாள்.
பார்வதி தேவி ஒரு சமயம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. வீட்டைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் மண்ணால் ஒரு பொம்மை செய்து அதற்கு உயிர் கொடுத்துக் காவலுக்கு வைத்தாள். யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிப் போனாள். சிறிது நேரத்தில் சிவன் வந்தார். அவர் வீட்டிற்குள் செல்வதைக் காவல் காத்திருந்த பையன் தடுத்தான். சிவன் என்ன கூறியும் உள்ளே செல்ல விடவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் அந்தப் பையன் தலையை வெட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். திரும்பி வந்த பார்வதி தேவி பையன் இறந்து கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள். சிவனை விசாரித்தபோது அவர் நடந்ததைச் சொன்னார். நான் உருவாக்கிய பையனை அழித்து விட்டீர்களே! அவனை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்று பிடிவாதம் செய்தாள். உடனே சிவன் பூத கணங்களைக் கூப்பிட்டு எவனொருவன் வட திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறானோ அவன் தலையைக் கொய்து எடுத்து வாருங்கள் என்று பணித்தார். பூதகணங்கள் தேடி அலைந்ததில் ஒரே ஒரு யானை அவ்விதம் படுத்திருப்பதைப் பார்த்து அதன் தலையை வெட்டி கொண்டு வந்தனர். சிவன் அந்த யானைத் தலையைப் பையன் உடம்பில் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார். அவர்தான் பிள்ளையார். ஆகையால் நீ வடதிசையில் தலை வைத்துப் படுத்தால் தலைக்கு ஆபத்து என்று பாட்டி பேரனுக்குச் சொன்னாள்.
இதை நாம் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக ஆராய்வோம். நாம் வலு உள்ளவர்களாக இருப்பதற்குத் தேவையான இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் முதலியவை சிறிய அளவில் நம்முடைய உடலில் உள்ளன. பூமியில் 0-40 பாகைக்கு உட்பட்ட இடங்களில் பூமியின் காந்தப் புல கிடைத்தளக் கூறு கணிசமான அளவில் உள்ளது. அதன் அளவு பூமத்திய ரேகையில் 0.38 ஆயர்ஸ்டெட் (Oersteds - C.G.S.Units) ஆகவும் 40 பாகையில் 0.31 ஆயர்ஸ்டெட் ஆகவும் உள்ளது. அதாவது ஒரு ஏலேடு காந்தமுனையை (unit pole) இந்த 0-40 பாகைக்குள் வைத்தால் அதனுடைய தன்மைக்கு ஏற்ப கவர்ச்சி அல்லது விலக்கு விசை 0.38 லிருந்து 0.31 டைன்ஸ் (dynes) வரை அந்த இடத்தின் அட்சக்கோட்டைப் பொறுத்து இருக்கும். காந்தப் புலக் கோடுகளின் விசை பூமியின் தெற்கு வடக்காகச் செல்லுகிறது. மனிதன் வடக்கு நோக்கித் தலை வைத்துத் தூங்கும் போது இந்த விசைக்கோடுகள் மனிதனின் உடல் மூலமும், செரிப்ரம்(ceribrum) வழியாகவும் செல்கிறது. ஒவ்வொரு கணத்திலும் உடம்பில் உள்ள இரும்பு, கோபால்ட், நிக்கல் இவை காந்தம் ஆக்கப்படுகி்றன (get magnetised). சிறிது நேரத்தில் நம் உடலே சிறு சிறு காந்தங்கள் உள்ளதாக ஆகிவிடுகிறது. இந்த சிறு காந்தங்கள் எல்லாம் சேர்ந்து காந்தத் திருப்புத்திறன் 'எம். (of magnetic moment M) உடைய காந்தமாகிவிடுகிறது. இதன் அளவு காந்த முனை வலிமையும் காந்தத்தின் நீளத்தின் பெருக்குத்தொகையும் ஆகும் (is the resultant of pole strength multiplied by the length of the magnet). இதனால் மனித உடலானது எம் எச் டைன்ஸ் (MH dynes) காந்த விசைக்கு உட்படுகிறது. 'எச்' என்பது பூமியின் காந்தப் புலக் கிடைத்தளக் கூறு. அதாவது காந்தப் புல செறிவு. (Horizontal component of earth's magnetc field).
வட திசையில் தலை வைத்துத் தூங்கும்போது அவன் காந்த விசைக்கோட்டுடன் 0 பாகை ஏற்படுத்துகிறான். ஆகையால் விசையின் கூறு தேகத்தின் வழியே எம் எச் கோசைன் 0 ஆகும். கோசைன் 0 = 1 ஆகையால் முழுமையாக எம் எச் டைன்ஸ் விசை தேகத்தின் செரிப்ரம் வழியாகச் செல்லும். அதாவது அவன் சேமித்து வைத்துள்ள சக்தியிலிருந்து ஒவ்வொரு கணமும் காந்த விசையை எதிர்த்து, உடம்பைச் சமனிலையில் வைக்க வேண்டி, எம் எச் டைன்ஸ் செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு முறையும் உடலின் சேமிப்பு சக்தியில் எம் எச் டைன்ஸ் இழக்க வேண்டியுள்ளது. வடதிசையில் தலை வைத்துப் படுப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லாமல் நமது சக்தி வீணாகிறது. தென் திசையில் தலை வைத்துப் படுக்கும்போது உடலின் வழியாகச் செல்லும் விசையின் கூறு எம் எச் கோசைன் 180 ஆகும். இப்பொழுது இவன் இயங்கும் காந்த விசைக்கோட்டிற்கு எதிராகப் படித்திருப்பதால் கோசைன் 180 = -1 ஆகும். அவன் ஒவ்வொரு கணமும் - எம் எச் டைன்ஸ் இழக்கிறான். அதாவது எம் எச் டைன்ஸ் அவன் உடலில் கூடுகிறது. ஆகையால் தெற்கில் தலை வைத்துப் படுப்பது அவனுக்கு சாதகமாகிறது.
கிழக்கு மேற்காகப் படுக்கும் பொழுது இயங்கும் விசையின் கூறு எம் எச் கோசைன் 90 அல்லது எம் எச் கோசைன் 270 ஆகவும் ஆகிறது. இதன் அளவு சூன்யம் (0). ஏனென்றால் கோசைன் 90 அல்லது கோசைன் 270 = 0 இதனால் மனிதனுடைய உடல் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் உட்படுவதில்லை. உயர் அட்சக்கோட்டில் வாழும் ஜனங்களின் மீது இந்த காந்த விசை பாதிப்பதில்லை. ஏனென்றால் அதன் அளவு மேலே போகப்போகக் குறைந்துவிடுகிறது. அதன் அளவு U.K.வில் 0.18 சி.ஜி.எஸ். யூனிட் ஆகவும் துருவங்களில் சூன்யமாகவும் ஆகிவிடுகிறது. இதிலிருந்து அதிகமான (maximum) காந்த விசையால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு ட்ராபிக்ஸ் (Tropics)க்கு இடையில் வசிக்கும் ஜனங்கள்தான் என்று தெரிகிறது. இந்தியா இந்த பாகத்தில் இருக்கும் ஒரு தேசமானதால், நம் முன்னோர்கள் மிகவும் சரியான, கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் நோக்கம் உடலில் இருந்து எள்ளளவு சக்தியும் ஒரு பலனில்லாமல் வீனாக்கப்படக்கூடாது என்பதே இந்த கோட்பாட்டிற்கு காரணம். படித்தவர்களுக்கு, அதுவும் விஞ்ஞானம் படித்தவர்களுக்குத்தான் மேற்சொன்ன விளக்கம் புரியும். நம் முன்னோர்கள் படித்தவன், படிக்காதவன், எழுத்தறிவு இல்லாதவன் என்று பாரபட்சம் பார்க்காமல் யாவரும் பயனடைய வேண்டிக் கதைகள் மூலம் சில வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். நம் முன்னோர்கள் நோக்கம் மனிதன் பலனடைய வேண்டும் என்பதே தவிர, அந்தத் தகவல் எந்த முறையில் சொல்லப்படுகிறது என்பது அல்ல. இதிலிருந்து நம் முன்னோர்கள் எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக நல் வாழ்விற்கான கோட்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது.
மேற்கூறிய கதை போல்தான் எல்லாக் கதைகளுக்கும் ஓர் அறிவுபூர்வமான உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று நாம் உணர வேண்டும். எல்லாவற்றிற்கும் நமக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தெரியாவிட்டாலும், அவற்றீன்படி நடக்க முடியாவிட்டாலும், அவை எல்லாம் நம் நன்மை கருதியே சொல்லப்பட்டன என்று அறிந்து உணர்ந்தால், அதுவே போதும்.


Read more: http://www.maran.co.nr

அன்புடன்
மாறன்...

Dec 16, 2009

ஸ்டார்ட் மெனுவை நகர்த்த...


நமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்
ஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து
இங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும்.


இந்த சின்ன ப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.
இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


உங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய
டிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு
சிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்
நகர்த்துங்கள்.


அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்
கொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்
பெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.


பெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்
மின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்
Steps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்
மெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.


கீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம் வைத்துள்ளதை கவனியுங்கள்










நீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்
கீழே உள்ள விண்டொவில் காணுங்கள்

இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில் வைத்துள்ளேன்.



இப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால் Stop செய்யலாம். பயன்படுத்திப் பாருங்கள்

Read More www.maran.co.nr

நன்றி
மாறன்

தங்கம் விலை எகிறக் காரணம் என்ன!!!


ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000 ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.


"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்' என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.


இதுகுறித்து, ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.


இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது.


அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.




தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.


ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.


20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.




தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.


அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.




மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.




சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது.


நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

Dec 11, 2009

நாட்டைத் துண்டாட அனுமதியோம்...

"தெலுங்கானா மட்டும் பிரிச்சா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்!
ராயலசீமா கேப்போம்னு" ஒரு கோஷ்டி,

"உத்தராந்த்ரா(வடக்கு ஆந்திரா) தந்தே ஆகணும்னு" ஒரு கோஷ்டி,

இதுல ரொட்டிக்கு சண்டை போட்டுகிட்ட பூனைகள் மாதிரி
ஹைதராபாத் எங்களுக்கேங்கறாங்க சிலர், சிலரோ ஹைதையை
யூனியன் டெரிடரி ஆக்கிடுங்கன்னு சொல்றாங்க. ஹைதை
எங்கே? யாருக்கு? என்னாவாக போகுதுன்னு பாக்கணும். :((

காங்கிரஸ், பிரஜாராஜ்யம், தெலுகு தேசத்தை
35 எம்பிக்கள் ராயலசீமாவுக்காக தனது பதிவியை ராஜினாமா
செஞ்சாங்கன்னு செய்தி இன்னைக்கு மதியம் டீவில் வந்துச்சு.

தெலுங்கானா கொடுத்தா கம்மம் மாவட்டத்தில் இருக்கும்
பத்ராசலம் கோவிலும், கோதாவரியும் தமக்கே சேரணும்னு
கரையோர ஆந்திரா கேட்டதாக டீவில காட்டினாங்க.


என்ன கொடுமைடா சாமி இதுன்னு பாத்துகிட்டு இருக்கும்போது
தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து இன்னுமும்
நொந்துக்க வேண்டியதாச்சு. புதுச்சேரியிலிருந்து காரைக்காலை
பிரிச்சு தனி யூனியன் டெரிடரியாக கொடுக்கணும்னு
ஆரம்பிச்சிருக்காங்க. மஹாராஷ்ட்ரத்தில் விபர்தாவை
தனியா பிரிக்கணுமாம்!!!


இதே போக்குல போனா இந்தியா எனும் நாடு இருந்துச்சுன்னு
சொல்லிக்கறா மாதிரி ஆகிடும் போல இருக்கே. இப்ப
தனி மாநிலம் வேணும்னு கேக்கறவங்க, பின்னாளில்
மாநிலமா இருந்து போரடிச்சு போச்சு, எனக்கு பிரதம
மந்திரி ஆகணும்னு தனி நாடு கேட்டு போராடுவாங்க.


தெலுங்கானா வரும்னு கண்டிப்பான உத்திரவாதம்
ஏதும் காங்கிரஸ் கொடுக்கலை என்பது என் கருத்து.
சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால்
மாணவர்கள் இன்னமும் வன்முறையில் ஈடுபடுவாங்க.
அதை தடுத்து நிறுத்தவே தெலுங்கானா வரும்னு
சொல்லியிருக்காரு. வரும்,வராது என்பது போலன்னு
வெச்சுக்கலாம்.

தெலுங்கானா எனும் மாநிலம் அமைய எடுத்து வைத்திருக்கும்
முதல் அடி இதுன்னு காங்கிரஸ் சொல்லுது. மாநிலம்
உருவாக எத்தனை நாளாகும்னு சொல்ல முடியாதுன்னும்
சொல்லியிருக்காங்க. இந்த வெண்டைக்காய் கொழ கொழ
மாதிரி இருக்கறதை புரிஞ்சிக்காமலா TRS கட்சி தனது
போராட்டத்தை கைவிட்டுச்சு!!!!!! இன்றைக்கு நடந்த பேரணியை
"வெற்றிப் பேரணியா" நடத்தினாங்க.

இன்னைக்கு காலேல பேப்பர் படிச்சபவே புரிஞ்சிருச்சு
இது ஒரு கண் துடைப்புன்னு. டீவி 9 சேனலில்
ஒருவர் சொன்னது தான் கொடுமையா இருந்துச்சு.
"50 வருட போராட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கு.
இதுவரை அரசியல்வாதிகள் மட்டுமே போராடி
எதுவும் செய்ய முடியலை. இந்த முறை மாணவர்கள்
அதை செஞ்சு காட்டியிருக்காங்க!!!""
இது தவறான செய்தியாக மாணவர்களுக்கு போய்ச்
சேருமேன்னு தான் கவலையா இருக்கு.

போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் பள்ளிகள்,
கல்லூரிகள் மூடப்படுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இன்னும் எத்தனை உண்ணாவிரதமோ, எத்தனை
பந்த்களோ,போராட்டங்கள் இதற்கு விலையாகும்
மாணவர்களின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி??????
 
கருத்து சொன்னவர்கள் (Recently):